ஐமன் அழ்-ழவாகிரி
ஐமன் அல் சவாஹிரி | |
---|---|
![]() | |
பிறப்பு | சூன் 19, 1951 மாடி, கெய்ரோ, எகிப்து |
பணி | இசுலாமிய மெய்யியலாளர் அல் கைடா தலைவர் |
முன்னிருந்தவர் | உசாமா பின் லாதின் |
சமயம் | சுன்னி இஸ்லாம் (குத்பிசம்)[1] |
பெற்றோர் | முகம்மது ரபீஃ அல் ழவாஹிரி (தந்தை) உமய்மா அஸ்ஸாம் (அன்னை) |
வாழ்க்கைத் துணை | அஸ்ஸா அகமது (மறைவு) (1978-2001) |
பிள்ளைகள் | 6 (வாழ்பவர் 5) |
ஐமன் முகம்மது ரபீஃ அழ்-ழவாகிரி (Ayman Muhammad Rabaie al-Zawahiri[2], அரபு மொழி: أيمن محمد ربيع الظواهري, ʾAyman Muḥammad Rabīʿ aẓ-Ẓawāhirī; பிறப்பு சூன் 19, 1951) ஓர் எகிப்திய இசுலாமிய மெய்யியலாளர். எகிப்திய இசுலாம் (ஜிகாத்) போராட்டத்தின் தலைவர் அப்த் அல் ஸுமர் எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் மற்றும் தற்போதைய அமீராக இருப்பவர். மே 2, 201 முதல், உசாமா பின் லாதினின் மறைவிற்குப் பின்னால், இவரே அல் காயிதாவின் முக்கியத் தலைவராக விளங்குகிறார்.[3] இவர் தனது பார்வைகளிலும் செயலாக்கத்திலும் உசாமா பின் லாதினை விட மிகவும் தீவிரமானவராகக் கருதப்படுகிறார்.[4]
அல் ழவாகிரி அறுவை மருத்துவ நிபுணராக அறியப்படுகிறார்; அவரது எகிப்திய இசுலாமிய ஜிகாத் பின் லாதினின் அல்காயிதாவுடன் இணைந்தபோது பின் லாதினுக்குத் தனிப்பட்ட அறிவுரையாளராகவும் மருத்துவராகவும் செயற்பட்டு வந்தார். பின் லாதினை 1986ஆம் ஆண்டு ஜித்தாவில் சந்தித்தார்.[5] அல் ழவாகிரி இசுலாமிய மெய்யியல் மற்றும் இசுலாமிய வரலாற்றில் தேர்ந்த அறிவும் ஆழ்ந்த புரிதலும் கொண்டிருந்தார். அல் ழவாகிரிக்கு அரபி , ஆங்கிலம் [6][7] மற்றும் பிரெஞ்சு மொழியில் நல்ல தேர்ச்சி உண்டு. அல்காயிதாவின் உறுப்பினர் என்பதால் இவர் மீது ஐ.நா பாதுகாப்பு அவை 1267 குழு உலகளவில் தடைகள் விதித்துள்ளது.[8]
1998ஆம் ஆண்டு அல் சவாகிரி எகிப்திய இசுலாமிய ஜிகாத் இயக்கத்தை அல்காயிதாவுடன் முறையாக இணைத்தார். அல்காயிதாவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, அல் ழவாகிரி அல்காயிதாவின் நிறுவன காலத்திலிருந்தே பணி புரிந்தவர் என்றும் அதன் ஆலோசனை அவையின் மூத்த உறுப்பினராக விளங்கினார் என்றும் அறியப்படுகிறது. பின் லாதினின் "தளபதி" என்று இவர் குறிப்பிடப்பட்டாலும், பின் லாதினின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் இவரை அல்காயிதாவின் உண்மையான "அறிவுத்திறன்" எனக் குறிக்கிறார்.[9]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Islamism: a documentary and reference guide (2008) Dr. John Calvert
- ↑ al-Zawahiri is also sometimes being transliterated al-Dhawahiri to reflect normative classical Arabic pronunciation beginning with [ðˤ]. எகிப்திய அரபு pronunciation is [ˈʔæjmæn mæˈħæmmæd ɾˤɑˈbiːʕ elzˤɑˈwɑhɾi]; approximately: Ayman Mahammad Rabi Elzawahri.
- ↑ Juan Zarate, Chris Wragge, CBS Early Show.Who now becomes America's next most wanted terrorist?. பரணிடப்பட்டது 2011-08-19 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Bin Laden's touted successor 'even more extreme'". Radio Australia News. 3 May 2011. 12 மே 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 06 May 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி); Check date values in:|accessdate=
(உதவி) - ↑ Atkins, Stephen E. (31 May 2011). The 9/11 Encyclopedia. ABC-CLIO. பக். 456–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781598849219. http://books.google.com/books?id=PDDIgWRN_HQC&pg=PA456. பார்த்த நாள்: 6 May 2011.
- ↑ www.memri.org. "Al-Qaeda Deputy Head Ayman Al-Zawahiri in Audio Recording: Musharraf Accepted Israel's Existence". Memri.org. 2011-02-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Wilkinson, Isambard (August 11, 2008). "Al-Qa'eda chief Ayman Zawahiri attacks Pakistan's Pervez Musharraf in video". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/news/worldnews/asia/pakistan/2540522/Al-Qaeda-chief-Ayman-Zawahiri-attacks-Pakistans-Pervez-Musharraf-in-video.html. பார்த்த நாள்: April 26, 2010.
- ↑ UN list of affiliates of al-Qaeda and the Taliban
- ↑ Baldauf, Scott (31 October 2001). "The 'cave man' and Al Qaeda". Christian Science Monitor. 2008-04-17 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஐமன் அழ்-ழவாகிரி |
- New Yorker story about al-Zawahiri, by Lawrence Wright
- Fatwa from World Islamic Front for Jihad against Jews and Crusaders – Statement with bin Laden, 23 February 1998
- Al-Zawahiri: US faces Afghan, Iraq defeat (Aljazeera, 9 September 2004)
- Excerpts and video footage released December 1, 2005 from the September 2005 interview
- CNN's report on the January 2006 al-Zarqawi video tape
- Letter from al-Zawahiri to al-Zarqawi, copy at GlobalSecurity.org
- Extracts from Knights Under the Prophet's Banner
- Responses to some of the Online Q&A பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம்