உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம்

ஆள்கூறுகள்: 40°23′43″N 49°52′01″E / 40.39528°N 49.86694°E / 40.39528; 49.86694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம்
Heydar Aliyev Center
Heydər Əliyev Mərkəzi
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
இடம்அசர்பைஜான், பக்கூ
ஆள்கூற்று40°23′43″N 49°52′01″E / 40.39528°N 49.86694°E / 40.39528; 49.86694
கட்டுமான ஆரம்பம்2007
நிறைவுற்றது10 மே 2012
செலவு$250 மில்லியன் USD (திட்டமிடல்)[1]
உயரம்
கூரை74 m (243 அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)Zaha Hadid Architects
முதன்மை ஒப்பந்தகாரர்DIA Holding

ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம்  (Heydar Aliyev Center) என்பது 57,500 m2 (619,000 sq ft)  அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பக்கூவில் உள்ள ஒரு கலாச்சார மைய கட்டிடம் ஆகும். இதை  உலகப் புகழ்பெற்ற ஈராக்-பிரித்தானிய பெண் கட்டிடக் கலைஞரான ஷாகா முகமது ஹதித் வடிவமைத்தார். மேலும் இந்தக் கட்டிடமானது அதன் தனித்துவமான கட்டிடக்கலையானது பாயும் அலைபோல வளைந்த வடிவமைப்பில் அமைந்துள்ளது.[2] இந்தக் கட்டடத்துக்கு சோவியத் அசர்பைஜானின் முதல் செயலாளராக 1969 முதல் 1982வரை இருந்தவரும், அசர்பைஜான் குடியரசின் அதிபராக 1993 முதல் 2003வரை இருந்தவரான ஹெய்டார் அலியேவைக் கவுரவிக்கும் வகையில் அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு[தொகு]

2012 ஆண்டு அஞ்சல் தலையில் இடம்பிடித்த ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம்.
கலையரங்கம்

இந்த மையமானது ஒரு மாநாட்டு மண்டபம், ஒரு காணும் அரங்கம், ஒரு அருங்காட்சியகம், நூலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் அந்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் இடமாக உள்ளது. இது நகரத்தின் மையப் பகுதிக்கு அருகில் உள்ளது.  இது பக்கூ நகரின் மறுவளர்சியில் முதன்மையான இடத்தை வகிக்கிறது.

ஹெய்டார் அலியேவ் மையத்தின் வெளிப்புற, உட்புற கட்டமைப்பானது அழகான வளைவுகளையும், மடிப்புகளையும் கொண்டுள்ளது.[3]

ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையமானது அதிகாரப்பூர்வமான திரப்பு விழா நடந்த 2012 மே 10 அன்று அஜர்பைஜானின் தற்போதைய ஜனாதிபதியான இல்லம் அலியெவ் திறந்து வைத்தார்.[4]

ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையக் கட்டிடமானது   அதன் புதுமையான மற்றும் வெட்டு விளிம்பு வடிவமைப்பு காரணமாக  பக்கூ நகரின் ஒரு நவீன அடையாளமாகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடக்கலைப் பணியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எட்டு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் அஜர்பைஜான் பண்பாட்டை விளக்கும் அருங்காட்சியகம், நூலகம், ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அரங்கம், உணவு விடுதி, அஜர்பைஜான் மொழியில் துறை, பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நடத்துவதற்கான அரங்குகள், நீச்சல் குளம் ஆகியவை இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.[5] இந்தக் கட்டிடமானது 2013 ஆம் ஆண்டு உலக கட்டிடக்கலை திருவிழா மற்றும் பைனியல் இன்சைட் திருவிழா ஆகிய இரு விழாக்களிலும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[6]

2007 ஆம் ஆண்டில், ஒரு போட்டி நடத்தப்பட்டதன் பிறகு, மையத்தின்  வடிவமைப்பாளராக முகமது ஹதித் நியமிக்கப்பட்டார்.[7] லண்டன் டிசைன் மியூசியம் சார்பில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த கட்டிடம் என்ற விருதைப் பெற்றது.[8][9] கட்டிடத் துறையின் நோபல் என அழைக்கப்படும் பிரிட்ஸ்கெர் கட்டிடக்கலை விருது பெற்ற முதல் பெண் இவர்தன்.[10]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Fire Strikes Heydar Aliyev Center In Baku". July 20, 2012. https://www.rferl.org/a/azerbaijan-baku-heydar-aliyev-center-fire/24651102.html. 
  2. Joseph, Giovannini. "Heydar Aliyev Center" September 17, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Zaha Hadid Architects. Heydar Aliyev Centre பரணிடப்பட்டது 2010-11-05 at the வந்தவழி இயந்திரம்
  4. "President of Azerbaijan Took Part in the Opening of the Heydar Aliyev Center (Russian)". Archived from the original on 2012-05-12. பார்க்கப்பட்ட நாள் 2012-05-11.
  5. "Heydar Aliyev Center - Baku, Azerbaijan | Zaha Hadid Architects" Inexhibit, October 14, 2016.
  6. "Heydar Aliyev Centre by Zaha Hadid Architects." Dezeen Magazine, July 11, 2013.
  7. "The Heydar Aliyev Center By Zaha Hadid Architects In Baku, Azerbaijan | Yatzer" (in en). Yatzer. 2013-11-15. https://www.yatzer.com/heydar-aliyev-center-zaha-hadid-architects-baku-azerbaijan. 
  8. Montgomery, Angus. "Zaha Hadid building is 'best design of 2014'". www.designweek.co.uk. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
  9. Wainwright, Oliver. "Wave of protest as Zaha Hadid's Baku prizewinner causes controversy". www.theguarian.com. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
  10. "Dame Zaha Hadid awarded the Riba Gold Medal for architecture - BBC News". Bbc.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.

வெளி இணைப்புகள்[தொகு]