எஸ். பாலசுப்பிரமணியன்
எஸ். பாலசுப்பிரமணியன் | |
---|---|
பிறப்பு | பாலசுப்ரமணியன் திசம்பர் 28, 1935 சென்னை, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 19 திசம்பர் 2014 சென்னை, ![]() | (அகவை 78)
தொழில் | பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் அரசியல் விமர்சகர் |
தேசியம் | இந்தியன் |
துணைவர் | சரோஜா பாலன் |
பிள்ளைகள் | பா. சீனிவாசன் (மகன்) உட்பட 7 குழந்தைகள் |
குடும்பத்தினர் | எஸ். எஸ். வாசன் (தந்தை) பட்டம்மாள் வாசன் (தாய்) |
எஸ் எஸ் பாலன் என அறியப்படும் எஸ். பாலசுப்ரமணியன் (S. Balasubramanyan, டிசம்பர் 28, 1936 - டிசம்பர் 19, 2014)[1][2] திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், விகடன் குழுமத்தின் உரிமையாளரும் ஆவார்.[3]
ஜெமினி ஸ்டுடியோஸ், விகடன் குழுமம் ஆகியவற்றின் நிறுவனர் எஸ். எஸ். வாசனின் மகனான இவர் சென்னையில் பிறந்தவர். லயோலா கல்லூரியில் படித்து இளங்கலைப் (பி.காம்) பட்டம் பெற்றார். விகடன் குழுமத்தில், 1956 ஆம் ஆண்டில் இணைந்த இவர் தந்தையின் மரணத்திற்கு பின் ஜெமினி, விகடன் குழுமத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
திரைப்படத் துறை பங்களிப்புகள்[தொகு]
தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். சிரித்து வாழ வேண்டும், எல்லோரும் நல்லவரே போன்றவை இவர் இயக்கிய சில திரைப்படங்களாகும்.[3]
பத்திரிகைத் துறை பங்களிப்புகள்[தொகு]
1987ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர் அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார்.[4]
குடும்பம்[தொகு]
இவருக்கு ஆறு பெண்களும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இவரின் மகன் பா. சீனிவாசன் தற்போது விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார்.
மறைவு[தொகு]
19 டிசம்பர் 2014 அன்று சென்னையில் மாரடைப்பினால் காலமானார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன் காலமானார்". தினமலர். 19 திசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "பாலசுப்ரமணியன் மறைவு". விகடன். 19 திசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு". தி இந்து. 19 திசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "A trophy to remember". The Hindu. 19 திசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.