எத்திலீன் கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எத்திலீன் கார்பனேட்டு
Skeletal formula of ethylene carbonate
Ball-and-stick model of the ethylene carbonate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-டையாக்சலான்-2-ஒன்
வேறு பெயர்கள்
எத்திலீன் கிளைக்கால் கார்பனேட்டு[1]
இனங்காட்டிகள்
96-49-1 Yes check.svgY
ChemSpider 7030 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7303
பண்புகள்
C3H4O3
வாய்ப்பாட்டு எடை 88.06 g·mol−1
தோற்றம் வெண்மையும் மஞ்சளும்
அடர்த்தி 1.3210 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 243.0 °C (469.4 °F; 516.1 K)
கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு எரிச்சலூட்டும் (XI)
R-சொற்றொடர்கள் R41
S-சொற்றொடர்கள் S26 S39
தீப்பற்றும் வெப்பநிலை 150 °C (302 °F; 423 K)
Autoignition
temperature
465 °C (869 °F; 738 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எத்திலீன் கார்பனேட்டு (Ethylene carbonate) (CH2O)2CO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். எத்திலீன் கிளைக்கால் மற்றும் கார்பானிக் அமிலத்தின் கார்பனேட்டு எசுத்தர் என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. அறை வெப்பநிலையில் (25°செ) எத்திலீன் கார்பனேட்டு ஒரு ஒளிபுகும் படிகத் திண்மமாக நிறமற்றும் நெடியற்றும் காணப்படுகிறது. சிறிதளவு நீரில் கரைகிறது. எத்திலீன் கார்பனேட்டு திரவ நிலையில் இருக்கும் போது (உ.நி: 34-37 °செல்சியசு|செ]]) நிறமற்ற மணமற்ற திரவமாக உள்ளது [2].

தயாரிப்பும் வினைகளும்[தொகு]

எத்திலீன் ஆக்சைடும் கார்பனீராக்சைடும் வினைபுரிவதால் எத்திலீன் கார்பனேடு உருவாகிறது. இவ்வினையில் பல்வேறு வகையான நேர்மின் அயனிகளும் அணைவுச் சேர்மங்களும் வினையூக்கியாகச் செயல்படுகின்றன :[3]

(CH2)2O + CO2 → (CH2O)2CO.

எத்திலீன் கார்பனேட்டு (மற்றும் புரோப்பைலீன் கார்பனேட்டு) மெத்தனால் பதிலீட்டு எசுத்தராக்கல் வினையின் பயனாக டைமெத்தில் கார்பனேட்டைத் தருகிறது. டைமெத்தில் கார்பனேட்டு ஒரு பயனுள்ள கரைப்பானாகவும் மெத்திலேற்றும் ,முகவராகவும் பயன்படக்கூடிய சேர்மம் ஆகும்.

C2H4CO3 + 2 CH3OH → CH3OCO2CH3 + HOC2H4OH

டைமெத்தில் கார்பனேட்டும் இதேபோல பதிலீட்டு எசுத்தராக்கல் வினையின் பயனாக ஒரு பாசுகீன் பதிளிட்டு சேர்மமான டைபீனைல் கார்பனேட்டாக மாறுகிறது :[3]

CH3OCO2CH3 + 2 PhOH → PhOCO2Ph + 2 MeOH.

பயன்கள்[தொகு]

மூலக்கூற்று மின்னிருமுனைவுத் திருப்புத்திறன் மதிப்பு 4.9 டி உள்ள ஒரு முனைவுக் கரைப்பானாகப் பயன்படுகிறது. புரோப்பைலீன் கார்பனேட்டை விட மின்னிருமுனைவுத் திருப்புத்திறன் டி மட்டுமே எத்திலீன் கார்பனேட்டு கொண்டுள்ளது. இலித்தியம் மின்கலங்களில் உள்ள மின்பகுளிகளில் மின் தடையை பகுதிப் பொருளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். பலபடிகளிலும் கரிமத் தொகுப்பு வினைகளிலும் பயனாகும் வினைலீன் கார்பனேடு தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் நெகிழ்வியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "CID 7303 -- PubChem Compound Summary". pubchem.ncbi.nlm.nih.gov. பார்த்த நாள் 2008-03-15.
  2. JEFFSOL ETHYLENE CARBONATE பரணிடப்பட்டது 2012-07-22 at the வந்தவழி இயந்திரம் catalog entry at www.huntsman.com. Accessed on 2010-02-18.
  3. 3.0 3.1 Hans-Josef Buysch (2005), "Carbonic Esters", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a05_197

புற இணைப்புகள்[தொகு]