ஒகு கதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒகு கதா அல்லது ஒக்கு கதா என்பது ஒரு பாரம்பரிய நாட்டுப்புற பாடல் வடிவில் சொல்லப்படும் கதைப்பாடல்களாகும்., இது இந்துக் கடவுள்களான மல்லனா, பீரப்பா மற்றும் எல்லம்மாவின் கதைகளைப் பாடல்கள் வழியாக புகழவும், பரப்பவும் பயன்படுகிறது . [1] இது குருமா ( குருபா ) மற்றும் யாதவ சமூகத்தினரிடையே பெருமளவில் பாடப்படுகிறது , அவர்கள் சிவபெருமானை (மல்லிகார்ஜுனா என்றும் அழைக்கப்படுவார்கள்) புகழ்ந்து பாடுவதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். [2] இந்த பாரம்பரியத்தை விரும்பும் மற்றும் சடங்குகளைச் செய்யும் சமூகம் தங்கள் குல தெய்வங்களின் மற்றும் முன்னோர்களின் கதைகளை பாடல்களின் வடிவத்தில் விவரித்து சொல்வது வழக்கமாகும் . ஒகுகள் யாதவர்களின் பாரம்பரிய பூசாரிகளாகவும் மற்றும் மல்லண்ணாவின் திருமணத்தை பிரமராம்பாவுடன் நடத்தும்  புரோகிதர்களாகவும் உள்ளனர் .

சொற்பிறப்பியல்[தொகு]

ஜக்கு என்று அழைக்கப்படும் (டமாறம்) கருவியைப் பயன்படுத்தி மல்லண்ணா அல்லது மல்லிகார்ஜுன சுவாமியைப் பற்றி பாடப்படும் கதைகளே ஒகு கதா என்று அழைக்கப்படுகிறது. தமிழில் வில்லுப்பாட்டு முறையில் கதை பாடல்கள் சொல்லப்படுவது இதற்க்கு ஒத்ததே. மல்லண்ணாவின் திருமண திருவிழாக்களின் தொடக்கத்தில் இந்த கதைப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.

ஒகு கதாலுவின் நிறுவனராக  ஸ்ரீ. வல்லம் பெத்த வீரையா கருதப்படுகிறார். அவருக்கு பின்னர்  அவரது மகன் விஸ்வ விக்யதா ஒக்கு கதா சர்வ பூமுலு வல்லம் சாத்தையாவால் கொம்மரவல்லி மல்லனா, எல்லமா தேவி, நல்ல போச்சம்மா தேவி பற்றிய கதைகள், வசனங்கள், மற்றும் பாடல்கள் உருவாக்கப்பட்டு ஆந்திரா எங்கும் பரப்பப்பட்டது..[சான்று தேவை]

வல்லம் சாத்தையாவிற்கு பிறகு அவரது  மகன்கள் வல்லம் வீரேசம் யாதவ் மற்றும் வல்லம் மகேஷ் யாதவ் ஆகியோரால் இந்த பாரம்பரியம் முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் பல மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் ஒகு கதாலுவை பிரபலமாக்கினர். வல்லம் சத்தையா மேலும் பல ஆர்வமுள்ள மாணவர்களுக்கும்  ஒகு கதையின் முழுமையான கருத்துக்களை கற்பித்தார். இந்த அறிவுப் பகிர்வினால்தான் ஒகு கதை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது.


ஒகு கதா கலைஞர்களில் பிரபலமான பெயர்கள் சுக்கா சாத்தையா[3] ஒகு கதையை உலகளவில் பிரபலமாக்கியவர்களில் மிகவும் முக்கியமானவர் . [4] தனது 14 வயதில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கின அவர், இந்த கலையை பிரபலப்படுத்துவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 12,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கினார். எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும், இந்து சமய பரப்புரையோடு அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரப்பி, லட்சக்கணக்கானோரைச் சிந்திக்க வைத்தார்.

மல்லண்ணா கதா, பீரப்பா கதா, எல்லம்மா கதா, மண்டலு கதா, நல்ல போஷம்மா கதா, துர்கம்மா கதா, சௌடலம்மா கதா, உப்பலம்மா கதா, மைசம்மா கதா, கீலுகுர்ரம் கதா, லக்ஷ்யகிரஹம் கதா, பெத்திராஜு பெத்தம்மா கதா, எர்ரகொல்லா அக்கம்மா கதா, கனகதாரா கதா, கம்போஜராஜு கதா, ரம்பா கதா, அல்லிரானி கதா, அபூர்வவதி கதா, மைனாவதி கதா, சாரங்கதாரா கதா, அமரசீல மகாராஜா கதா, புரூர்வ சக்ரவர்த்தி கதா, மௌனதாரி கதா, பாபாஷபஷதுல்லா கதா, சிவகோமரா கதா, சுகுணாவதி கதா, சாரங்கதாராமதாசரங்காதர கதா, அட்கரொல்லா கதா, வீரபகவந்தி கதா, மாயாதேவி கதா, சிறீதேவி கதா என பல்வேறு புராண கதைகளை தனது மெல்லிய குரலால் கூறி  தெலுங்கானா மக்களை கவர்ந்திழுத்தவர்  சுக்கா சாத்தையா.

மித்தே ராமுலு என்ற கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வழியே மிகவும் பிரபலமானவர்

தாராள ஜங்கையா, அவுல முத்தியாலு, எர்ரா மல்லேஷ், சானகே பல்லப்பா, ஸ்ரீசைலம் யாதவ், மல்லேஷ் யாதவ், தாரளா பாபு, நாகேஷ் யாதவ், சித்தப்பா, கிருஷ்ணா, குந்த பீரையா, குந்த சேரலு, கஜர்லா புக்கையா, கஜார்லா புக்கையா, கஜார்லா புக்கையா, போன்ற இன்னும் பல ஒகு கதா கலைஞர்கள் ஒகு கதாலுவின் புகழை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றனர் .

தெலுங்கானா அரசு ஒகு கதா கலையின் கலாச்சாரத்தை பரப்புவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. [5]

குழு[தொகு]

ஒரு கதைக் குழுவில் நான்கு முதல் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். முக்கியமானவர் வசனகர்த்தா அவருக்கு , ஒரு உதவிக் கதை சொல்பவர் மற்றும் குறைந்தபட்சம் இரண்டு வாத்தியக் கலைஞர்கள் - ஒருவர் 'ரண பேரி' எனப்படும் பெரிய டிரம்மில் இசைக்கிறார், மற்றவர் பெரிய அளவிலான பித்தளை தாளங்களில் இசைக்கிறார். மற்றொரு உறுப்பினர் கஞ்சிராவில் இசைக்கிறார், ஆறாவது நபர் கதை சொல்பவருடன் இணைந்து பாடுகிறார், மேலும் தற்காப்பு வீரக்கதைகளை பாடும் போது நபீரா என்ற காற்றுக் கருவியையும் வாசிப்பார்.



உடை மற்றும் ஆபரணங்கள்[தொகு]

முழந்தாள் வரை கட்டப்பட்ட பெரிய தொள தொளப்பான கீழாடை, கண்ணைப்பறிக்கும் வண்ண நிறச் சட்டை, வண்ணத் தலைத் துணி, வண்ண இடுப்புக்கச்சை, மற்றும் கணுக்கால் மணிகள் போன்றவைகளை அணிந்திருப்பார் தலைமைக் கதையாளர். மற்ற வசனகர்த்தாவும் அதே உடையில் இருப்பார். உடையை விட, அவர்கள் அணிய வேண்டிய ஆபரணங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதான உரையாசிரியர் 'கவ்வல தரிசனம்' எனப்படும் ஏழு குண்டுகளால் ஆன சங்கிலியை வைத்திருப்பார்.

இந்த குண்டுகளின் சங்கிலி பற்றி ஒரு புராணக்கதை உள்ளது. பிரமராம்பாவின் (மல்லண்ணாவின் துணைவி) ஏழு சகோதரர்கள் அவர்களது திருமணத்தை நிறுத்த எண்ணி திருமணத்தின் போது அவருடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. மல்லண்ணா அவர்களை வென்று நாய்களாகும்படி சபித்தார். பிரமராம்பா அவர்களை சாபத்திலிருந்து காப்பாற்றுமாறு இறைவனிடம் மன்றாடியபோது, அவர் அவர்களை ஒகாக்கள் ஆக மாறி தனது கதைகளைச் சொல்லவும் கேட்டுக்கொண்டே இருக்கும் படியும் அவர்களுக்கு அருள் செய்தார். ஏழு குண்டுகள் ஏழு சகோதரர்களைக் குறிக்கின்றன மேலும் கதையை விவரிக்கும் போது அந்த குண்டுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

கூடுதலாக, அவர்கள் ஐந்து வெள்ளி மோதிரங்கள், ஐந்து வெள்ளி சங்கிலிகள் (ஜோகிர்லி), ஒரு மணிக்கட்டு வளையம்  (பொஞ்சி), கழுத்தில் அடர்த்தியான வெள்ளி மோதிரங்கள் (கடியம்) , வலது மணிக்கட்டு மற்றும்  இரு புஜங்களிலும், மூன்று அடுக்கு மாலையை அணிந்துள்ளனர். பகடம் (நீலக்கல்) மற்றும் வட்டமான வெள்ளிக் கயிறுகள் (தவளம்), காலின் விரல்களுக்கு ஆண்டே மற்றும் மேட் மற்றும் அதன் மீது மல்லனுடைய திருவுருவம் கொண்ட மாலை (அம்பரால கொலுசு) என உடல் முழுவதும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரித்துள்ளனர். மேலும் கதை சொல்லும் போது ஒரு குச்சியை வைத்து கொள்வார்கள். அது வாள் அல்லது குதிரையின் சங்கிலியாகவும் கதை சொல்லும் போது பயன்படுகிறது .   

ஒகு கதா கலையானது, நாடகவியலுக்கான மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. ஒரு திறமையான கதை சொல்பவரால், கதையை மக்களுக்கு முழுமையாக வழங்குவதற்கான பாரம்பரிய முறையாக இது உள்ளது. மேலும் எண்ணற்ற கலைஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணற்ற மேம்பாடுகளின் காரணமாக, இது மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது.

குறிப்பிடத்தக்க கலைஞர்கள்[தொகு]

  • சுக்கா சாத்தையா - தெலுங்கானா மக்களைக் கவரும் மெல்லிசைக் குரலுக்கு பிரபலமானவர்.
  • மித்தே ராமுலு - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர்.
  • பாலசித்துலு- அவரது குரல் மற்றும் ஒகு கதையின் வெளிப்பாடு தெலுங்கானா மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Telangana Cultural Forum organises rally". 26 October 2008. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Telangana-Cultural-Forum-organises-rally/article15329554.ece. 
  2. "The Hindu : Andhra Pradesh / Karimnagar News : 'Oggu katha' expert Ramulu is no more". www.hindu.com. Archived from the original on 1 December 2010. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  3. "The Hindu : Andhra Pradesh / Warangal News : On a noble mission". www.hindu.com. Archived from the original on 19 April 2005. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  4. "Archived copy". Archived from the original on 10 January 2016. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. India, The Hans (2016-08-08). "Propagating the culture of Oggu Katha". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகு_கதா&oldid=3668783" இலிருந்து மீள்விக்கப்பட்டது