ஐஒஎஸ்-ஜெயில்பிறேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
iOS கண்டுவருகின்றனர் ஸ்டோர், சிடியா

ஐஓஎஸ் சிறை முறித்தல் (iOS jailbreaking) அல்லது ஐஓஎஸ் ஜெயில்பிறேக் என்பது ஐஓஎஸ் இயக்குதளத்தில் இயங்கும் சாதனங்களில் தனிப்பட்ட கருவக மென்பொருட்கள் மூலம் இச்சாதனங்களின் உருவாக்குனர் ஆப்பிள் செயல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை மீறுகின்ற செயல்பாட்டைக் குறிக்கிறோம்.

ஐஒஎஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நவீன இலத்திரனியல் சாதனங்களான ஐ-போன், ஐபாட் டச், ஐ-பேடு, ஆப்பிள் டி.வி ஆகிய சாதனங்களின் இயக்கு தளமாகவுள்ளது. ஆனால் இவை அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் வரையறைக்குள் இயங்கவேண்டிய கட்டாயமுள்ளது. அதாவது ஏதாவதொரு மாற்றங்கள் செய்ய வேணடிருப்பின் ஆப்பிளின் இணையத்தளத்தினூடாகவே அம்மாற்றங்களை செய்யவேண்டும். தேவையானவைகள் சில வேளைகளில் இத்தளத்தில் கிடைக்காது. ஆனால் மாற்றுத்தளங்களில் கிடைக்ககூடியதாகவிருக்கும். ஆனால் ஐஒஎஎஸ் அவைகளை தரவிறக்க அனுமதிக்காது. இக்கோட்பாடானது எல்லோருக்கும் பொருந்தாது. ஆகவே இவ் வரையறை மீறும் செயல்பாட்டினை சிறை முறித்தல் என்கிறோம்.

சிறை முறித்தல் ஐஓஎஸ் பயனர்களுக்கு இயக்குதளத்திற்கான அடிவேர் அணுக்கத்தை வழங்குகிறது. இதனால் ஆப்பிள் ஸ்டோரில் இல்லாத கூடுதல் பயன்பாட்டுச் செயலிகள், விரிவுச் செயலிகள், வார்புருக்கள் போன்றவற்றை தரவிறக்க முடிகிறது. சிறை முறித்தல் ஒரு வகையான உரிமை ஏற்றமாகும். இப்பொருளில் இச்சொல் மற்ற கணினி அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சாதனைத்தை அதன் "சிறையிலிருந்து"[1] விடுவிப்பதால் இது சிறை முறித்தல் எனப்படுகிறது. யூனிக்சு அமைப்புகளில் சிறை என்ற சொல் தொழில்நுட்பச் சொல்லாகப் பயனில் உள்ளது. ஓர் சிறை முறிக்கப்பட்ட ஐ-போன், ஐபாட் டச், அல்லது ஐ-பேடிலிருந்து ஆப்பிள் ஸ்டோரை அணுகவும் பிற வழமையான செயல்பாடுகளை இயக்கவும் முடியும்.

அடிவேர் அணுக்கம் பெற்ற அண்ட்ராய்டு சாதனங்களைப் போலன்றி, ஆப்பிளால் அனுமதிக்கப்படாத மென்பொருளை பயன்படுத்த சிறை முறித்தல் தேவையானதாகும். இது அமெரிக்க சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனமானது தனது பொறுப்புறுதியை உடனடியாக இரத்துசெய்துவிடும் என அறிவித்துள்ளது.[2]

பிரபலமான ஜெயில்பிறேக் மென்பொருள்கள்[தொகு]

  1. கிறீன்பொய்ஷன்
  2. ஸ்நோபிறீஸ்
  3. ரெட்ஸ்நோ
  4. அப்சிந்
  5. இவாஷன்
  6. இவாஷன்7

இவற்றின் மூலம் ஜெயில்பிறேக் பண்ணப்பட்ட பின் சிடியா (ஆப்பிள் களஞ்சிய தளற்திற்கு சமமான வேற்றுத் தளமாகும்) மூலம் இலவசமாக மென்பொருள்களை தரவிரக்கிக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்யலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mike Keller (February 13, 2012). "Geek 101: What Is Jailbreaking?". Geek Tech. PCWorld. பிப்ரவரி 15, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 15, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. Leander Kahney (July 26, 2010). "Apple's Official Response To DMCA Jailbreak Exemption: It Voids Your Warranty". Cult Of Mac. October 26, 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஒஎஸ்-ஜெயில்பிறேக்&oldid=3546726" இருந்து மீள்விக்கப்பட்டது