எம்டன் ஜெர்மானியப் போர்க்கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Emden
எம்டன் சீனாவில், 1931
History
வெய்மர் குடியரசு கடற்படையின் கொடி ரெய்க் கப்பற்படை நாசி யேர்மனி கடற்படையின் கொடி கிரீக்ஸ்மரீன்
Name: எம்டன்
Namesake: எம்டன்
Ordered: 1921
Laid down: டிசம்பர் 1921
Launched: ஜனவரி 6 1925
Commissioned: அக்டோபர் 15 1925
Decommissioned: ஏப்ரல் 26 1945
Fate: அழிக்கப்பட்டது மே 3 1945
General characteristics
Displacement: 7,100 டன்கள்
Length: 156 மீ
Beam: 14.3 மீ
Draught: 5.8 மீ
Propulsion: நீராவி விசையாழி, 2 சுழல் தண்டு, 4 கொதிக்கலன்கள், 46,500 shp /34,000 கிவா ( 1934 ல் புதுப்பிக்கப்பட்டபின்)
Speed: 29.5 கடல் மைல்கள்
Range: 6750 மைல்கள் (மணிக்கு 15 கடல் மைல்கள்)
Complement: 685
Armament: list error: <br /> list (help)
8 × 150 mm (5.9 in) சுடுகலன்கள்
3 × 105 mm (4.1 in) சுடுகலன்கள்
3 × 88 mm (3.5 in) சுடுகலன்கள்
4 × 37 mm (1.5 in) சுடுகலன்கள்
8 (later 20) × 20 mm (0.79 in) சுடுகலன்கள்
4 × 533 mm (21.0 in) நீர்முழ்கிக் குண்டுகள் செலுத்தும் குழய்கள் (டார்பிடோ)
Service record
Part of: Kriegsschiffgruppe 5
Operations: வெசர்பங்க் செயல்

எம்டன் ஜெர்மனிப் போர்க்கப்பல் (German cruiser Emden) ஜெர்மன் இலகு வகைப் போர்க்கப்பல் பல வியத்தகு போர்ச்செயல்களை புரிந்து சாதனைப்படைத்த ஒன்றாகும். முதலாம் உலகப்போரின் முடிவிற்குப்பின் ஜெர்மானியால் நிர்மானிக்கப்பட்ட எம்டன் கப்பல்களில் மூன்றாவது போர்க்கப்பலே இந்த எம்டன்.

1921 ல் வடிவமைக்கத் தீர்மானிக்கப்பட்ட இக்கப்பல் நேச நாடுகள் மற்றும் வெர்சாய் ஒப்பந்த நிர்பந்தத்தினால் இதன் உருவாக்கம் சற்றுக் காலதாமதம் ஆனது. இறுதியாக ஜனவரி 6, 1925 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 15 , 1925 ல் போர்களில் பயன்படுத்தப்பட்டது. சோதனை முயற்சியாக எம்டன் அட்லாண்டிக், பசிபிக் மற்றும் மத்தியத்தரைக் கடல் பகுதிகளில் 1926 முதல் 1939 வரை பயன்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 4, 1939 ல் இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானியர்களின் வான் தாக்குதல்களால் இக்கப்பல் சேதத்திற்குள்ளானது. இதை சீர்செய்தபின் மீண்டும் வடக்குக் கடல்பகுதியில் பயன்படுத்தப்பட்டது. பின் ஓஸ்லோவில் நடந்த போரில் பங்குப்பெற்று பெரிய கப்பல்களான புலுச்சர், ஆஸ்கார்பர்க் கப்பல்களை மூழ்கச்செய்தது.

ஜெர்மன் முன்னாள் அதிபர் பால் வோன் இன்டன்பெர்க்கினுடைய இறப்பிற்குப்பின் அவர் உடலை சுமந்து வந்தப் பெருமை இக்கப்பலுக்குண்டு. ஏப்ரல் 9,1945 முதல் ஏப்ரல் 10, 1945 ஒரே இரவில் ஜெர்மனியின் கீல் பகுதியில் அடைந்த பலத்த வான்தாக்குதலில் மிகுந்த சேதத்திற்குள்ளானது. ஏப்ரல் 25, 1945 ல் படைப்பிரிவில் இருந்து விலக்கப்பட்டு மே 3 ல் துண்டுதுண்டாக சிதைக்கப்பட்டது.