எண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம் (Digital Millennium Copyright Act, DMCA) என்பது உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO) 1996 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய இரு உடன்படிக்கைகளை செயலாக்கும் வண்ணம் கொண்டுவரப்பட்ட ஓர் ஐக்கிய அமெரிக்க பதிப்புரிமைச் சட்டமாகும். இந்தச் சட்டம் பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் ( எண்மிய உரிமங்கள் மேலாண்மை அல்லது DRM என பொதுவாக அறியப்படும்) முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது. பதிப்புரிமை மீறப்பட்டிருக்காவிடினும் அதற்கு வழிவகை செய்தலே குற்றமாகும். தவிர இணைய வழி பதிப்புரிமை மீறல்களுக்கான தண்டனையையும் கூட்டியுள்ளது.

அக்டோபர் 12, 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேலவையில் எதிர்ப்புகள் எதுமின்றி நிறைவேற்றப்பட்டு 1998ஆம் ஆண்டின் அக்டோபர் 28 அன்று குடியரசுத் தலைவர் பில் கிளின்டனால் சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டங்களின் தொகுப்பான 17வது ஐக்கிய அமெரிக்க சட்டத்தொகுப்பை திருத்தி பதிப்புரிமையின் வீச்சை விரிவாக்கியபோதிலும் தமது பயனர்களின் பதிப்புரிமை மீறல்களுக்கு இணைய சேவை வழங்குனர்களுக்கான பொறுப்பைக் குறைத்தது.

ஐரோப்பிய ஒன்றியம் இதனையொத்த சட்டமியற்ற மே 22, 2001 அன்று ஐரோப்பிய ஒன்றிய பதிப்புரிமை வழிகாட்டல் (EUCD) ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒன்றிய உறுப்பினர் நாடுகள் சட்டமியற்றும்.

மேற்கோள்கள்[தொகு]

Litman, Jessica (2000). Digital Copyright. Berlin: Prometheus Books. பக். 208. ISBN 1-57392-889-5. 

வெளியிணைப்புகள்[தொகு]