உள்ளடக்கத்துக்குச் செல்

ஏர்னெஸ்ட் மக்கின்டயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர்னெஸ்ட் மக்கின்டயர்
Ernest MacIntyre
பிறப்புஏர்னெஸ்ட் தளையசிங்கம் மக்கின்டயர்
(1934-09-26)26 செப்டம்பர் 1934
கொழும்பு, இலங்கை
இறப்பு17 திசம்பர் 2025(2025-12-17) (அகவை 91)
சிட்னி, நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா
இருப்பிடம்சிட்னி, ஆத்திரேலியா
தேசியம்இலங்கையர்/ஆத்திரேலியர்
கல்விஇளங்கலை (பேராதனைப் பல்கலைக்கழகம்)
சம்பத்தரிசியார் கல்லூரி(யாழ்ப்பாணம்)
பணிநாடக ஆசிரியர்
பணியகம்பேராதனைப் பல்கலைக்கழகம், அக்குவைனாசு பல்கலைக்கழகக் கல்லூரி (பணிப்பாளர்)[1]
அறியப்படுவதுநாடக ஆசிரியர், நாடக எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்He Still Comes From Jaffna
Rasanayagam's Last Riot
சமயம்கிறித்தவர்
பெற்றோர்ஏர்னெஸ்ட் மக்கின்டயர் (மூத்தவர்), லூசில் மக்கின்டயர்
வாழ்க்கைத்
துணை
நளினி மக்கின்டயர்
பிள்ளைகள்2
உறவினர்கள்காந்தி மாணிக்கசிங்கம் மக்கின்டயர் (சகோதரர்)

ஏர்னெஸ்ட் தளையசிங்கம் மக்கின்டயர் (Ernest Thalayasingam MacIntyre,[2] 26 செப்டம்பர் 1934 – 17 திசம்பர் 2025)[3] இலங்கையைச் சேர்ந்த ஆங்கில நாடகாசிரியர் ஆவார். இவர் இலங்கை ஆங்கில நாடக மேடைகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பரவலாக அறியப்பட்டவர்.[4]

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

எர்னெஸ்ட் மக்கின்டயர் கொழும்பு நகரில்[5] 1934 செப்டம்பர் 26 இல் பிறந்தார்.[6] யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் தங்கியிருந்து கல்வி கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] 1960களில் மெக்கின்டயர் இலங்கையில் மிக வெற்றிகரமான ஆங்கில நாடகாசிரியராகப் பாராட்டப்பட்டார். 'Stage and Set' என்ற நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்து பல பன்னாட்டு நாடகங்களையும் மற்றும் தான் எழுதிய நாடகங்களையும் மேடையேற்றினார்.[6][7]

1961 முதல் 1967 வரை இலங்கை வான்படையில் பணியாற்றினார். பின்னர் 1969-69 காலப்பகுதியில் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியின் நாடகப் பள்ளியில் பணிப்பாளராகப் பணியாறினார். 1969 முதல் 1973 வரை யுனெஸ்கோ திட்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.[1][6]

1974 ஆம் ஆண்டில் இவர் ஆத்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த போதிலும், இலங்கை சென்று பல நாடகக் கலைஞர்களைப் பயிற்றுவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், எஃப். சி. லுடோவிக்கின் He Comes from Jaffna என்ற நாடகத்தை சிட்னியில் மேடையேற்றினார்.[4] 2011-13 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5]

2009 இல் "Antigone in Sri Lanka as IRANGANI" என்ற நாடகத்தை எழுதினார்.[8] 2009 ஆம் ஆண்டில் இந்நாடகம் சிட்னியிலும், 2010 ஆம் ஆண்டில் கான்பராவிலும் மேடையேறியது.[9] 2011 ஆம் ஆண்டில் இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப்பட்டது.

படைப்புகள்

[தொகு]
  • The Full Circle of Caucasian Chalk, 1967[6]
  • The President of the Old Boys' Club[6]
  • He Still Comes From Jaffna[4]
  • Let's Give Them Curry, 1981[10]
  • The Education of Miss Asia, 1971[1][11]
  • Rasanayagam's Last Riot, 1990[4]
  • The Loneliness of the Short-Distance Runner, 1991: புதுதில்லி[12]
  • A Somewhat Mad and Grotesque Comedy, 1991: புதுதில்லி[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Ekanayake, C.. "An asian comedy". Sunday Observer (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 2011-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110805181426/http://www.sundayobserver.lk/2007/01/28/mag06.asp. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-06. Retrieved 2016-03-30.
  3. "Ernest MACINTYRE Obituary". SMH. December 20, 2025.
  4. 4.0 4.1 4.2 4.3 Sriskanthadas, Bhagavadas (2007-05-20). "Jaffna and Colombo". The Nation இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303173135/http://www.nation.lk/2007/05/20/eyefea4.htm. 
  5. 5.0 5.1 குலசேகரம் சஞ்சயன் (28 March 2016). "கொள்கைக்காக உயிரைத் துறந்தவன் தான் என் மிகச் சிறந்த படைப்பு" (தமிழ்). சிட்னி: சிறப்பு ஒலிபரப்புச் சேவை.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "Macintyre, Ernest". The Australia Literature Resource. Retrieved 4 அக்டோபர் 2010.
  7. Chandrarathne, Ranga (2008-07-27). "Impressions on the sand of time". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 2012-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121011175347/http://www.sundayobserver.lk/2008/07/27/imp03.asp. 
  8. "Irangani: It's 5th century Antigone set in 80s Sri Lanka". சண்டே டைம்சு. 16 செப்டெம்பர் 2012. Retrieved 30 மார்ச் 2016.
  9. "Antigone in Sri Lanka as IRANGANI". Riverside Archives. Retrieved 30 March 2016.
  10. Migration, Dispossession, Exile, and the Diasporic Consciousness by Nandan, Satendra in Mohanram, Radhika. Shifting continents - colliding cultures. p. 19. ISBN 90-420-1271-4.
  11. The Don (1997-06-22). "Where subtlety, stagecraft held sway". Sunday Times. http://www.sundaytimes.lk/970622/plus7.html. 
  12. Dissanayake, Aditha (2007-10-19). "Mirror of a changing nation: Review of An Anthology of Sri Lankan English Literature". Asian Tribune. http://www.asiantribune.com/index.php?q=node/7868. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்னெஸ்ட்_மக்கின்டயர்&oldid=4426076" இலிருந்து மீள்விக்கப்பட்டது