நாடாப்புழு
நாடாப்புழு புதைப்படிவ காலம்: | |
---|---|
Taenia saginata | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Cestoda |
உள்வகுப்புகள் | |
நாடாப்புழு (tapeworms) Cestoda என்பது தட்டைப்புழு தொகுதியில் உள்ள ஒட்டுண்ணிப் புழு வகுப்பில் புழுவாகும். இந்த புழு இனத்தின் பெரும்பாலானவை, குறிப்பாக, இயூசெசுட்டிடா உள்வகுப்பில் உள்ளவை முதிர்ந்ததும் நாடா வடிவத்தை அடைகின்றன.நாடாப்புழுவின் உடல் பல துண்டங்களால் ஆனதாகும். ஒவ்வொரு துண்டமும் பலமுட்டைகள் உள்ள தொகுப்பாகும். இவை வழக்கமாக தொடர்ந்து சூழலில் வெளியிடப்பட்டு, உயிரிகளைத் தொற்றுகின்றன. மற்றொரு உள்வகுப்பான செசுட்டாரியா பெரும்பாலும் மீன்களையே தொற்றுகின்றன.
பெரும்பாலான குழந்தைகள் சாியாக சாப்பிடாததற்கு காரணம் , அவா்களின் வயிற்றில் நாடாப்புழுக்கள் வளா்ந்து இருப்பதால் எனக் கருதப்படுகிறது. நாடாப்புழுக்கள் வெள்ளை நிறத்தில் நெளிந்து நெளிந்து நீண்டு காணப்படும்.குழந்தைகளுக்கும் , பொியவா்களுக்கும் வயிற்றில் நாடாப்புழு , பூச்சிகள் முதலியன உணடாகுவதற்கு காரணம் மலம் சாியாக வெளியேறாத காரணமேயாகும்.இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலியை உண்டாக்கும்.
வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேம்புக் கசாயம் கொடுக்க வேண்டும். அதன் கசப்பு தன்மை காரணமாக நாடாப்புழுக்கள் அழிந்து , மலத்தின் முலம் வெளியேறி விடும்.வயிற்றில் நாடாப்புழு இருந்தால் நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Merck Manual of Medication' Information, Second Home Edition, Online Version, Tapeworm Infection 2005
- Mayo Clinic Website on infectious diseases, Mayo Clinic - Tapeworm Infection, 2006
- Medline Plus - Taeniasis (tapeworm infection)
- University of South Carolina - School of Medicine - Cestodes (tapeworms)