உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பிய பனங்காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பிய பனங்காடை
Adult with a centipede
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. garrulus
இருசொற் பெயரீடு
Coracias garrulus
லின்னேயஸ், 1758
துணையினம்
  • C. g. garrulus
  • C. g. semenowi

ஐரோப்பிய பனங்காடை (European roller) என்பது ஒருவகைப் பனங்காடை பறவையாகும். இது ஐரோப்பாவைச் சேர்ந்த பறவையாகும். இது மத்திய கிழக்கு, நடு ஆசியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்கு வலசை போக்கூடியவை.

விளக்கம்

[தொகு]

இப்பறவை பறக்கும்போது இதன் கருநீல இறகுகள் பளிச்சென்றுத் தெரியக்கூடியவை. அடிப்பாகம் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். இதன் பின்புறம் ஆரஞ்சு பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலில் மீதமுள்ள பகுதிகள் வெளிர் நீலம் முதல் கருநீல இறகுகளுடன் மாறுபட்டு காணப்படும். இவை மரப் பொந்துகளில் கூடமைக்கும்.

வெட்டுக்கிளிகள், வண்டுகள், அந்துப்பூச்சிகள், பூரான், மரவட்டை, சிள் வண்டு, சிறு பல்லிகள், சிறிய கொறிணிகள், தவளைகள் போன்றவை இதன் முதன்மை உணவாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Coracias garrulus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "அரிய ஐரோப்பிய விருந்தாளி". Hindu Tamil Thisai. Retrieved 2023-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பிய_பனங்காடை&oldid=3657918" இலிருந்து மீள்விக்கப்பட்டது