ஐரோப்பிய வாகைக் கழகங்களின் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பியக் கோப்பை

ஐரோப்பிய வாகைக் கழகங்களின் கோப்பை (European Champion Clubs' Cup, அல்லது Coupe des Clubs Champions Européens), அல்லது சுருக்கமாக ஐரோப்பியக் கோப்பை, யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டிகளில் வெற்றிகாணும் காற்பந்தாட்ட சங்கத்திற்கு யூஈஎஃப்ஏவால் ஆண்டுதோறும் வழங்கப்படும் கோப்பை ஆகும். பழைய வடிவத்தில் இந்தக் கோப்பையின் பெயராலேயே காற்பந்துப் போட்டிகளும் அறியப்பட்டு வந்தன. 1992-93 ஆண்டுப் போட்டிகளிலிருந்து இந்தப் போட்டிகள் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டிகள் என அறியப்படுகின்றன.

ஐந்து முறை வென்ற அல்லது மூன்றுமுறை தொடர்ந்து வென்ற காற்பந்துச் சங்கம் இந்தக் கோப்பையை தங்களிடமே வைத்துக் கொள்ளலாம் என்பதால் இக்கோப்பை பலமுறை உருவாக்கப்பட்டுள்ளது.[1][2][3]

கோப்பையை நிரந்தரமாக தங்களிடம் தக்க வைத்துள்ள சங்கங்கள்[தொகு]

பழைய விதிகளின்படி ஆடப்பட்ட 1968-69 முதல் 2008-09 வரை இந்தக் கோப்பையை ஐந்து சங்கங்கள் தங்களிடமே வைத்துள்ளன:

  • எசுப்பானியா ரியல் மாட்ரிட் 1956–60 மற்றும் 1966இல் ஆறுமுறை வென்றபின். இதன்பிறகு இவர்கள் மேலும் மூன்று முறை,1998, 2000, மற்றும் 2002 வென்றுள்ளனர்.
  • நெதர்லாந்து அயாக்சு 1973இல் மூன்றாம் தொடர்ந்த வெற்றிக்குப் பின்னர். நான்காம் முறையாக 1995இல் வென்றனர்.
  • செருமனி பயர்ன் மியூனிக், 1976இல் தங்கள் தொடர்ந்த மூன்று வெற்றிகளுக்குப் பின்னர். நான்காம் முறையாக 2001இல் வென்றனர்.
  • இத்தாலி மிலான், 1994இல் தங்களது ஐந்தாம் வெற்றிக்கு பின்னர். இதன் பிறகு 2003இலும் 2007இலும் இரண்டு முறை வென்றுள்ளனர்.
  • இங்கிலாந்து லிவர்ப்பூல், 2005இல் தங்கள் ஐந்தாம் வெற்றிக்கு பின்னர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Regulations of the UEFA Champions League (பி.டி.எவ்) from UEFA website; Page 4, §2.01 "Cup"
  2. Regulations of the UEFA Champions League Page 26, §16.10 "Title-holder logo"
  3. "Regulations of the UEFA Champions League 2008/09, Chapter XI, Article 19 – "UEFA Kit Resolutions", paragraph 14, page 29" (PDF). uefa.com. Union of European Football Associations. August 2009. பார்க்கப்பட்ட நாள் 30 August 2009.

வெளி இணைப்புகள்[தொகு]