உள்ளடக்கத்துக்குச் செல்

ஏசிசுட்டாசியா டாய்சில்லியனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏசிசுட்டாசியா டாய்சில்லியனா
Asystasia dalzelliana
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Eudicots
குடும்பம்:
பேரினம்:
Asystasia
இனம்:
dalzelliana
இருசொற் பெயரீடு
Asystasia dalzelliana
வேறு பெயர்கள்

Asystasia violacea Dalzell ex C.B.Clarke

ஏசிசுட்டாசியா டாய்சில்லியனா (தாவர வகைப்பாடு : Asystasia dalzelliana; ஆங்கிலம் : Violet Asystasia [1]) என்பது தமிழக மூலிகைகளில் ஒன்றாகும். பூக்கும் தாவரத்தின் முண்மூலிகைக் குடும்பத்தில் உள்ள ஏசிசுட்டாசியா பேரினத்தின் கீழ் இத்தாவரம் வருகிறது. பல்லாண்டு வாழ்கின்ற(perennial) இயல்புடைய, இத்தாவரம் 60-100 மீட்டர் படரும் தன்மையுடையது ஆகும். தண்டின் கணுக்கள் சற்று பெரியதாக முடிச்சு போன்று இருக்கும். இலைகள் எதிர் எதிராக, முட்டைப் போன்ற வடிவத்துடன், சமச்சீரற்று காணப்படுகின்றன. பூக்கன் வெளிர்நீலமாகவும், உட்புறம் அடர்நீல நிறமாகவும் அமைந்து இருக்கின்றன. அடர்நிறத்தில் வெளிர்நிற புள்ளிகள் காணப்படுகின்றன. பூக்கும் பருவம் ஆகத்து முதல் நவம்பர் வரை ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
  1. மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Asystasia dalzelliana
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: