ஏ. எம். எச். நாசீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. எம். எச். நாசீம் (A. M. H. Nazeem) என்பவர் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியான  புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1] இவர் புதுச்சேரியின் முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். நாசீம் காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் நான்கு முறையும், காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறையும் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ள நாசிம் 2014ஆம் ஆண்டு புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

நாசீமின் அரசியல் வாழ்க்கை 1983ஆம் ஆண்டு தொடங்கியது. காரைக்கால் வடக்கு தொகுதியிலிருந்து 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலிருந்தபோது சுகாதாரத்துறை அமைச்சரானார். 2006-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.[3] 2011-ல் புதிதாக உருவாக்கப்பட்ட காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வி. கே. கணபதியைக் கிட்டத்தட்ட 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார் நாசீம்.[4][5] 2016 தேர்தலில் கே. ஏ. யு. அசனாவிடம் 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2021 தேர்தலில், நாசீம் தனது போட்டியாளரான கே. ஏ. யு. அசனாவைத் தோற்கடித்தார்.[6]

தனிப்பட்ட தகவல்[தொகு]

நாசீமின் தந்தை பெயர் அமீது மரைக்காயர் என்பவராவார். தாயார் நபிசா உம்மாள். இவருக்கு நுக்மன் செய்யது என்ற மகனும், நஜிலா மார்ச்சியானா என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் நாடிம் காரைக்காலில் வசித்துவருகின்றார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "DMK MLA faces tough battle as he aims for 6th consecutive term - Times of India".
  2. http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-fields-a-m-h-najeem-puducherry-ls-seat-195456-lse.html
  3. "காரைக்கால் வளர்ச்சியை சிந்தித்து வாக்களியுங்கள்: நாஜிம் பிரசாரம்".
  4. "Puducherry Assembly elections 2021, Karaikal South constituency profile: AIADMK's KAU Asana defeated DMK's AMH Nazeem by just 20 votes-Politics News, Firstpost". Firstpost. 27 March 2021.
  5. "Pondicherry Assembly Election Results in 2011". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
  6. "Election Commission of India". results.eci.gov.in.
  7. http://www.thehindu.com/news/cities/puducherry/dmk-nominates-nazeem-in-puducherry/article5772921.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._எச்._நாசீம்&oldid=3712519" இலிருந்து மீள்விக்கப்பட்டது