உள்ளடக்கத்துக்குச் செல்

எ வாக் டு ரிமெம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A Walk to Remember Poster.jpg
பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்ஆடம் ஷாங்க்மேன்
தயாரிப்பு
  • டேனிஸ் டி நோவி
  • ஹன்ட் லோரி
திரைக்கதைகரேன் ஜான்சன்
இசைமெர்வின் வாரன்
நடிப்பு
  • ஷேன் வெஸ்ட்
  • மாண்டி மூர்
  • பீட்டர் கொயட்
  • டேரில் ஹன்னா
ஒளிப்பதிவுஜூலியோ மெக்காட்
படத்தொகுப்புஎம்மா இ. கிக்ஹாக்ஸ்
கலையகம்
  • டி. நோவா பிக்சர்ஸ்
  • கேலார்டு பிலிம்ஸ்
  • பன்டோரா சினிமா
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் (வட அமெரிக்கா)
பன்டோரா சினிமா (சர்வதேசம்)
வெளியீடுசனவரி 25, 2002 (2002-01-25)
ஓட்டம்102 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$11.8 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$47.5 மில்லியன்[3]

எ வாக் டு ரிமம்பர் (A Walk to Remember) என்பது நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் என்பவர் எழுதி 1999 இல் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்டு ஆடம் ஷாங்க்மேன் என்பவர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கக் காதல் திரைப்படமாகும். இப்படத்திற்கு கரேன் ஜான்சன் திரைக்கதையை எழுதியிருந்தார். இதில் ஷேன் வெஸ்ட், பரப்பிசை பாடகர் மாண்டி மூர், பீட்டர் கொயட் மற்றும் டேரில் ஹன்னா ஆகியோர் நடித்திருந்தனர். வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸுக்காக டேனிஸ் டி நோவி மற்றும் ஹன்ட் லோரி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

தயாரிப்பு

[தொகு]

புத்தகத்தில் 1950 ஆம் ஆண்டுகளில் கதை நடப்பது போல் அமைக்கப்பட்டிருந்த போதும், திரைப்படத்தில் 1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில் 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கதை நகர்வது போல் எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் 2001 ஏப்ரல் முதல் மே வரை வட கரொலைனாவின் வில்மிங்டனில் கிட்டத்தட்ட 40 நாட்கள் படமாக்கப்பட்டது. இந்தப் படமும், புத்தகத்தைப் போலவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்த ஸ்பார்க்ஸின் சகோதரி டேனியல் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

ஏ வாக் டு ரிமம்பர் ஜனவரி 25,2002 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 11.8 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட படம் உலகளவில் 47.5 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இத்திரைப்படம் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ராட்டன் டொமேட்டோஸ் 10க்கு 4.1 என்ற மதிப்பெண் அளித்தது. [4][5] மாண்டி மூர் மற்றும் ஷேன் வெஸ்ட் ஆகியோர் "இயல்பான" நடிப்பை வெளிப்படுத்தியதாக பாராட்டப்பட்டனர். [6] மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபிஸில் ஓரளவிற்கு வசூலைப் பெற்றது. அமெரிக்காவில் மட்டும் $41,281,092 வசூல் செய்தது.[7] ஆசியாவில் மிகச் சாதாரண வெற்றியைப் பெற்றது. மொத்தமாக இத்திரைப்படம் உலகம் முழுவதும் $47,494,916 வசூல் செய்தது.

இசையமைப்பு

[தொகு]

மெர்வின் வாரன் படத்தின் ஒலிப்பதிவைக் கையாண்டுள்ளார். படத்தின் முதல் இசை எபிக் ரெக்கார்ட்ஸ் மற்றும் சோனி மியூசிக் சவுண்ட் டிராக்ஸ் ஆகியவற்றால் ஜனவரி 15,2002 அன்று வெளியிடப்பட்டது.[8] வற்றுள் மாண்டி மூர் மற்றும் ஸ்விட்ச்ஃபுட், ரேச்சல் லாம்பா உட்பட மற்றும் பலரின் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A Walk to Remember (PG)". British Board of Film Classification. March 6, 2002. Archived from the original on October 16, 2013. Retrieved February 12, 2016.
  2. "A Walk to Remember (2002) - Financial Information". The Numbers. Archived from the original on November 26, 2022. Retrieved July 31, 2022.
  3. 3.0 3.1 "A Walk to Remember (2002)". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். May 2, 2002. Archived from the original on March 27, 2006. Retrieved February 12, 2016.
  4. "Rotten Tomatoes — A Walk to Remember". Retrieved 2007-07-12.
  5. Overstreet, Jeffrey (January 23, 2002), A Walk to Remember, Christianity Today, archived from the original on மே 3, 2008, retrieved நவம்பர் 14, 2009
  6. Ebert, Roger (2002-01-25). "A Walk to Remember". Archived from the original on 2012-10-07. Retrieved 2007-07-12.
  7. "A Walk to Remember at Hollywood.com". Archived from the original on 2012-12-09. Retrieved 2007-07-12.
  8. ""Only Hope" from A Walk to Remember (Music from the Motion Picture) by Various Artists on iTunes". ஐ-டியூன்ஸ். January 15, 2002. Archived from the original on June 17, 2014. Retrieved February 14, 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_வாக்_டு_ரிமெம்பர்&oldid=4245955" இலிருந்து மீள்விக்கப்பட்டது