எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்1992
முதல்வர்லலிதா பாலகிருஷ்ணன்
மாணவர்கள்3000
அமைவிடம்சென்னை, நுங்கம்பாக்கம், தமிழ்நாடு, இந்தியா
13°3′19″N 80°15′1″E / 13.05528°N 80.25028°E / 13.05528; 80.25028ஆள்கூறுகள்: 13°3′19″N 80°15′1″E / 13.05528°N 80.25028°E / 13.05528; 80.25028
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://mopvc.edu.in/

எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரி (M.O.P. Vaishnav College for Women) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1]

வரலாறு[தொகு]

சிறீ வல்லபச்சார்யா வித்யா சபாவானது திவான் பகதூர் எம். ஓ. பார்த்தசாரதி ஐயங்கார் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு 1992-ல் எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரி நிறுவப்பட்டது. எம்.ஓ.பி. அறக்கட்டளைகள் கல்லூரி வளாகத்திற்காக நிலத்தை நன்கொடையாக அளித்தன. உள்கட்டமைப்பு வசதி மற்றும் நிர்வாகத்தை சிறீ வல்லபாச்சார்யா வித்யா சபா மேற்கொள்கிறது. [2] 2002 ஆம் ஆண்டில், இக்கல்லூரி தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலில் (என்ஏஏசி) நான்கு நட்சத்திரங்களுடன் அங்கீகாரம் பெற்றது, அதே ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தால் நிரந்தர இணைவு வழங்கப்பட்டது. இது 2004 இல் யுஜிசி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தால் சுயாட்சி வழங்கப்பட்டது. [3]

கல்வி[தொகு]

2015 ஆகத்து

இந்த கல்லூரியில் 15 இளங்கலை மற்றும் ஆறு முதுகலை படிப்புகள் உள்ளன. மேலும் முனைவர் பட்ட பாடத்திட்டங்களைநும் கொண்டுள்ளது. [4] இங்கு வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு [5]

இளங்கலை[தொகு]

ஊடகவியல்[தொகு]

 • இளங்கலை, இதழியல்
 • இளம் அறிவியல் காட்சி தொடர்பியல்
 • இளம் அறிவியல் மின்னணு ஊடகம்

தகவல் தொழில்நுட்பத் துறை[தொகு]

 • இளம் அறிவியல், கணினி அறிவியல்
 • இளம் கணினி பயன்பாடு
 • இளம் அறிவியல் கணினி பயன்பாட்டுடன் கணிதம்

வணிகத் துறை[தொகு]

 • பிபிஏ (இரு வேலை நேரங்கள்)
 • பி.காம். (தகவல் அமைப்பு மேலாண்மை)
 • பி.காம். (கணக்கியல் மற்றும் நிதி) (இரு வேலை நேரங்கள்)
 • பி.காம். (சந்தைப்படுத்தல் மேலாண்மை) (இரண்டாம் வேலை நேரம்)
 • பி.காம். (பெருவணிக செயலாளர்) (இரண்டாம் வேலை நேரம்)
 • பி.காம். (ஹானர்ஸ்)
 • பி.ஏ பொருளாதாரம் (இரண்டாம் வேலை நேரம்)

உணவு அறிவியல் துறை[தொகு]

 • பி.எஸ்சி உணவு அறிவியல் மற்றும் மேலாண்மை

சமூக அறிவியல் துறை[தொகு]

 • பி.ஏ. சமூகவியல்
 • பி.எஸ்சி உளவியல்

முதுகலை[தொகு]

ஊடகவியல்[தொகு]
 • எம்.ஏ. தகவல் தொடர்பு
 • எம்.ஏ. ஊடக மேலாண்மை
தகவல் தொழில்நுட்பத் துறை[தொகு]
 • எம்.எஸ்சி (ஐடி)
வணிகவியல் துறை[தொகு]
 • எம்பிஏ
 • எம். காம்
 • எம்.ஏ. மனித வள மேலாண்மை
உணவு அறிவியல் துறை[தொகு]
 • எம்.எஸ்சி உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை

கூடுதல் செயல்பாடுகள்[தொகு]

எம்ஓபி வைணவ கல்லூரி தங்கள் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தைத் தாண்டிய பல்வேறு வசதிகளை வழங்குகிறது. கல்லூரியில் பல சங்கங்கள், பட்டறைகள், கருத்தரங்குகள், கலாச்சார நடவடிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் பத்திரிகை வெளியீடுகள் உள்ளன.

சங்கங்கள்

கல்லூரியில் 16 சங்கங்கள் செயல்படுகின்றன [6] மாணவர்களிடம் உள்ள ஒருங்கிணைப்பு, திட்டமிடல், மதிப்பீடு போன்ற பல உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தி, அதை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயன்படுவதே சங்கங்களின் முக்கிய நோக்கமாகும்.

கலாச்சார செயல்பாடுகள்

எம்.ஓ.பி வைணவ மகளிர் கல்லூரியானது மாணவிகளின் போட்டி உணர்வை வெளிப்படுத்தும் வருடாந்திர கலாச்சார கொண்டாட்டங்களை [7] நடத்துகிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் முயற்சிகளை வழங்குவதே முக்கிய நோக்கமாக உள்ளது.

குறிப்புகள்[தொகு]

 1. Special Correspondent (2012-08-05). "FEATURES / DOWN TOWN : MOP annexes CMC Pegasus trophy". The Hindu. 2012-08-16 அன்று பார்க்கப்பட்டது.
 2. "About College". 26 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 December 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 3. "MILESTONES". 26 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 December 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 4. "Under Graduate". Mop-vaishnav.ac.in. 2012-06-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 5. "Courses offered". 2013-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 6. "Student Activities - M.O.P Vaishnav College For Women (Autonomous)" (in en-US). M.O.P Vaishnav College For Women (Autonomous). Archived from the original on 2018-10-01. https://web.archive.org/web/20181001104256/http://mopvc.edu.in/student-activities/#1492258294823-cf2d8a55-229f. 
 7. "Student Activities - M.O.P Vaishnav College For Women (Autonomous)" (in en-US). M.O.P Vaishnav College For Women (Autonomous). Archived from the original on 2018-10-01. https://web.archive.org/web/20181001104256/http://mopvc.edu.in/student-activities/#1492259005200-9f73aab7-ef33. 

வெளி இணைப்புகள்[தொகு]