எர்மன் போண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் எர்மன் பொண்டி
Sir Hermann Bondi
பிறப்பு(1919-11-01)1 நவம்பர் 1919
வியன்னா, ஆஸ்திரியா
இறப்பு10 செப்டம்பர் 2005(2005-09-10) (அகவை 85)
கேம்பிரிட்ச், இங்கிலாந்து
குடியுரிமைபிரித்தானியர்
தேசியம்ஆத்திரியர்
துறைகணிதவியலாளர்
புறநிலை அண்டவியல்
பணியிடங்கள்இலண்டன் கிங்சு கல்லூரி
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்அரோல்டு செப்ரீசு[1]
ஆர்த்தர் எடிங்டன்[2]
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஆன்சு-பீட்டர் கூன்சில்
பீலிக்சு பிரானி
ராஜர் டெய்லர்[2]
அறியப்படுவதுநிலைத்த நிலைப்புக் கோட்பாடு
ஒட்டுமணி விவாதம்
போண்டி அகந்திரளல்
போண்டி k-கலனம்[3]
விருதுகள்அரசு கழக உறுப்பினர்[1]
பாத் ஆணை

சர் எர்மன் போண்டி (Sir Hermann Bondi, 1 நவம்பர் 1919 – 10 செப்டம்பர் 2005)[4] ஓர் ஆங்கிலோ-ஆத்திரியக் கணிதவியலாளரும் புறநிலை அண்டவியலாளரும் ஆவார். இவர் பிரெடு ஆயிலுடனும் தாமசு கோல்டுடனும் இணைந்து அண்டத்தின் நிலைத்த நிலை கோட்பாட்டைக் கண்டுபிடித்தமைக்காகப் பெயர்பெற்றவர். இது பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கான மாற்றுக் கோட்பாடு ஆகும். இவர் பொது சார்பியல் கோட்பாட்டுக்குப் பங்களிப்பு செய்துள்ளார்.[5][6][7][8][9][10][11][12][13]

இளமை வாழ்க்கை[தொகு]

போண்டி ஆத்திரியாவில் ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் வியன்னாவில் வளர்ந்துள்ளார். இங்கு இவர் பள்ளிக்கல்வியைப் பெற்றுள்ளார். இவர் இளமையிலேயே கணித்த்தில் வல்லமை பெற்றிருந்துள்ளார். இவர் ஆபிரகாம் பிரேங்க்லால் ஆர்த்தர் எடிங்டனுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பிரேங்கல் இவருக்குச் சற்றே விலகிய சுற்றத்தினர் . மேலும் போண்டியின் சுற்ற வலயத்தில் இவர் ஒருவரே கணிதவியலாளராக இருந்தவர். இவர்து தாயார் தன் இளைய மகனை பிரேங்கலுக்கு அறிமுகப்படுத்துவதில் அரிய பங்காற்றியுள்ளார். இது இவருக்கு சொந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் கணிதவியல் தடத்தில் செல்லவும் உதவும் என இவரது தாயார் எண்ணினார். எடிங்டன் இவர் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் கணித்ம் பயில ஆர்வம் ஊட்டினார். எனவே இவர் 1937 இல் கேம்பிரிட்ஜ் வந்துள்ளார். இது இவருக்கு ஆத்திரியச் செமித்திய எதிர்ப்பில் இருந்து தப்பிக்க உதவியுள்ளது. 1938 இல் தம் பெற்றோரின் அவலமான கதியறிந்த இவர் அவர்களை உடனே ஆத்திரியாவை விட்டு கிளம்பும்படி தொலைவரிச் செய்தி அனுப்பியுள்ளார். அதன்படி, அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்து பின் நியூயார்க்கில் வாழத் தொடங்கியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் இவர் கனடாவில் உள்ள ஐல் ஆப் மேன் தீவில் அகதியாகச் சென்றார், இவருடன் அங்கே அகதியாகத் தாமசு கோல்டும் மேக்சு பெருட்சும் இருந்துள்ளனர் . போண்டியும் கோல்டும் 1941 இல் விடுவிக்கப்பட்டு, ஆயிலுடன் இராடாரில் அரசு ஆட்சிக் குறிகை நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இவர் 1946 இல் பிரித்தானியக் குடிமகன் ஆனார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

போண்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1945 முதல் 1954 வரை கணிதவியல் விரிவுரையாளராகப் பணியாற்ரினார். இவர் டிரினிடியின் ஆய்வுறுப்பினராக 1943-9, 1952-4 ஆகிய ஆண்டுகளில் இருந்தார்.

போண்டி 1948 இல் பிரெடு ஆயில், தாமசு கோல்டு ஆகியோருடன் இணைந்து அண்ட்த்தின் நிலைத்தநிலைக் கோட்பாட்டை உருவாக்கினார். இக்கோட்பாட்டின்படி, புடவி தொடர்ந்து விரிவடையும் அதேநேரத்தில் புதிய விண்மீன்களையும் பால்வெளிகளையும் உருவாக்க தொடர்ந்து நிலையான அடர்த்தியைப் பேண, பொருண்மமும் உருவாகிறது. அண்மையில் பெருவெடிப்புக் கோட்பாட்டின்படியான அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சுப் பின்னணி கண்டுபிடிக்கப்பட்டதால் இக்கோட்பாடு சற்றே பின்வாங்கியுள்ளது.

ஈர்ப்புக்க் கதிர்வீச்சின் தன்மையைச் சரியாக உணர்ந்தவர்களில் போண்டியும் ஒருவராவார். இவர் போண்டி கதிர்வீச்சு ஆயங்களையும் போண்டி K கலனத்தையும் போண்டி பொருண்மை விளக்கங்களையும்போண்டி செய்தியையும் அறிமுகப்படுத்தினார். சார்பியல் குறித்துப் பல மீள்பார்வைக் கட்டுரைகளையும் எழுதினார்.இவர் போண்டி விவாதத்தை மக்களிடையே பரப்பினார். இது இரிச்சர்டு பீன்மன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட்தாக்க் கருதப்பட்டு வந்த்து. இதன்படி, பொது சார்பியல் கோட்பாடு பொருள்பொதிந்த புறநிலையாக நிலவும் ஈர்ப்புக் கதிர்வீச்சை முன்கணித்தது. இந்த உர்றுதிப்பாடு 1955 வரை விவாத்த்திலேயே இருந்த்து. ஒரு 1947 ஆய்வுக் கட்டுறை இலெமைத்ரே-டோல்மன் பதின்வெளியில் ஆர்வத்தைப் புத்துயிர்ப்புறச் செய்தது.[5] இது இலெமைத்ரே-டோல்மந்போண்டி பதின்வெளி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வெளி ஒருபடித்தற்ற கோலச் சீரொருமை வாய்ந்த்தூசுத் தீர்வாகும். போண்டி மேலும் வளிம முகிலில் இருந்து விண்மீன் அல்லது கருந்துளை உருவாகும் அகந்திரளுதல் கோட்பாட்டிற்கும்இரேம்மண்டு இலிட்டில்டனுடன் இணைந்து பங்களிப்பு செய்துள்ளார்.இதற்கு போண்டி அகந்திரளுதல் கோட்பாடு அல்லது போண்டி ஆரக் கோட்பாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவர் 1954 இல் இலண்டன் கிங்சு கல்லூரியில் பேராசிரியரானார். மேலும் 1985 இல் தகைமைப் பேராசிரியராகவும் அழைக்கப்பட்டார். இவர் 1956 முதல் 1964 வரை அரசு வானியல் கழகத்தின் செயலராக இருந்துள்ளார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவருடைய பெற்றோர் யூதராயினும் இவர் சமயத் தேவை எதையும் உணரவில்லை. இவர் வாழ்நாள் முழுவதும் சிறந்த மாந்தநேயராக விளங்கினார்]. இவர் 1982 முதல் 1999 வரை பிரித்தானிய மாந்தநேயக் கழகத்தின் தலைவராகவும் விளங்கினார். இவர் 1982 இல் இருந்து பகுத்தறிவு ஊடக்க் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மாந்தநேயக் கொள்கை அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் இவரும் ஒருவராவார்.[14]

இவர் 1947 இல் கணிதவியலாளரும் வானியலாளருமான கிறித்தைன் சுடாக்மனை மணந்தார்;இவர் ஆயிலின் ஆய்வு மாணவர்களில் ஒருவர். இவரும் போண்டியைப் போலவே மாந்தநேய இயக்கத்தில் முனைப்போடு பங்கு பற்றினார். இவர்களுக்கு இரு ஆண்மகவும் மூன்று பெண்மகவும் பிறந்தனர். இவரில் ஒருவர் எடின்பரோ பல்கலைக்கழகப் பெண்ணியப் பரப்புநரான பேராசிரியர் இலிசு போண்டி ஆவார். இவர் தன் 85 ஆம் அகவையில் கேம்பிரிச்ஜில் 2005 இல் இறந்தார்.[15] இவரது சாம்பல் கேம்பிரிட்ஜ் அருகே உள்ள ஆங்கிலிசே துறவுமடத்தில் தூவப்பட்ட்து.கிறித்தைன் 2015 இல் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Roxburgh, I. W. (2007). "Hermann Bondi 1 November 1919–10 September 2005: Elected FRS 1959". Biographical Memoirs of Fellows of the Royal Society 53: 45–61. doi:10.1098/rsbm.2007.0008. 
 2. 2.0 2.1 கணித மரபியல் திட்டத்தில் எர்மன் போண்டி
 3. Obituary letter: Hermann Bondi, Guardian, 23 September 2005
 4. Leon Mestel (2005). "Obituary: Hermann Bondi (1919–2005) Mathematician, cosmologist and public servant". Nature 437 (7060): 828. doi:10.1038/437828a. பப்மெட்:16208358. Bibcode: 2005Natur.437..828M. 
 5. 5.0 5.1 Bondi, H. (1999). "Spherically Symmetrical Models in General Relativity". General Relativity and Gravitation 31 (11): 1783–1805. doi:10.1023/A:1026726520289. Bibcode: 1999GReGr..31.1783B. https://archive.org/details/sim_general-relativity-and-gravitation_1999-11_31_11/page/1783. 
 6. 93 papers by Hermann Bondi
 7. Obituary பரணிடப்பட்டது 2009-01-09 at the வந்தவழி இயந்திரம் (The Independent, 2005-09-12)
 8. Obituary பரணிடப்பட்டது 2007-11-13 at the வந்தவழி இயந்திரம் (த டெயிலி டெலிகிராப், 2005-09-13)
 9. Obituary (தி கார்டியன், 2005-09-14)
 10. Sir Hermann Bondi: 1919 – 2005 பரணிடப்பட்டது 2017-12-01 at the வந்தவழி இயந்திரம் (Institute of Physics, 2005-09-14)
 11. Black hole scientist Bondi dies (பிபிசி, 2005-09-17)
 12. Oral History interview transcript with Hermann Bondi 1978-03-20, American Institute of Physics, Niels Bohr Library and Archives
 13. Bondi, H.; Van Der Burg, M. G. J.; Metzner, A. W. K. (1962). "Gravitational Waves in General Relativity. VII. Waves from Axi-Symmetric Isolated Systems". Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 269 (1336): 21. doi:10.1098/rspa.1962.0161. Bibcode: 1962RSPSA.269...21B. 
 14. "Humanist Manifesto II". American Humanist Association இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020110719/http://www.americanhumanist.org/humanism/Humanist_Manifesto_II. பார்த்த நாள்: 2 October 2012. 
 15. GRO Register of deaths: SEP 2005 D67C 21 CAMBRIDGE – Hermann Bondi, DoB = 1 Nov 1919, aged 85
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மன்_போண்டி&oldid=3769874" இருந்து மீள்விக்கப்பட்டது