உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பியப் பூச்சியியல் ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பியப் பூச்சியியல் ஆய்விதழ்
European Journal of Entomology
துறைபூச்சியியல்
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்பெற் சுவாச்சா
வெளியீட்டுத் தகவல்கள்
Acta Societatis Entomologicae Bohemiae; Acta entomologica Bohemoslovaca
வரலாறு1904–முதல்
பதிப்பகம்
செக் அறிவியல் கழகம் (செக் குடியரசு)
வெளியீட்டு இடைவெளிகாலாண்டு இதழ்
திறந்த அணுக்கம்
ஆம்
உரிமம்CC-BY 4.0
1.182 (2020)
நிலையான சுருக்கம்
ISO 4Eur. J. Entomol.
அகரவரிசைத் தொகுத்தல்
ISSN1210-5759
1802-8829
OCLC no.488234955
இணைய இணைப்பு

ஐரோப்பியப் பூச்சியியல் ஆய்விதழ் (European Journal of Entomology) என்பது செக் அறிவியல் கழகத்தினால் வெளியிடப்படும் சக மதிப்பாய்வு செய்யப்படும் திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது வருடத்திற்கு நான்கு முறை வெளியாகும் காலாண்டு இதழாகும். இதில் பலகாலிகள், கெலிசராட்டு உள்ளடக்கிய பூச்சியியல் ஆய்வுகளையும் நிலத்தில் வாழும் ஓடுடைய கணுக்காலிகள் குறித்த ஆய்வுகளையும் வெளியிடுகிறது. இது 1904ஆம் ஆண்டில் செக் பூச்சியியல் சங்கத்தால் ஆக்டா சொசைட்டாடிஸ் என்டோமோலாஜிகே போஹேமியா என்ற தலைப்பில் நிறுவப்பட்டது. பின்னர் ஆக்டா என்டோமோலாஜிகா போஹெமோசுலோவாக்கா எனப் பெயரிடப்பட்டது. ஆய்விதழின் அட்டைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பூச்சி பைரோகோரிசு ஆப்டெரசு ஆகும்.[1] ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த ஆய்விதழின் 2020ஆம் ஆண்டிற்கான தாக்கக் காரணி 1.182 ஆகும்.[2] 2016ஆம் ஆண்டில், இந்த ஆய்விதழ் மின்னணு இதழாக மட்டுமே திறந்த அணுகலுடன் வெளியாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "European Journal of Entomology: About the Journal". Retrieved 2013-04-01.
  2. https://www.scijournal.org/impact-factor-of-eur-j-entomol.shtml

 

வெளி இணைப்புகள்

[தொகு]