என். மோகனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். மோகனன்
பிறப்புஏப்ரல் 27 1933
இறப்புஅக்டோபர் 3 1999
தொழில்புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர்
தேசியம் இந்தியா
குறிப்பிடத்தக்க படைப்புகள்நேற்றைய மழை, (இன்னாலதே மழை)
என். மோகனனின் கதைகள் ( என். மோகனன்டெ கதைகள் )

என். மோகனன் (N. Mohanan) (27 ஏப்ரல் 1933 - 3 அக்டோபர் 1999) ஓர் மலையாள -மொழிச் சிறுகதை எழுத்தாளரும், தென்னிந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த புதின எழுத்தாளருமாவார். 1998இல் இன்னாலதே மழை என்ற நூலுக்காக கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றார்.[1] நின்டே கதை (என்டேயும்), துக்கத்தின்டே ராத்திரிகள், பூஜக்கெடுக்காத பூக்கள், என். மோகனன்டெ கதைகள், சேஷபத்திரம், நுனையின் சனிகதகள் தேடி, சிநேகத்தின் வியாகரணம், நிஷேதா ராஜ்யத்தில் ராஜாவு, ஓரிக்கல் உள்ளிட்ட பத்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவர், கோட்டயம் மாவட்டம்]] பளை அமனகர இல்லத்தைச் சேர்ந்த ஏ. என். நாராயணன் நம்பூதிரி - பிரபல மலையாள எழுத்தாளர் லலிதாம்பிகா அந்தர்ஜனம் ஆகியோரின் மகனாவார்.

சுயசரிதை[தொகு]

இவர் ஏப்ரல் 27, 1933 அன்று கோட்டயம் மாவட்டம் இராமபுரத்தில் பிறந்தார். இராமபுரத்தின் செயின்ட் அகஸ்டின் ஆங்கிலப் பள்ளியிலும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும்படித்தார். காலடி ஸ்ரீ சங்கரா கல்லூரியில் இவர் மலையாள ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர், கேரள அரசின் கலாச்சார விவகார இயக்குநராகவும் பணியாற்றினார். கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராக பணிபுரிந்து 1988இல் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இறப்பு[தொகு]

மோகனன், அக்டோபர் 3, 1999 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala Sahitya Akademi Awards" பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம். Kerala Sahitya Akademi. Retrieved 12 April 2014.

2. https://www.deccanchronicle.com/151001/entertainment-mollywood/article/remembering-n-mohanan 3. https://malayalam.indianexpress.com/news/features/memories-n-mohanan-rajam-g-namboothiri/

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._மோகனன்&oldid=3210430" இலிருந்து மீள்விக்கப்பட்டது