உள்ளடக்கத்துக்குச் செல்

தனிநபர் வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசர்பைஜானிய மொழியில் ஜோசப் ஸ்டாலின் குறித்த சுவரொட்டி, ஆண்டு 1938

தனிநபர் வழிபாட்டை, ஆளுமை வழிபாட்டு முறை அல்லது தலைவர் வழிபாட்டு முறை என்பர்.[1] ஒரு தலைவரின் இலட்சியக் கொள்கைகள் மற்றும் வீரத்தை ஒரு அரசால் உருவாக்கும் முயற்சி ஆகும். வரலாற்று ரீதியாக வெகுஜன ஊடகங்கள், பிரச்சாரம், போலிச் செய்திகள், காட்சிகள், கலைகள், தேசபக்தி மற்றும் அரசால் ஏற்பாடு செய்யப்படும் பேரணிகள் ஆகியவற்றின் நுட்பங்கள் மூலம் தனிநபர் வழிபாடு வளர்க்கப்படுகிறது. ஆளுமையின் வழிபாட்டு முறையானது, நவீன சமூக பொறியியல் நுட்பங்களால் நிறுவப்பட்டுள்ளது. பொதுவாக ஒரே கட்சி ஆட்சி செய்யும் வட கொரியா போன்ற சர்வாதிகார நாட்டின் தலைவர் வழிபாட்டு முறை உள்ளது. சில முடியாட்சிகள், இறையாட்சிகள், தோல்வியுற்ற ஜனநாயகங்கள் மற்றும் தாராளவாத ஜனநாயக நாடுகளிலும் கூட தனிநபர் வழிபாடு முறை காணமுடிகிறது.

பின்னணி

[தொகு]
அகஸ்டஸ் சீசர் சிலை, கிபி முதல் நூற்றாண்டு

வரலாறு முழுவதும் மன்னர்கள் மகத்தான மரியாதையுடன் நடத்தப்பட்டனர். மேலும் மன்னர்கள் கடவுளின் பிரதிநிதியாகக் கருதி வழிபட்டனர். எடுத்துக்காட்டு பண்டைய எகிப்து நாட்டின் பார்வோன்கள். பரத கண்டத்தில் அரசர்களை கடவுள் விஷ்ணுவின் அம்சமாக மக்கள் பார்த்தார்கள். மன்னர்களின் தெய்வீக உரிமையின் கொள்கையால், குறிப்பாக இடைக்கால ஐரோப்பாவில், ஆட்சியாளர்கள் கடவுள் அல்லது கடவுள்களின் விருப்பத்தால் பதவி வகிப்பதாக கருதப்பட்டனர். பண்டைய எகிப்து, ஜப்பான், இன்கா, அஸ்டெக், திபெத், தாய்லாந்து மற்றும் உரோமைப் பேரரசின் மன்னர்களை "கடவுளால் நியமிக்கப்பட்ட மன்னர்கள்" என மக்கள் கருதி வழிபட்டனர்.

18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கருத்துக்கள் பரவியதால், மன்னர்களுக்கு தனிநபர் வழிபாட்டு முறையை பாதுகாப்பது கடினமாக இருந்தது. வானொலி போன்ற வெகுஜன ஊடகங்களின் அடுத்தடுத்த வளர்ச்சி, அரசியல் தலைவர்கள் தங்களைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை, முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களிடம் முன்வைக்க உதவியது. 20ஆம் நூற்றாண்டில் இந்த சூழ்நிலைகளில் இருந்துதான் மிகவும் மோசமான ஆளுமை வழிபாட்டு முறைகள் எழுந்தன. பெரும்பாலும் இந்த தனிநபர் வழிபாட்டு முறை அரசியல் சார்ந்த சமயத்தின் ஒரு வடிவமாகும்.[2]

21ஆம் நூற்றாண்டில் இணையம் மற்றும் உலகளாவிய வலைதளத்தின் வருகை ஆளுமை வழிபாட்டு நிகழ்வைப் புதுப்பித்துள்ளது. சமூக ஊடக தளங்கள் மற்றும் இருபத்தி நான்கு மணி நேர செய்தி சுழற்சி மூலம் ஏமாற்றும் தவறான தகவல் & தொழில்நுட்பங்கள் மூலம் நடக்கும் பிரச்சாரம் மூலம் தனிநபர் வழிபாடு ஏற்றுக்கொள்ள உதவுகிறது..[3] இதன் விளைவாக ஆளுமை வழிபாட்டு முறைகள் பல இடங்களில் வளர்ந்து பிரபலமாக உள்ளன. ஆளுமை வழிபாடு உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க எழுச்சியுடன் தொடர்புடையது.[4]

தோற்றம்

[தொகு]

"ஆளுமை வழிபாட்டு முறை" என்ற சொல் 1800-1850ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் பயன்பாட்டுடன் தோன்றியிருக்க வாய்ப்பு உள்ளது.[5] துவக்கத்தில் ஆளுமை வழிபாடு அரசியல் அர்த்தங்களைக் கொண்டிருக்கவில்லை, மாறாக கவர்ச்சிகரமான "மேதை வழிபாட்டுடன்" நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தது.[5] இந்த சொற்றொடரின் முதல் அரசியல் பயன்பாடு நவம்பர் 10, 1877 தேதியிட்ட ஜெர்மன் அரசியல் தொழிலாளி வில்ஹெல்ம் ப்ளோஸுக்கு கார்ல் மார்க்சு எழுதிய கடிதத்திலிருந்து இச்சொல் பெறப்பட்டது.[5]

சைகோன் நகரத்தில் வியட்நாம் முன்னாள் அதிபர் ஹோ சி மின் சிலை
சீனாவின் முன்னாள் அதிபர் மா சே துங்கின் சிலை

சிறப்பியல்புகள்

[தொகு]

ஒரு தலைவரின் ஆளுமை வழிபாட்டு முறை பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளது. வரலாற்றாசிரியர் ஜான் பிளாம்பர் எழுதினார், நவீன கால ஆளுமை வழிபாட்டு முறைகள் "அவற்றின் முன்னோடிகளில்" இருந்து வேறுபடும் ஐந்து குணாதிசயங்களைக் காட்டுகின்றன: வழிபாட்டு முறைகள் மதச்சார்பற்றவை மற்றும் "மக்கள் இறையாண்மையில் நங்கூரமிட்டவை"; அவர்களின் பொருள்கள் அனைத்தும் ஆண்களே; அவர்கள் ஒட்டுமொத்த மக்களையும் குறிவைக்கிறார்கள், வசதி படைத்தவர்கள் அல்லது ஆளும் வர்க்கத்தை மட்டும் அல்ல; அவர்கள் வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்; "போட்டி வழிபாட்டு [6]முறைகள்" அறிமுகப்படுத்தப்படுவதைத் தடுக்கும் அளவுக்கு வெகுஜன ஊடகங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய இடங்களில் அவை உள்ளது.

அட்ரியன் தியோடோர் போபன் என்பவர் ஆளுமை வழிபாட்டு முறையை "தலைவரின் புகழ்ச்சியின் அளவு மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தரம் வாய்ந்த ஆடம்பரமான பொது ஆர்ப்பாட்டம்" என வரையறுத்தார்.[7]

நோக்கம்

[தொகு]

பெரும்பாலும் புரட்சிகரமான மாற்றத்திற்கு தொடர்புடைய மற்றும் நல்ல வழிகாட்டியாக செயல்பட்ட ஒரு நாட்டின் தலைவரை ஆளுமை வழிபாட்டிற்கு மக்கள் ஏற்க தயங்குவதில்லை. மேலும் அத்தகைய தலைவர் இன்றி நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான மாற்றம் ஏற்படாது என மக்கள் கருதும் போது, அத்தகைய தலைவரை மக்கள் ஆளுமை வழிபாட்டு முறையில் வைத்து வழிபடுவர். இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் இட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் மா சே துங் போன்றவர்கள் சர்வாதிகார சமூகங்களில் எழுந்த ஆளுமை வழிபாட்டு முறைகளுக்கான நியாயமாகும்.

மா சே துங்கின் நடவடிக்கைகள் கடுமையாக இருந்தபோதிலும் சீனாவில் அவர் மீதான மக்களின் அபிமானம் பரவலாக உள்ளது. டிசம்பர் 2013இல், குளோபல் டைம்ஸ் கருத்துக் கணிப்பு, 85% க்கும் அதிகமான சீனர்கள் மா சே துங்கின் சாதனைகளை அவரது தவறுகளை விட அதிகமாக போற்றியுள்ளனர்.[8]

ஜான் பிளம்பர் கூற்றின்படி, பிரான்சின் மூன்றாம் நெப்போலியன் முன்மாதிரியாகக் கொண்டு, 1920களில் இத்தாலி அதிபர் பெனிட்டோ முசோலினி சர்வாதிகாரி மாதிரியை தோற்றுவித்தார். இட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பலர் சர்வதேச அரசின் பிரச்சார சக்திகளைப் பயன்படுத்தி தனிநபர் வழிபாட்டு முறையை ஊக்குவித்தனர்.[9]

சோவியத் உருசியாவின் கிரெம்லின் மாளிகையின் உண்மையை வெளிப்படுத்தக்கூடிய காப்பகப் பதிவுகளை அணுக மறுத்தது. மேலும் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டது. புகைப்படங்கள் மாற்றப்பட்ட ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[10] வழிபாட்டு முறையின் கருத்தியல் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய "அதிகாரப்பூர்வ" கணக்குகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குறிப்பாக 1938இல் ஸ்டாலினே அதை வழங்கியது போல் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வ வரலாறு ஆகும்.[11]

வரலாற்றாசிரியர் டேவிட் எல். ஹாமேனின் கூற்றுப்படி, "ஸ்டாலின் வழிபாட்டு முறை ஸ்டாலினிசத்தின் மையக் கூறு ஆகும். மேலும் அது சோவியத் ஆட்சியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். ஸ்டாலின் ஆளுமை வழிபாட்டு முறையை பல அறிஞர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.[12]

ஆளுமை வழிபாட்டில் கொண்டாடப்பட்டவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Mudde, Cas and Kaltwasser, Cristóbal Rovira (2017) Populism: A Very Short Introduction. New York: Oxford University Press. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0190234874
 2. Plamper 2012, ப. 13–14.
 3. Pathak, Archita; Srihari, Rohini; Natu, Nihit (2021). "Disinformation: analysis and identification". Computational and Mathematical Organization Theory (United States National Library of Medicine) 27 (3): 357–375. doi:10.1007/s10588-021-09336-x. பப்மெட்:34177355. 
 4. Heller, Klaus (2004). Heller, Klaus; Plamper, Jan (eds.). Personality Cults in Stalinism/Personenkulte im Stalinismus. Göttingen: V&R Unipress. pp. 23–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3899711912.
 5. Blos, Wilhelm. "Brief von Karl Marx an Wilhelm Blos". Denkwürdigkeiten eines Sozialdemokraten. பார்க்கப்பட்ட நாள் 22 February 2013.
 6. Wright, Thomas A.; Lauer, Tyler L. (2013). "What is character and why it really does matter". Fordham University: Business Faculty Publications. (Fordham University) 2: 29. https://fordham.bepress.com/gsb_facultypubs/2/. பார்த்த நாள்: June 13, 2019. 
 7. Popan, Adrian Teodor (August 2015). The ABC of Sycophancy: Structural Conditions for the Emergence of Dictators' Cults of Personality (PDF) (Thesis). University of Texas at Austin. எண்ணிம ஆவணச் சுட்டி:10.15781/T2J960G15. hdl:2152/46763.
 8. .html "மாவோவின் சாதனைகள் 'அதிக' தவறுகள்: கருத்துக்கணிப்பு". December 23, 2013. https://www.aljazeera.com/news/asia-pacific/2013/12/mao-achievements-outweigh-mistakes-poll-2013122553410272409 .html. [தொடர்பிழந்த இணைப்பு]
 9. Plamper 2012, ப. 4, 12–14.
 10. Strong, Carol; Killingsworth, Matt (2011). கவர்ச்சிமிக்க தலைவர் ஸ்டாலின்?: 'ஆளுமை வழிபாட்டு முறையை விளக்குவது ' ஒரு சட்டபூர்வமான நுட்பமாக. doi:10.1080/21567689.2011.624410. 
 11. Maslov, N. N. (1989). அனைத்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷிவிக்) வரலாற்றின் குறுகிய பாடநெறி – ஸ்டாலினின் ஆளுமை வழிபாட்டின் கலைக்களஞ்சியம் –68. doi:10.2753/RSH1061-1983280341. 
 12. David L. Hoffmann (2013). "The Stalin Cult". The Historian 75 (4): 909. doi:10.1111/hisn.12023_65. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிநபர்_வழிபாடு&oldid=3729512" இலிருந்து மீள்விக்கப்பட்டது