உள்ளடக்கத்துக்குச் செல்

எமிலி சாஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமிலி சாஜா
பிறப்பு(1909-07-15)15 சூலை 1909
அங்கேரி
இறப்பு16 மே 1970(1970-05-16) (அகவை 60)
சிங்கப்பூர்
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
மற்போர் பெயர்கிங் காங்
Billed height6 அடி
Billed weight444 lb (201 kg) (201கிலோ)
Billed fromஆத்திரேலியா ஆத்திரேலியா
முதல் போட்டி1937

கிங் காங் என்ற புனைபெயரால் அறியப்படும் எமிலி சாஜா (Emile Czaja, 15 சூலை 1909-16 மே 1970) என்பவர் ஒரு ஆத்திரேலிய-இந்திய தொழில்முறை மல்யுத்த வீரரும் நடிகரும் ஆவார். இவர் 1909 இல் அங்கேரியில் பிறந்தவர். 1929 முதல் 1970 வரை மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக இருந்தார். இவர் பெரும்பாலும் யப்பான், சிங்கப்பூர், ஐரோப்பா, நியூசிலாந்து, ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் மல்யுத்தம் செய்தார். தொழில்முறை மல்யுத்தத்தில், இவரது பரம போட்டியாளர்களாக அஸ்லம் பஹல்வான்,[1] ஹமிதா பஹல்வான், ஷெய்க் அலி, தாரா சிங் ஆகியோர் இருந்தனர்.[2][3]

துவக்ககால வாழ்க்கை

[தொகு]

அங்கேரிய நாட்டைச் சேர்ந்த எமிலி சாஜா ஐரோப்பாவில் மல்யுத்தம் செய்யத் தொடங்கினார். 18 வயதில், இவர் ஐரோப்பா முழுவதும் முக்கியமான போட்டிகளில் பங்கேற்றார். எமிலி மல்யுத்தத்தின் அனைத்து பாணிகளிலும் சிறந்து விளங்கினார். இதனால் விரைவில் சிறந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு வலிமையான எதிரியாக மாறினார்.

தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை

[தொகு]

சாஜா 1937 இல் இந்தியாவில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] ஒரு இந்திய திரைப்படத்தில் கிங் காங் பாத்திரத்தில் நடித்ததால் இவருக்கு "கிங் காங்" என்ற பெயர் வழங்கப்பட்டது.[2] 1945 இல், இவர் பிரித்தானிய இந்தியாவின் இலாகூரில் சுமார் 200,000 பார்வையாளர்கள் முன்னிலையில் ஹமிதா பெஹல்வானுடன் மல்யுத்தம் செய்தார்.[4] இவர் 100,000 இக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்காக அடிக்கடி மல்யுத்தம் செய்தார்.[4]

1937 ஆம் ஆண்டில், இவர் பிரித்தானிய இந்தியாவின் பம்பாய்க்கு வந்தார். அங்கு பல மேற்கத்திய மல்யுத்த வீரர்களுடனும், கிழக்கு இந்திய ஜாம்பவான்களுடன் மோத கூடியிருந்தனர். அவர்கள் பாலஸ்தீனத்தின் ஜெஜி கோல்ட்ஸ்டைன், ஜெர்மனியின் எட்மண்ட் வான் கிராமர், இத்தாலியின் டோனி லாமரோ, அங்கேரியின் எமில் கொரோஷென்கோ, போலந்தின் ஜார்ஜ் ஜிபிஸ்கோ, ருமேனியாவின் ஜார்ஜ் கான்ஸ்டன்டைன், ஆத்திரேலியாவின் ஆர்ட்டி கவுன்சில், எட்" ஸ்ட்ராங்க்லர் " லூயிஸ், டெட் தை ஆகியோராவர். கிங் காங் அவர்களில் சிலருடன் மல்யுத்தம் செய்தார்.

1947 இக்குப் பிறகு, மற்றொரு நாடாக பாக்கித்தான் உருவானது. உடனடியாக அங்கு வலுவான மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டார். 1952 ஆம் ஆண்டில், எமிலி சாஜா சிங்கப்பூரில் இருந்து பம்பாய்க்கு வந்து, "தி மேட் மொகுல் ஆஃப் இந்தியா" என்ற புகழ்பெற்ற தொழிலதிபர் திரு. கூஸ்டாட் டி. இரானியை அணுகினார். அதன்பிறகு பம்பாயில் ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வருவாயைத் தந்தது. 1960 களின் பிற்பகுதி வரை இரானியின் குத்தகையின் கீழ் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மல்யுத்தம் நடந்தது.

தாரா சிங்குடன் சண்டை

[தொகு]
தாரா சிங் கிங் காங்கிற்கு குத்துக்கள் விடுகிறார் ஜப்பான் மல்யுத்த சங்கம் 1955

தாரா சிங் உடனான இவரது அனைத்து சண்டைகளும், இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுமக்களின் கற்பனைக் கதைகளுக்குத் தீனிபோட்டன. கிங் காங்கை வீழ்த்திய தாரா சிங்கின் செயல் இந்தியாவில் புகழ்பெற்றது.[5]

மலேசியாவின் பினாங்கில் நடந்த ஒரு போட்டியை முடித்து சிங்கப்பூருக்குத் திரும்பிச் செல்லும்போது, 1970 மே 12 அன்று ஐபோவில் நடந்த கார் விபத்தில் சாஜா மோசமாக காயமடைந்தார். இதனையடுத்து 1970 மே 16 அன்று சிங்கப்பூரில் 60 தன் வயதில் இறந்தார்.[2]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1953 பொன்னி அவராகவே தமிழ்ப் படம்
1962 கிங் காங் கிங் காங் இந்தி திரைப்படங்கள்
ஹாங்காங்
1963 படால் நாக்ரி
கார்னிவல் கிங்
ஃபௌலாத் அடிமைத் தலைவன்
1964 குஃபியா மஹால் மல்யுத்த வீரர்
சாம்சன்
ஹெர்குலஸ் மல்யுத்த வீரர்
ஆயா தூபன் மல்யுத்த வீரர்
1965 டார்சன் அண்ட் கிங் காங் டார்சனின் எதிரி
சங்கிராம்
ஹம் சப் உஸ்தாத் ஹெய்ன் கிங் காங் மல்யுத்த வீரர்
1968 முஜ்ரிம் கவுன்?
1972 மெலே மித்ரன் டி பஞ்சாபி படம்

வகையரும் சாதனைகளும்

[தொகு]
  • ஓரியண்டல் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்[6]
  • ஆஸ்திரேலிய ஜூனியர் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்
  • ஜப்பான் மல்யுத்த சங்கம்
    • ஆல் ஆசியா டேக் டீம் சாம்பியன்ஷிப் (1 முறை) - டைகர் ஜோகிந்தர் சிங்குடன்[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Secret of sports". The Uncrowned King News. 11 June 2009. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 Vijayakar, Pradeep; V Narayan, Swamy (11 June 2009). "There are no shortcuts to success, says Kane". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 12 October 2022. பார்க்கப்பட்ட நாள் 25 December 2009.
  3. "Emile Czaja « Wrestlers Database « CAGEMATCH - The Internet Wrestling Database".
  4. 4.0 4.1 Schramm, Chris (7 May 1999). "A history of crowds". SLAM! Wrestling. Archived from the original on 29 July 2012. பார்க்கப்பட்ட நாள் 25 December 2009.
  5. "Dara Singh's fight against King Kong will always be remembered - Indian Express".
  6. "'Rustum-e-Hind' Dara Singh: The end of the 'strongman' saga". Zee News. 12 July 2012.
  7. "AJPW All Asia Tag Team Championship official title history" (in ஜப்பானியம்). All-Japan.co.jp. Archived from the original on 11 August 2007. பார்க்கப்பட்ட நாள் 29 August 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_சாஜா&oldid=4045139" இலிருந்து மீள்விக்கப்பட்டது