ஐஎன்எஸ் மகேந்திரகிரி (2023)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐஎன்எஸ் மகேந்திரகிரி (INS Mahendragiri), இந்தியக் கடற்படைகாக மகாராட்டிரா மாநிலத்தின் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட 7வது போர்க் கப்பல் ஆகும். இதனை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் 1 செப்டம்பர் 2023 அன்று இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணித்தார்.[1][2]149 மீட்டர் நீளமும், 17.8 மீட்டர் அகலமும் கொண்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க் கப்பல் மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியது.[3]

இந்தியக் கடற்படைக்காக திட்டம் 17 ஆல்ஃபா (பி17ஏ) கீழ் கட்டப்பட்ட 7வது போர்க் கப்பல் மகேந்திரகிரியாகும். எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், அதிநவீன ஆயுதங்கள், தொலையுணர்வு சாதனங்களுடன் கூடிய இந்தப் போர்க் கப்பல். இது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அதிநவீன போர்க் கப்பலாகும். உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயார் செய்யப்பட்ட கப்பல்களில் மிகவும் முன்னேறிய வகையைச் சார்ந்தது. இது எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. இந்திய பசுபிக் கடல் பகுதியில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின்-கடற்படையினரின் சவால்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்தியாவின் தற்சார்பு திட்டத்தின் கீழ் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.[4][5]

பி17-ஏ திட்டத்தின்கீழ் மொத்தம் 7 போர்க் கப்பல்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, கடந்த 2019 முதல் 2022 வரை 5 போர்க் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

இந்த வரிசையில் 6-வதாக ஐஎன்எஸ் விந்தியகிரி (2023) என்ற போர்க் கப்பலை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தார். பி17ஏ போர்க் கப்பல்களின் கட்டுமானத்துக்காக 75 சதவீத கருவிகள் மற்றும் இதர அமைப்பு முறைகள், உள்நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Livemint (2023-09-01). "Warship Mahendragiri with advanced weapons, sensors launched: Top points". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.
  2. அதிநவீன அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
  3. "Indian Navy launches Mahendragiri: All you need to know about the latest warship". cnbctv18.com (in ஆங்கிலம்). 2023-09-01. பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.
  4. "Launch of the warship Mahendragiri in Mumbai". பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.
  5. "India's maritime strength is quintessential for our economic and strategic upsurge -Vice President". pib.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_மகேந்திரகிரி_(2023)&oldid=3785845" இலிருந்து மீள்விக்கப்பட்டது