உள்ளடக்கத்துக்குச் செல்

ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் பேராவூரணி-அறந்தாங்கிசாலையில் முடப்புளிக்காடு ஏந்தல் என்னுமிடத்தில் உள்ளது. பேராவூரணியிலிருந்து 1/2 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன்

[தொகு]

இக்கோயிலின் மூலவர் நீலகண்டப் பிள்ளையார் ஆவார்.ஆனால் விழாக்கள் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகனுக்கு நடத்தப்பெறுகின்றன. [1]

வரலாறு

[தொகு]

தஞ்சாவூரை ஆண்ட துளசி மகாராஜா தன் அமைச்சருடன் ஆவுடையார் கோயிலை நோக்கிச் சென்றார். நீரழிவு நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவருடைய அமைச்சருக்கு மருந்து காணச் சென்றார். அப்போது நீலகண்டப் பிள்ளையாரை பலர் வணங்குவதைக் கண்டார். அக்கோயிலின் திருநீற்றினை தரித்தவுடன் அமைச்சருக்கு நோய் நீங்கியது. மன்னர் மகிழ்ச்சியடைந்து கோயிலை விரிவாக்கம் செய்தார். பேராவூரணியை அடுத்துள்ள தென்னங்கொல்லையில் ஒரு வேலி நிலத்தையும் மன்னர் அளித்துள்ளார். [1]

விழாக்கள்

[தொகு]

எந்த விநாயகர் கோயிலிலும் நடைபெறாத தீமிதித் திருவிழா இங்கு நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் நடைபெறுகின்ற காவடித்திருவிழாவின்போது பால் குடம், பால் காவடி, கரும்பு கட்டுதல் போன்றவை நடைபெறுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மார்கழி மாதத்தில் தினமும் காலையில் நந்திக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்

[தொகு]