உள்ளடக்கத்துக்குச் செல்

எலியாகு கோகென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Infobox spy


எலியாஹு பென்-ஷால் கோஹென் (எபிரேயம்: אֱלִיָּהוּ בֵּן שָׁאוּל כֹּהֵן, அரபு: إيلياهو بن شاؤول كوهين ) (பிறப்பு:06 டிசம்பர் 1924-இறப்பு:18 மே 1965) எகிப்தில் பிறந்த எலியாஹு கோஹென், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் உளவாளியாக சிரியாவில் 1961-1965 ஆண்டுகளில் பணியாற்றும் போது, சிரியாவின் பெரிய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகி நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார்.. [1][2][3].ஒரு கட்டத்தில் சிரியா உளவுத் துறையால் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட, எலியா கோஹன், கையும் களவுமான பிடிக்கப்பட்டு, 1965ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

எலியாஹு கோஹன் 1924ல் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தில் மிஸ்ராகி & சியோனிய பக்தியுள்ள யூத குடும்பத்தில், எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தில் பிறந்தார். [1]லியாஹு கோஹென் கெய்ரோ ஃபாரூக் பல்கலைக்கழகத்தில் படித்தார். கோஹன் சரளமாக ஐந்து மொழிகளைப் பேசினார். [2]

அவரது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரர்கள் 1949ல் புதிதாக உருவான இஸ்ரேலுக்குப் புறப்பட்டனர், ஆனால் எலியாஹு கோஹன் மின்னணுவியலில் பட்டப்படிப்பை முடித்தார் மற்றும் யூத மற்றும் சியோனிச நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். 1952 எகிப்தியப் புரட்சிக்கு முன்னர், எலியாஹு கோஹன் அவரது சியோனிச நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.[3] 1950களில் அவர் நாட்டில் பல்வேறு இஸ்ரேலிய இரகசிய நடவடிக்கைகளில் பங்கேற்றார், இருப்பினும் எகிப்திய அரசாங்கத்தால் எகிப்திய யூதர்களை நாட்டிற்கு வெளியே கடத்தி, இஸ்ரேலில் மீள்குடியேற்றம் செய்த கோஹென் நடவடிக்கையில் எலியாஹு கோஹென் ஈடுபாட்டை அரசால் ஒருபோதும் நிரூபிக்க முடியவில்லை.

எலியாஹு கோஹன் டிசம்பர் 1956ல் எகிப்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யூத முகமை உதவியுடன் அவர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். [3][4]இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அவரை 1957ல் இராணுவ உளவுத்துறையில் அமர்த்தியது. அங்கு அவர் எதிர்-உளவுத்துறை ஆய்வாளராக ஆனார். அவரது பணி அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியது மற்றும் அவர் மொசாட்டில் சேர முயன்றார், ஆனால் மொசாட் அவரை நிராகரித்ததால் அவர் கோபமடைந்தார், மேலும் அவர் இராணுவ எதிர்-உளவுத்துறையில் இருந்து ராஜினாமா செய்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, டெல் அவிவ் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார்.[9] 1959ல் எலியாஹு கோஹைன் நாடியா மஜால்டை மணந்து மூன்று குழந்தைகளுக்கு தந்தையானர்.[5]

மொசாத்தில் உளவுப் பணி

[தொகு]

சிரியா அரசாங்கத்திற்குள் ஊடுருவி உளவுப்பணி மேற்கொள்ள மொசாட் எலியாஹு கோஹனை நியமித்தது..[12] அப்போது அர்ஜென்டினாவில் வாழ்ந்துவிட்டு சிரியாவிற்கு திரும்பிய தொழிலதிபர் என அவருக்கு தவறான அடையாளம் வழங்கப்பட்டது. அவரது அடையாள அட்டையை நிறுவ, கோஹன் 1961ல் புவெனஸ் அயர்சுக்குச் சென்றார். [6][7]புவெனஸ் அயர்சில் எலியா கோஹன் அரபு சமூகத்தின் மத்தியில் ஆடம்பரமாக வாழ்ந்தார். அவர் சிரியாவின் பாத் கட்சியின் அதிக அளவு பணம் வைத்திருப்பதை தெரியப்படுத்தினார். இந்த நேரத்தில் பாத் கட்சி சிரியாவில் சட்டவிரோதமானது. ஆனால் கட்சி 1963 இல் சிரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது.[8]

எலியா கோஹன் பிப்ரவரி 1962ல் கமேல் அமீன் தாபெத் என்ற பெயரில் டமாஸ்கஸ் நகருக்கு குடிபெயர்ந்தார்.[9][10] [4] சிரிய அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், செல்வாக்கு மிக்க பொது நபர்கள் மற்றும் இராஜதந்திர சமூகத்துடன் உறவுகளை கட்டியெழுப்புவதற்கு அவர் பயன்படுத்த வேண்டிய தந்திரங்களை மொசாட் மூலம் கவனமாக திட்டமிட்டார்.

கோஹன் அர்ஜென்டினாவில் இருந்ததைப் போலவே தனது சமூக வாழ்க்கையை சிரியாவிலும் தொடர்ந்தார், அவர் தனது வீட்டில் சிரிய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிறருக்கு விருந்துகளை நடத்தினார். இந்த விருந்துகளில் எலியா கோஹைன் மதுபானம் மற்றும் விபச்சாரிகளை விநியோகித்தார்". மேலும் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் தங்கள் பணி மற்றும் இராணுவ திட்டங்களை வெளிப்படையாக விவாதிப்பார்கள். அதை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். அவர் அரசாங்க அதிகாரிகளுக்கும் கடன் கொடுப்பார், மேலும் பலர் அவரிடம் ஆலோசனைக்காக வந்தனர்.[4]

உளவுத் தகவல்கள் சேகரித்தல்

[தொகு]

1961 மற்றும் 1961க்கும் இடையில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எலியா கோஹன் விரிவான அளவு மற்றும் பரந்த அளவிலான உளவுத் தகவல்களை வழங்கினார். இஸ்ரேல் எல்லையில் உள்ள சிரியாவின் கோலான் குன்றுகளுக்கு பயணித்து, சிரியா இராணுவத்தினரின் பதுங்கு குழிகளை நோட்டமிட்டார். பின் பதுங்கு குழிகளில் தங்கும் இராணுவத்தினருக்கு நிழலுக்கான மரங்களை நட ஆலோசனை வழங்கினார். பதுங்கு குழிகளின் அருகில் மரங்கள் நடப்பட்ட செய்தி அறிந்த இஸ்ரேல் வான்படையினர், ஆறு போரில் மரங்களை எளிதாக கண்டறிந்து சிரியாவின் பதுங்கு குழிகளில் இருந்த இராணுவத்தினரையும், பதுங்கு குழிகளையும் அழித்தனர்.[11]

1963ல் சிரிய ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட சிரிய உளவுத்துறை கர்னல் அஹ்மத் சுய்டானி கோஹனை விரும்பவில்லை மற்றும் இரண்டாவது சிரிய குடியரசை நெருங்கிய நபர்களை நம்பவில்லை. நவம்பர் 1964ல் இஸ்ரேலுக்கு தனது கடைசி இரகசிய வருகையின் போது, சிரியாவில் தனது உளவு வேலையை நிறுத்த விரும்புவதாகக் கூறினார். இருப்பினும் இஸ்ரேலிய உளவுத்துறை அவரை மீண்டும் ஒரு முறை சிரியாவுக்குத் திரும்பச் சொன்னது.

சனவரி 1965ல், சோவியத் தயாரிப்பான கண்காணிப்புக் கருவிகளைப் பயன்படுத்திய சிரிய அதிகாரிகள், சோவியத் நிபுணர்களின் உதவியைப் பெற்றனர், உயர்மட்ட உளவாளியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை அதிகரித்தனர். எந்தவொரு சட்டவிரோத பரிமாற்றங்களையும் அடையாளம் காண முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் வானொலி அமைதியைக் கடைப்பிடித்தனர். அவர்கள் ரேடியோ ஒலிபரப்புகளை வெற்றிகரமாகக் கண்டறிந்தனர் மற்றும் டிரான்ஸ்மிட்டரை முக்கோணமாக்க முடிந்தது. சுய்டானி தலைமையிலான சிரிய பாதுகாப்புப் படையினர் சனவரி 24 அன்று கோஹனின் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து இஸ்ரேலுக்கு ரேடியா மூலம் உளவுச் செய்திகளை அனுப்பும் போது எலியா கோஹனைப் பிடித்தனர்.[8]

மரண தண்டனை

[தொகு]
E18 மே 1965 அன்று டமாஸ்கஸ் நகரத்தின் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்ட எலி கோஹென்

கோஹன் இராணுவ நீதிமன்றத்தால் உளவு பார்த்ததாகக் கண்டறியப்பட்டு இராணுவச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவர் பலமுறை விசாரிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். எலி கோஹன், 18 மே 1965 அன்று டமாஸ்கஸில் உள்ள மர்ஜே சதுக்கத்தில் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டார்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eli Cohen (1924–1965)". Jewish Virtual Library. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  2. "Mossad's master of deception: the astounding true story of Israeli super-spy Eli Cohen". The Daily Telegraph. 6 September 2019. பார்க்கப்பட்ட நாள் 20 October 2019.
  3. 3.0 3.1 "Eli Cohen – Chronology". Archived from the original on 19 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 February 2011.
  4. 4.0 4.1 Gordon Thomas (18 February 2013). Gideon's Spies: The Inside Story of Israel’s Legendary Secret Service. Aurum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907532-57-3. இணையக் கணினி நூலக மைய எண் 845256592.
  5. Azoulay, Yuval (14 May 2010). "Unending agony for legendary spy Eli Cohen and his widow". Haaretz. http://www.haaretz.com/print-edition/news/unending-agony-for-legendary-spy-eli-cohen-and-his-widow-1.290294. 
  6. Kahana, Ephraim (2006). Historical dictionary of Israeli intelligence. Lanham, Md. [u.a.]: Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-5581-6. eli cohen 1961 argentina.
  7. Schmitt, Abram N.; Shulsky, Gary J. (2002). Silent warfare: Understanding the world of intelligence (3rd ed., rev. ed.). Washington, D.C.: Brassey's, Inc. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57488-345-9.
  8. Radio Times, Israel's Secret Weapon, 10–16 February 1990, p.16
  9. "Eli Cohen article". Israel Magazine (Spotlight Publication Ltd.) 5. 1973. https://books.google.com/books?id=i0FXAAAAMAAJ&q=%22eli+cohen%22+1962+damascus. 
  10. Allon, Daniel (2011). Gabriel Allon Novels 1–4. Penguin Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-101-53885-2.
  11. Dunstan, Simon (2013). The Six Day War 1967: Jordan and Syria. Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1472801975.
  12. Sanua, V. "The History of Elie Cohen: An Egyptian Jew who became Israel's greatest spy". sefarad.org. Archived from the original on 7 May 2012. பார்க்கப்பட்ட நாள் 18 May 2017.

வெளி இணைப்புகாள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியாகு_கோகென்&oldid=3849346" இலிருந்து மீள்விக்கப்பட்டது