ஐர் ஏரி
கடி தாண்டா -ஐர் ஏரி | |
---|---|
1999 இல் லேண்ட்சாட் 7 செயற்கைக்கோள் மூலம் எடுக்கபட்ட ஏரியின் புகைப்படம் | |
ஐர் ஏரிப் படுகையின் வரைபடம் | |
அமைவிடம் | தூர வடக்குப் பகுதி, தெற்கு ஆத்திரேலியா |
ஆள்கூறுகள் | 28°40′S 137°20′E / 28.667°S 137.333°E |
ஏரி வகை | பழமையான ஏரி |
முதன்மை வரத்து | வார்பர்ட்டன் ஆறு |
வடிநில நாடுகள் | ஆத்திரேலியா |
மேற்பரப்பளவு | 9,500 km2 (3,668 sq mi) (max) |
சராசரி ஆழம் | 1.5 m (5 அடி) (ஒவ்வொரு 3 வருடங்கள்), 4 m (13 அடி) (ஒவ்வொரு பத்தாண்டுகள்) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | −9 m (−30 அடி) (shoreline when full); −15 m (−49 அடி) (lowest point when empty) |
'ஐர் ஏரி ( Lake Eyre ) அதிகாரப்பூர்வமாக கடி தாண்டா -ஐர் ஏரி ( Kati Thanda–Lake Eyre ) எனவும் அழைக்கப்படும் அடிலெய்டுக்கு வடக்கே சுமார் 700 கிமீ (435 மைல்) தொலைவில் தெற்கு ஆஸ்திரேலியாவின் தூர வடக்குப் பகுதியின் கிழக்கு-மத்திய பகுதியில் உள்ள ஒரு ஏரி ஆகும். ஆழமற்ற ஏரியான இது ஆத்திரேலியாவின் மிகக் குறைந்த இயற்கைப் புள்ளியைக் கொண்டுள்ளது. மேலும், இது கடல் மட்டத்திற்கு கீழே சுமார் 15 மீ (49 அடி) கீழே உள்ளது. அரிதான சந்தர்ப்பங்களில், இது முழுமையாக நிரம்புகிறது. ஆனாலும் இது ஆத்திரேலியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. இது 9,500 கிமீ2 (3,668 சதுர மைல்) பரப்பளவை கொண்டுள்ளது. ஏரி நிரம்பும்போது, அது கடல்நீரைப் போன்ற அதே உவர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் ஏரி வறண்டு, நீர் ஆவியாகும்போது உவர்ப்புத் தன்மை குறைந்து உயிர்ச்சூழலை உண்டாக்குகிறது
1840 இல் ஏரியைப் பார்த்த முதல் ஐரோப்பியரான எட்வர்ட் ஜான் ஐரின் நினைவாக இந்த ஏரிக்கு பெயரிடப்பட்டது. இரட்டைப் பெயரிடும் கொள்கைக்கு இணங்க அதன் பழங்குடியினரின் பெயரான கடி தாண்டாவைச் சேர்த்து இது அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 2012 இல் மறுபெயரிடப்பட்டது. ஏரி மற்றும் சுற்றியுள்ள பகுதியின் பூர்வீக உரிமை அரபானா மக்களுக்கு உள்ளது [1]
பறவைகள் இடம் பெயர்தல்
[தொகு]ஆத்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதிகளிலிருந்தும், பப்புவா நியூ கினி போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் ஏரி நிரம்பியிருக்கும்போது கூழைக்கடாக்கள் மற்றும் பட்டை பறவைகள் இழுக்கப்படுகின்றன. 1989-1990 வெள்ளத்தின் போது, ஆத்திரேலியாவின் மொத்த எண்ணிக்கையில் 200,000 கூழைக்கடாக்கள் ( 80 சதவீதம்), ஐர் ஏரிக்கு உணவு சேகரிக்க மற்றும் தங்குவதற்கு வந்ததாக மதிப்பிடப்பட்டது. [2] பள்ளத்தாக்கிலிருந்து நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் கூட, ஏரியின் நிரம்பலைக் கண்டறியும் திறன் கொண்ட பறவைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை விஞ்ஞானிகளால் தற்போதும் கண்டறிய முடியவில்லை.[3]
ஏரியின் பரப்பளவு கடி தண்டா-ஐர் ஏரி தேசியப் பூங்கா மற்றும் எலியட் பிரைஸ் பாதுகாப்பு பூங்கா என இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக தெற்கு ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. [4]
ஆத்திரேலியாவில் உள்ள முக்கியமான ஈரநிலங்களின் அடைவு என அறியப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலில் ஐர் ஏரி உள்ளது.[5]
முக்கியமான பறவைப் பகுதி
[தொகு]பன்னாட்டு பறவை வாழ்க்கை என்ற அரசு சார்பற்ற அமைப்பு இந்த ஏரியை ஒரு முக்கியமான பறவை பகுதி அடையாளம் கண்டுள்ளது. அமைப்பின் முன்னுரிமைகளில் பறவை சிற்றினங்கள் அழிவதைத் தடுப்பது, பறவைகளுக்கான முக்கியமான தளங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பது, முக்கிய பறவை வாழ்விடங்களைப் பராமரித்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் மற்றும் உலகளவில் பறவைப் பாதுகாப்பார்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dodd v State of South Australia [2012] FCA 519". Federal Court of Australia. 22 May 2012. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ White, T. C. R. (2005). Why Does the World Stay Green?: Nutrition and Survival of Plant-eaters.
- ↑ Fantin, Elise (January 5, 2016). "Birds set to return to Lake Eyre to breed as inland lakes fills with water". ABC News (Australia). https://www.abc.net.au/news/2016-01-06/birds-set-to-return-to-lake-eyre-to-breed/7069228?section=sa.
- ↑ "Kati Thanda-Lake Eyre National Park" (PDF). Department for Environment and Water (South Australia). பார்க்கப்பட்ட நாள் March 28, 2023.
- ↑ Morelli, Josephine; de Jong, Mark C. (2001). "9. South Australia" (PDF). In Larmour, Geoff; Young, Sarah (eds.). A Directory of Important Wetlands in Australia (Third ed.). Department of the Environment and Heritage. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-642-54721-7. பார்க்கப்பட்ட நாள் March 28, 2023.
- ↑ "Lake Eyre". BirdLife Data Zone. பன்னாட்டு பறவை வாழ்க்கை. 2008. பார்க்கப்பட்ட நாள் March 28, 2023.
மேலும் படிக்க
[தொகு]- Schwartz, Dominique (May 9, 2019). "The re-birth of Lake Eyre". 7.30. ABC News (Australia). Archived from the original (video) on May 10, 2019.
- Kotwicki, Vincent (1986). Floods of Lake Eyre. Engineering and Water Supply Department. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0724374582.
- Kotwicki, Vincent. "Floods of Lake Eyre". Archived from the original on March 3, 2016.
- Angus, Michael; Fredericks, Murray (February 20, 2009). Salt (2009 film).
- Riebeek, Holli (June 21, 2009). "Lake Eyre Filling Peaks". NASA Earth Observatory. பார்க்கப்பட்ட நாள் March 28, 2023.
- Backway, Bob. "Lake Eyre Yacht Club". Lake Eyre Yacht Club. பார்க்கப்பட்ட நாள் March 28, 2023.