உள்ளடக்கத்துக்குச் செல்

ஐஓஎஸ் 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐஓஎஸ் 5 அப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்படும் ஐஓஎஸ் நகர்பேசி இயங்குதளத்தின் ஐந்தாம் பதிப்பாகும். செப்டம்பர் 10, 2012 அன்று இந்த இயங்குதளம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இந்தப்பதிப்பின் மூலம் ஐபோன் 3ற்கான ஆதரவு மற்றும் ஐபோட் டச் இரண்டாம் தலைமுறை கருவிகளுக்குமான ஆதரவு நிறுத்தப்பட்டது. ஐபோன் 3ஜிக்குப் பிந்திய நகர்பேசிகளுக்கு இந்த இயங்குதளம் ஆதரவை வழங்கியது.

அக்டோபர் 11, 2011 இல் அப்பிள் நிறுவனத்தின் தலமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஐபோன் 4எஸ் அறிமுகம் செய்யபட்டதுடன், இந்தப் பதிப்பு ஐஓஎஸ்உடன் ஐகிளவுட், பயனருக்கு குரல்மூலம் உதவியாளராகப் பணியாற்றும் சிரி ஆகியவை மேலதிகமாக சேர்க்கப்படன.

ஐகிளவுட்

[தொகு]

ஐகிளவுட் செயலி மூலம் பயனர்கள் தங்கள் படிமங்கள், பாடல்கள் போன்ற இலத்திரணியல் கோப்புகளை முகிலக் கணனிகளில் சேமித்து வைக்கக்கூடியதாக உள்ளமை ஒரு சிறப்பியல்பாகும். ஒவ்வொரு பயனரும் ஐந்து ஜிகாபைட் அளவுள்ள சேமிப்பிடத்தை முகிலக் கணனிகளில் பெற்றுக்கொண்டனர்.

ஏனைய செயற்பாடுகள்

[தொகு]

இந்தப் பதிப்பு ஐஓஎஸூடன் ஐமெசேஜஸ் எனும் செயலி வெளியிடபட்டது. இந்தச் செயலி மூலம் ஐஓஎஸ் சார் இயங்குதளத்தில் இயங்கும் எந்தக்கருவியைப் பயன்படுத்தும் பயனருக்கும் செய்திகளை அனுப்பும் வசதி செய்துகொடுக்கப்பட்டது. இது வரை ஐபோட் டச் போன்ற கருவிகளை செய்திகளைப் பரிமாறும் வசதிகள் இல்லாதிருந்த போதும் இம்முறை மூலம் ஐபோட் டச் பயனர்களும் செய்திகளை அனுப்பிப்பெறும் வசதியைப் பெற்றுக்கொண்டனர்.

ரிமைண்டர்ஸ் எனும் புதிய செயலி இந்தப்பதிப்பில் இணைக்கப்பட்டதுடன் இந்த செயலி மூலம் பயனர்கள் தாம் செய்ய வேண்டிய காரியங்களை குறுத்து வைத்துக்கொள்ளக்கூடிய வசதி வாய்ப்பு வழங்கப்பட்டது.

நியூஸ்ஸ்டான்ட் எனும் புதிய செயலியும் இந்தப்பதிப்பில் இணைக்கப்பட்டது. இந்தச்செயலியின் மூலம் பயனர் சந்தா செலுத்தியுள்ள சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை வாசித்துக்கொள்ளலாம்.

மேலும் ஐஓஎஸ் 5 மூலம் கம்பியற்ற முறையில் ஐடியூன்ஸ் உடன் தொடர்பாடக்கூடிய வசதி வழங்கப்பட்டது. முந்தைய பதிப்புகளில் ஒரு ஐஓஎஸ் மூலம் இயங்கும் கருவியை உயிர்ப்பிக்க ஒரு கணனிக்கு இணைத்து கணனியில் உள்ள ஐடியூன்ஸ் மென்பொருள் அதனை நிறைவேற்ற வைண்டும். ஆயினும் இந்த பதிப்பில் இருந்து கருவியை கருவியில் இருந்தவாறே உயிர்ப்பிக்கும் செயற்பாடு வழங்கப்பட்டது.

டுவிட்டர் சமூக வலைத்தளத்திற்கான உள்ளமைந்த ஆதரவை இந்தப்பதிப்பு இயங்குதளம் வழங்கியது. அதாவது புகைப்படங்கள், மற்றும் ஒளிப்படக்கருவி மென்பொருள் போன்றவற்றில் இருந்து நேரடியாக படிமங்களை சமூக வலைத்தளத்தில் பகிரும் சந்தர்ப்பத்தை வழங்கியது.

பிழைகள்

[தொகு]

இந்த பதிப்பின் ஆரம்ப நிலைகளில் மின்கலத்தை விரைவாக விரயமாக்கும் சில பிழைகள் இருந்தமையை அப்பிள் ஒத்துக்கொண்டது. இதற்கான தீர்வுகளை புதிய பதிப்புகளில் அப்பிள் வழங்கியது.

சிலர் இந்தப்பதிப்பு உள்ள ஐபோன் 4 கருவிகளில் உரையாடும்போது சில எதிரொலிகள் கேட்பதாக முறையிட்டனர். இதற்கான தீர்வுகளையும் வழங்கியதாக அப்பிள் அறிவித்தது.

வரவேற்பு

[தொகு]

பயனர் மத்தியில் இந்தப்பதிப்பு நல்ல வரவேற்பைப்பெற்றது. குறிப்பாக புதிய நொடிபிகேசன் சென்டர் மற்றும் கம்பியில்லா முறையில் ஐடியூன்உடன் இணைதல் போன்ற பயன்பாடுகள் பயனர் மத்தியில் இந்தப்பதிப்பு இயங்குதளம் பற்றி நன்மதிப்பு ஏற்படுத்தியது.


ஐஓஎஸ் இயங்குதளங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஓஎஸ்_5&oldid=3477795" இலிருந்து மீள்விக்கப்பட்டது