உள்ளடக்கத்துக்குச் செல்

ஏடீசுக் கொசுவினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏடீசு
Aedes
ஏடீசு எகிப்தி
Aedes aegypti
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஈ-கொசு இனம்
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
ஏடீசு (Aedes)

இனம்

See List of Aedes species
Ae. aegypti
Ae. albopictus
Ae. australis
Ae. cantator
Ae. cinereus
Ae. polynesiensis[1]
Ae. rusticus
Ae. vexans

எடீசு (இலங்கை வழக்கு: ஈடிசு, ஆங்கிலம்: Aedes) என்பது கொசுவினத்தில் ஓர் உள்ளினம். இவ்வினம் முதலில் வெப்பமண்டலத்திலும் மென்வெப்ப மண்டலத்திலும் காணப்பட்டது, ஆனால் இப்பொழுது அண்டார்ட்டிக்காவைத்தவிர மற்றெல்லாக் கண்டங்களிலும் பரவிக் காணப்படுகின்றது. மாந்தர்களின் செயற்பாடுகளால் சில இனங்களில் இப்பரவல் நடந்துள்ளது. ஏடீசு இனத்தில் 700 வகைகள் உள்ளன. ஏடீசு அல்போபிக்டசு (Aedes albopictus) என்னும் வீரியமான இனம் தென்-வட அமெரிக்காவில் இருந்து பயன்படுத்தப்பட்ட டயர் வணிகத்தின் (used-tire trade) வழி பரவியுள்ளது. யோஃகன் வில்லெம் மெய்கன் (Johann Wilhelm Meigen) என்பவரால் 1818 இல் முதன்முதலாக விளக்கப்பட்டு அவர் இட்டப் பெயரே ஏடீசு என்பது. இச்சொல் கிரேக்க மொழியில் இனிமையற்ற, அருவருப்பூட்டும் என்னும் பொருளில் அமைந்த சொல்லாகிய ἀηδής, aēdēs என்பதில் இருந்து பெற்றது. இவ்வினத்தில் சில வகைகள் கடுமையான நோயை ஊட்டும் தெங்கி (டெங்கு) காய்ச்சலையும், சிக்குன்குனியாவையும், மஞ்சக்காய்ச்சலையும் (yellow fever) ஊட்டுகின்றன. இவை மட்டுமன்றி அண்மையில் அறியப்பட்ட, மாங்காய்த்தலை போன்ற பிறவிக்குறைபாடுகளை ஊட்டும் சிக்கா (Zika) வைரசையும் தாங்கிவருவனவாகவும் உள்ளன[2]. பாலினேசியாவில் ஏடீசு பாலினேசியென்சிசு (Aedes polynesiensis) என்னும் இனம் யானைக்கால் நோயை (human lymphatic filariasis) உண்டாக்குவதாகவும் உள்ளது

ஏடீசு இனக் கொசுக்களை ஓவித்திராப்பு என்னும் கருவிவழி கண்டுபிடிக்கவும் கண்காணிக்கவும் முடியும்.

மஞ்சக்காய்ச்சலை ஊட்டும் எடீசு எகிப்தி (Aedes aegypti) இனத்தின் மரபணுமுழுமத்தை (genome) பிராடுக் கழகமும் (Broad Institute) மரபணுமுழும ஆராய்ச்சிக் கழகமும் (The Institute for Genomic Research) கண்டு வரிசைப்படுத்தியுள்ளன. முதலில் ஆகத்து 2005 இல் முதற்கட்ட வரிசையையும் அதன் அலசலையும் செய்து சூன் 2007 இல் வெளியிட்டது [3] குறிப்புகள் சேர்க்கப்பட்ட மரபணு முழுமம் வெக்டர்பேசு (VectorBase) என்னும் இடத்தில் கிடைக்கின்றது.[4]

அடையாளக்கூறுகள்

[தொகு]

ஏடீசுக் கொசுக்களின் உடலிலும் கால்களிலும் கறுப்பும் வெள்ளையுமான குறிகள் காணும்படியாக இருக்கும். பெரும்பாலான மற்ற கொசுவினங்கள் போலன்றி இவை பகலில் மட்டுமே உலாவந்து கடிக்கும். காலையிலும் மாலை சாயுங்காலப்பொழுதிலுமே அதிகமாக கடிக்கின்றன[5]

நோயூட்டுவதில் இவற்றின் பங்கு

[தொகு]

ஏடீசு இனத்தைச் சேர்ந்த கொசுகள் நோயூட்டும் நுண்ணுயிர்களையும் நுண்மங்களையும் தாங்கிவருகின்றன. ஏடீசு இனத்தில் இரண்டுவகையானவை, ஏடீசு எகிப்தி என்னும் இனமும், ஏடீசு அல்போபிக்டசு என்னும் இனமும் தெங்குக் காய்ச்சல், மஞ்சக்காய்ச்சல், மேற்கு நைல் காய்ச்சல், சிக்குன்குனியா, குதிரைக்கு ஏற்படும் மண்டைநோய் முதலியவற்றை உண்டாக்குகின்றன.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. http://www.who.int/denguecontrol/mosquito/en/
  2. CDC Transmission of Zika virus
  3. Nene V, Wortman JR, Lawson D (2007). "Genome sequence of Aedes aegypti, a major arbovirus vector". Science 316 (5832): 1718–23. doi:10.1126/science.1138878. பப்மெட்:17510324. 
  4. "Aedes aegypti". VectorBase. Archived from the original on 1 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. http://www.who.int/denguecontrol/faq/en/index5.html

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடீசுக்_கொசுவினம்&oldid=3928290" இலிருந்து மீள்விக்கப்பட்டது