உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோவாசிய கொண்டலாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரேசியா கொண்டலாத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Upupidae

Leach, 1820
பேரினம்:
Upupa

L, 1758
இனம்:
U. epops
இருசொற் பெயரீடு
Upupa epops
L, 1758
Approximate range.
    nesting     resident (all year)     wintering
Upupa epops

யூரேசியா கொண்டலாத்தி (Upupa epops) ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் காணப்படும் வண்ணமிகு பறவை. இதன் கிரீடம் போன்ற இறகுத்தலை இதனை எளிதில் அடையாளம் காட்டும். பழுப்பு நிற உடலும் பளிச்சென்ற கருப்பு-வெள்ளை இறகுகளும் கீழ்நோக்கி வளைந்த அலகும் கொண்டது இப்பறவை.கொண்டலாத்தி குருவியை எழுத்தாணிக் குருவி, சாவல்குருவி, புளுக்கொத்தி, கொண்டை வளர்த்தி, கொண்டை உலர்த்தி, விசிறிக்கொண்டைக் குருவி என்றும் அழைப்பர். கட்டிடங்கள் மற்றும் பாறை இடுக்குகளில் இடையில் கூடு அமைத்து இனப்பெருக்கம் செய்யும் பறவை இது . இதன் அலகு நீண்டு இருப்பதால் இதனை மரங்கொத்தி என மக்கள் தவறாக கருதுவர். உண்மையில் இது மண்ணின் உள் வண்டுகளும், கரையான்களும் அமைக்கும் புற்றுகளில் தன் நீண்ட அலகினை நுழைத்து அவற்றின் இளம் பருவ புழுக்களை உணவாக உண்கின்றன. அழகான உருவத்தைக்கொண்ட இவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இவையெல்லாம் இல்லாவிட்டால் பூச்சிகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்[சான்று தேவை]

துணையினங்கள்

[தொகு]

இந்த இனத்தின் கீழ் 9 துணையினங்கள் உள்ளன.

துணைச்சிற்றினம்[2] வளருமிட பரவல்[2] தனித்த பண்புகள்[2]
யு. எ. எப்பாசு
லின்னேயசு, 1758
வடமேற்கு ஆப்பிரிக்கா, கேனரி தீவுகள், ஐரோப்பா, தென் மத்திய ரஷ்யா, வடமேற்கு சீனா, தெற்கு, வடமேற்கு இந்தியா மாதிரியினம்
யு. எ. மேஜர்
சி.எல். பிரிஹம், 1855
தென்கிழக்கு ஆப்பிரிக்கா மாதிரியினத்தை விட பெரியது, பெரிய அலகு, நீள அலகு, குறுகிய வால் பட்டை, சாம்பல் மேற்பகுதி
யு. எ. செனெகேலென்சு
சுவைசன், 1913
செனகல் முதல் ஐரோப்பா வரை மாதிரியினத்தினை விட சிறியது, குட்டையான இறகுகள்
யு. எ. வாய்பெலி
ரெய்ச்சன்நவ், 1913
கேமரானலிருந்து தென் கென்யா யு. எ. சிலென்சிசு போன்றது, அடர் சிறகுகள் தோற்றம், வெள்ளை நிறம் இறக்கைகளில்
யு. எ. சத்துராட்டா
லோன்பெர்க், 1909
ஜப்பான், சைப்பீரியாவிலிருந்து திபெத்து, தென் சீனா மாதிரியினத்தினைப் போன்றது, சாம்பல் நிற மார்பு கூடு, வெளிறிய இளம்சிவப்பு
இலங்கை கொண்டலாத்தி யு. எ. சிலென்சிசு
ரெய்ச்சன்பாச், 1853
இந்திய துணைக்கண்டம் மாதிரியினத்தினை விட சிறியது, அதிக செம்பழுப்பு நிறமுடையது,
யு. எ. லாங்கிரோஸ்ட்ரிசு
ஜெர்டான், 1862
தென்கிழக்கு ஆசியா மாதிரியினத்தினை விட பெரியது, வெளிறிய நிறமுடையது

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2020). "Upupa epops". IUCN Red List of Threatened Species 2020: e.T22682655A181836360. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22682655A181836360.en. https://www.iucnredlist.org/species/22682655/181836360. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 2.2 Kristin, A (2001). "Family Upupidae (Hoopoes)". In Josep, del Hoyo; Andrew, Elliott; Sargatal, Jordi (eds.). Handbook of the Birds of the World. Volume 6, Mousebirds to Hornbills. Barcelona: Lynx Edicions. pp. 396–411. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-87334-30-6.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Upupa epops
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோவாசிய_கொண்டலாத்தி&oldid=3787783" இலிருந்து மீள்விக்கப்பட்டது