ஒட்டுண்ணிப் புழுவெதிரி
Appearance
ஒட்டுண்ணிப் புழுவெதிரிகள் (Antihelminthics) ஒட்டுண்ணிப் புழுக்களுக்கு எதிராகத் தொழிற்பட்டு அவற்றை உணர்வியக்கச் செய்து அல்லது உயிரிழக்கச் செய்து ஓம்புயிரின் உடலில் இருந்து அகற்ற உதவும் மருந்து வகைகளைக் குறிக்கும். ஒட்டுண்ணிப் புழுக்கள் பெரும்பாலும் குடலில் செறிந்து வாழ்வதால் இவற்றை குடற்புழுவெதிரி என்றும் அழைக்கலாம், எனினும் உடலின் ஏனைய பாகங்களிலும் ஒட்டுண்ணிப் புழுக்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.[1] இவை புழுக்களை உயிரிழக்கச் செய்தால் ஒட்டுண்ணிப் புழுக்கொல்லிகள் (vermicides) என்றும் உணர்வியக்கச் செய்தால் ஒட்டுண்ணிப் புழுவகற்றிகள் (vermifuges) என்றும் அழைக்கப்படும்.
மருந்தியல் வகுப்புகள்
[தொகு]- பென்சிமிடாசோல் (Benzimidazoles):
- அல்பென்டாசோல் (Albendazole) – இழைப்புழுக்கள், வட்டப்புழுக்கள், சாட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், கொக்கிப்புழுக்கள் என்பனவற்றுக்கு எதிராகத் தொழிற்படக்கூடியவை.
- மெபென்டாசோல் (Mebendazole)– இழைப்புழுக்கள், வட்டப்புழுக்கள், கொக்கிப்புழுக்கள் என்பனவற்றுக்கு எதிராகத் தொழிற்படக்கூடியவை.
- தயபென்டாசோல் – வட்டப்புழுக்கள், கொக்கிப்புழுக்கள் என்பனவற்றுக்கு எதிராகத் தொழிற்படக்கூடியவை.
- ஃபென்பென்டாசோல் – குடற்புழுக்களுக்கு எதிராகத் தொழிற்படக்கூடியவை.
- திரிக்லாபென்டாசோல் – ஈரல் தட்டைப்புழுக்கு எதிராகத் தொழிற்படக்கூடியவை.
- ஃபுளுபென்டாசோல் – பெரும்பாலான குடற்புழுக்களுக்கு எதிராகத் தொழிற்படக்கூடியவை.
- அபாமெக்டின் – நாடாப்புழுக்கள் தவிர பெரும்பாலான குடற்புழுக்களுக்கு எதிராகத் தொழிற்படக்கூடியவை.
- டையெதய்ல்கார்பமசின்– யானைக்கால் நோய் உண்டாக்கும் புழுக்கு எதிரான மருந்து
- நிக்லோசமைட் – நாடாப்புழுக்களுக்கு எதிராகத் தொழிற்படக்கூடியவை.
- இவெர்மெக்டின் – நாடாப்புழுக்கள் தவிர பெரும்பாலான குடற்புழுக்களுக்கு எதிராகத் தொழிற்படக்கூடியவை.
- சுராமின்
- பைரன்டெல் பாமோவேட் – பெரும்பாலான வட்டப்புழுக்களுக்கு எதிரானவை.
- லெவாமிசோல்
- பிராசிகுயின்டெல்
- ஒக்டாடெப்சிபெப்டைட்
- அமினோஅசெட்டோனைட்ரில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Charles R. Craig Robert E. Stitzel (2003). Modern Pharmacology With Clinical Applications.