ஐதர் அலியேவ் தனிநபர் வழிபாடு
அசர்பைஜானின் முன்னாள் அதிபர் ஐதர் அலியேவ்வின் ஆளுமை வழிபாடு இதனை ஐதரிசம் என்றும் அழைப்பர்.[1][2] (அசர்பைஜான்: heydərizm),[3]ஐதர் அலியேவ் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அரசியல் குழு உறுப்பினராகவும், சோவியத் அசர்பைஜானின் தலைவராக 1969 முதல் 1987 முடிய இருந்தார். சோவியத் ஒன்றியம் சிதறிய பிறகு 1993ல் ஐதர் அலியேவ் அசர்பைஜானின் சர்வாதிகார அதிபர் ஆனார். பின்னர் அவர் குடும்பம் மற்றும் குல உறுப்பினர்கள், எண்ணெய் வருவாய் வளத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் ஒரு சர்வாதிகார அமைப்பை கவனமாக வடிவமைக்கத் தொடங்கினர்.[4]ஐதர் அலியேவ் அஜர்பைஜானின் தேசியத் தலைவர் எனக் குறிப்பிடப்படுகிறார்.[5]
1993ல் அசர்பைஜான் அதிபரான ஐதர் அலியேவ், 1993ல் தனது இறப்பு வரை அரசியல் மற்றும் சமூகத்தில் வழிபாட்டுக்குரியவராக விளங்கினார். ஐதர் அலியேவ்வின் இறப்பிற்குப் பின்னர் அவரது மகன் இல்ஹாம் அலியேவ் 1993ல் அசர்பைஜான் அதிபராக பொறுப்பேற்றார்.[6][7]
ஐதர் அலியேவ் மனித உரிமைகளை மீறுவதாகவும், அஜர்பைஜானில் ஒரு எதேச்சதிகார அமைப்பை உருவாக்குவதாகவும் நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டார். பல விமர்சகர்கள் இவரது ஆட்சியை சர்வாதிகார ஆட்சியாக வகைப்படுத்தினர்.[8][9][10] அவரது ஆளுமை வழிபாட்டு முறையை சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஜோசப் ஸ்டாலினுடன் ஒப்பிடப்பட்டது. அஜர்பைஜானில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை தணிக்கை செய்யப்படுகிறது.[10] 2003 இல் இல்ஹாம் அலியேவ் அவரது தந்தையின் வாரிசாக நியமிக்கப்பட்டார்.
ஐதர் அலியேவ்வின் சர்வாதிகார ஆட்சியில், மக்களிடத்தில் ஆளுமை வழிபாட்டை ஏற்பாடு செய்துள்ளார். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும் அசர்பைஜான் அதிபர் ஐதர் அலியேவ் உருவப் படங்கள் கட்டாயமாக வைத்து வழிபடப்பட்டது. "மக்களின் ஒளிரும் மகன்" என்ற தலைப்புடன் கூடிய ஐதர் அலியேவின் ஓவியங்கள், அற்புதமான புத்துணர்ச்சி பெற்ற சிவப்பு மற்றும் மஞ்சள் ஒளிக் கதிர்களை வெளியிடுவதைக் காட்டுகின்றது. எண்பது வயதான ஐதர் அலியேவ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், தனது மகன் இல்ஹாம் அலியோவ்வை அடுத்த அசர்பைஜான் அதிபராக நியமித்தார்.
ஐதர் அலியேவ் ஜோசப் ஸ்டாலின் அரசியல் பாரம்பரியத்தின் கடைசி பிரதிநிதியாக இருந்தார். அஜர்பைஜான் மக்களிடையே பயங்கரமான அனுபவங்களை அவர் வெளிப்படுத்தினார்.
அசர்பைஜான் தலைநகரான பக்கூ நகரத்தின் மையத்தில் ஒரு சுவரொட்டியில் அஜர்பைஜானின் முன்னாள் அதிபரான ஐதர் அலியேவ் மற்றும் தற்போதைய அதிபரான இல்ஹோம் அலியேவ் உருவப்படங்களை காட்டுகிறது. மேலும் விமான நிலையம், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அதிபர் ஐதர் அலியேவ் பெயரிடப்பட்டது. அவரது மார்பளவு சிலைகள் பொது கட்டிடங்களில் நிறுவப்பட்டது. என் முதல் உள்ளுணர்வு, எப்போதும் இருக்கும் ஓவியங்கள் அவருடைய வாரிசுக்கு ஒரு சிறிய விஷயமாகவே இருந்தது.
2001ஆம் ஆண்டில் பத்திரிகையாளர்கள் ஐதர் அலியேவிடம் அவரது ஆளுமை வழிபாட்டு முறையைப் பற்றி கேட்டபோது, மக்கள் என்னை நேசிக்கிறார்கள். அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
ஐதர் அலியேவின் பெயரிடப்பட்ட இடங்கள்
[தொகு]- ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம்
- தலைநகரம் பக்கூவில் உள்ள ஐதர் அலியேவ் சர்வதேச விமான நிலையம்
- ஜார்ஜியா நாட்டின் திபிலீசியில் உள்ள ஐதர் அலியேவ் பூங்கா
- அஜர்பைஜானில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஐதர் அலியேவ் பெயரிடப்பட்ட தெருவைக் கொண்டுள்ளது. இதில் தலைநகர் பக்கூவின் மையப் பாதைகளில் ஒன்று. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, அஜர்பைஜானில் 60 ஐதர் அலியேவ் அருங்காட்சியகங்கள் மற்றும் மையங்கள் உள்ளன.
ஐதர் அலியேவ் பெயரிடப்பட்ட பிற இடங்கள்
[தொகு]- பக்கூ சர்வதேச விமான நிலையம், 10 மார்ச் 2004 அன்று ஐதர் அலியேவ் பெயரிடப்பட்டது.
- ஐதர் அலியேவ் விளையாட்டு மற்றும் கண்காட்சி வளாகம், பக்கூ
- பக்கூவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி அமைச்சகம்
- ஐதர் அலியேவ் கலாச்சார மையம்
- பக்கூவில் உள்ள ஐதர் மசூதி (2014 இல் திறக்கப்பட்டது)
- பக்கூ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
- ஐதர் அலியேவ் ஜார்ஜியா-அஜர்பைஜான் மனிதாபிமான பல்கலைக்கழகம், ஜார்ஜியாவின் மார்னியூலியில் உள்ள ஒரு சுயாதீன பல்கலைக்கழகம் (2008 இல் திறக்கப்பட்டது)[22]
ஐதர் அலியேவ் அசர்பைஜானின் தேசியத் தலைவராகக் கொண்டாடப்படுகிறார்.[11]
ஐதர் அலியேவ் அஞ்சல் தலைகள்
[தொகு]-
2001
-
2003
-
2003
-
2008
-
2013
-
2013
சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Implementation of Resolution 1358 (2004) on the functioning of democratic institutions in Azerbaijan" (PDF). Parliamentary Assembly of the Council of Europe. 20 September 2004. p. 12. Archived from the original (PDF) on 22 November 2014.
It should also reconsider the disadvantages of «heydarism», the personality cult following the deceased President...
- ↑ Muradova, Mina (12 October 2008). "Islam Not an Issue in Azerbaijan's Presidential Campaign". eurasianet.org (Open Society Institute) இம் மூலத்தில் இருந்து 25 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170325024501/http://www.eurasianet.org/departments/insight/articles/eav101308.shtml. "...Heydarism [a reference to the late President Heydar Aliyev, father of current President Ilham Aliyev] as a cult of the personality..."
- ↑ Bahadir, Xaliq (13 May 2013). "Tanınmışların heydərizm dartışması" (in az). azadliq.info. http://www.azadliq.info/faq/301-xaliq-bahadr/30575-tannmlarn-heydrizm-dartmas.html.
- ↑ "Azerbaijan: Turning Over a New Leaf?". Baku/Brussels: International Crisis Group. April 13, 2004. Archived from the original on September 2, 2012. பார்க்கப்பட்ட நாள் September 30, 2012.
- ↑ Day, [edited by] Alan J.; East, Roger; Thomas, Richard (2002). A political and economic dictionary of Eastern Europe (1. ed.). London: Europa Publications. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-063-8.
{{cite book}}
:|first=
has generic name (help) - ↑ "Heidar Aliev, maestro of the Caucasus". The Economist. August 31, 2000. http://www.economist.com/node/354347.
- ↑ Kucera, Joshua (May 20, 2008). "Travels in the Former Soviet Union. Entry 2: The Cult of Heydar Aliyev". Slate. http://www.slate.com/articles/news_and_politics/dispatches/features/2008/travels_in_the_former_soviet_union/the_cult_of_heydar_aliyev.html.
- ↑ Karatnycky, Freedom House Survey Team; Adrian; editor; coordinator, survey (1999). Freedom in the world: the annual survey of political rights & civil liberties, 1998-1999. New Brunswick: Transaction Pub. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7658-0012-8.
{{cite book}}
:|author2=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Sedat Laciner, Mehmet Ozcan, Ihsan Bal and Halil Ibrahim Bahar (eds.) (2009). USAK Yearbook of International Politics and Law Vol. 2. International Strategic Research Organization. p. 364. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-605-4030-09-5.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Minahan, James (1998). Miniature empires: a historical dictionary of the newly independent states (1. ed.). Westport, Conn.: Greenwood. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-30610-9.
- ↑ Day, [edited by] Alan J.; East, Roger; Thomas, Richard (2002). A political and economic dictionary of Eastern Europe (1. ed.). London: Europa Publications. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-063-8.
{{cite book}}
:|first=
has generic name (help)