எலத்தகிரி
தோற்றம்
எலத்தகிரி
Elathagiri எலத்தகிரி | |
|---|---|
கிராமம் | |
சாலையோர பெயர்ப்பலகை | |
| ஆள்கூறுகள்: 12°33′05″N 78°17′37″E / 12.5513°N 78.29359°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருட்டிணகிரி |
| வட்டம் | பர்கூர் |
| கிராம ஊராட்சி | பலேபள்ளி |
| மொழிகள் | |
| • அலுவல்பூர்வம் | தமிழ் |
| • பிற | தெலுங்கு மொழி |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635108 |
எலத்தகிரி (Elathagiri) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். எலுத்தகிரி என்ற பெயராலும் இந்த கிராமம் அழைக்கப்படுகிறது. பெங்களூர் - சென்னை நெடுஞ்சாலைக்கு 3 கி.மீ. தொலைவிலும், மாவட்ட தலைநகர் கிருட்டிணகிரியிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் எலத்தகிரி அமைந்துள்ளது. கிராமத்தில் பல கத்தோலிக்க கிறித்துதவ குடியேற்றங்கள் உள்ளன. எனவே கத்தோலிக்க சமய பரப்புக் குழுவினர் 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பள்ளிகளைத் தொடங்கினர். எலத்தகிரி கிராமம் அதன் தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரபலமானது.
கல்வி
[தொகு]- புனித ஆண்டனி தொடக்கப்பள்ளி
- புனித ஆண்டனி மேல்நிலைப் பள்ளி [1]
- கோன்சாகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- அரசு மேல்நிலைப் பள்ளி, ஒரப்பம் (எலத்தகிரியிலிருந்து 4 கி.மீ.)
- சிவகாமியம்மாள் மேல்நிலைப் பள்ளி (ஏலத்தகிரியிலிருந்து 5 கி.மீ)
- கோன்சாகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
ஆலயங்கள்
[தொகு]- அடைக்கல மாதா தேவாலயம், எலத்தகிரி
- புனித குடும்ப தேவாலயம் (பாறை கோவில்)
- சி.எசு.ஐ குட் செப்பர்டு தேவாலயம்
- கரூர் மாரியம்மன் கோவில்
- சிறீ லட்சுமி நாராயண ஆலயம்
- புனித இயோசப் தேவாலயம், காத்தம்பள்ளம்
- சகாயமாதா தேவாலயம், சகாயபுரம்
அலுவலகங்கள்
[தொகு]- எலத்தகிரி அஞ்சல் நிலையம் [2]
- பாரத மாநில வங்கி, எலத்தகிரி கிளை