எட்டாம்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டாம்படை திருவல்லிக்கேணி திருமுருகன்

எட்டாம்படை திருவல்லிக்கேணி திருமுருகன்

இந்த ஆலயம் பழமையான திருகோவிலாகும். இக்கோவிலுள்ள மயில் மேல் அமர்ந்த முருகன் உள்ள கல்வெட்டு சென்னையில் கந்தசுவாமி கோவில், திருவல்லிக்கேணி முருகன் கோவில் மற்றும் திருபோரூர் முருகன் கோவிலில் மட்டுமே அமைந்துள்ளது.சென்னையில் இருந்து திருபோரூருக்குக் காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் இந்த முருகன் கோவிலில் தங்கியிருந்து செல்லும் அன்ன சத்திரமாக விளங்கி வந்தது.

திருவல்லிக்கேணி திருமுருகனடியர்கள்[தொகு]

இந்த சன்னிதானம் அமைந்துள்ள நிலத்தை திருமதி. பச்சையம்மாள் நிலக்கொடையாக அளித்துள்ளார்கள். பரம்பரை தர்மகர்த்தாவாக தற்சமயம் திரு. கே. ச. கதிர்வேல் பிள்ளை, திரு. கே. சுப்பிரமணியம் அவர்கள் உள்ளார்கள். இந்த திருக்கோவிலை 1978 ஆம் ஆண்டு உழவாரப்பணி செய்ய அன்பர்களால் திருவல்லிக்கேணி திருமுருகனடியர்கள் என்ற அமைப்பினை தொடங்கி அலையை வளர்ச்சிக்காக பஜனஷ்வரா பக்தி பாடல்கள் என்ற இசைக்குழுவை தொடங்கி அதன்மூலம் வரும் தொகையை திருகோவில் வளர்ச்சிக்காக பயன்படுத்தினர்.

பங்குனி உத்திர திருவிழா[தொகு]

மேலும் பகுதி வாழ் பெரியோர்களின் நல்லாசியுடன் 1985 ஆம் வருடம் முருகனுக்கு வேல், காவடி, மற்றும் பால்குடம் எடுக்கும் திருவிழாவாக பங்குனி உத்திர திருவிழாவாக உருவானது. 1993 ஆம் ஆண்டு திருச்சபையாக பதிவு செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டு “எட்டாம்படை வீடு திருமுருகனடியார்கள் இறைபணி சங்கம்“ இருசப்ப தெரு சென்னை-5. என்ற விலாசத்தில் இயங்கி வருகிறது .

வாஸ்து முறையில் அமைந்த திருக்கோவில்[தொகு]

இந்த திருவல்லிக்கேணி திருமுருகன் மேற்கு முகமாக வள்ளி தெய்வானையும் நின்ற திருக்கோலம். ஈசான மூலையில் கும்பேஸ்வரரும் அக்னி மூலையில் மங்களாம்பிகையும் வாயு மூலையில் நவக்ரஹ சந்நிதியும் நைருதியில் அரச மரமும் வாஸ்து முறையில் அமைந்த திருக்கோவில்.

எட்டாம்படை வீடு[தொகு]

சந்நிதானத்தில் சப்த மாதா ஏழு கன்னியர்கள் , தெற்கு முகமாகத் தக்ஷ்ணாமூர்த்தியும் , வடக்கு முகமாக ஸ்ரீ கல்யாண கனக துர்கையும் அமைந்துள்ள திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலை அன்பர்கள் எட்டாம்படை வீடாக அழைத்து வருகிறார்கள். ஆறுபடை முருகனையும், ஏழாம் படையும் மருத முருகனையும் தரிசனம் செய்யும் ஆன்ம திருப்தி இந்த எட்டாம்படை முருகனை வணங்கும்போது இறையுணர்வு ஏற்படுவதாகப் பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் சிறப்பு[தொகு]

மேலும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் திருமணமாகாத கன்னியர்க்குத் திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் ஏற்படுகிறது. எண்ணியது எல்லாம் இனிதே இந்த முருகன் நிறைவேற்றி வைப்பதினால், சஷ்டி திருவிழாவில் , பங்குனி உத்திர திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் .

நடை திறக்கும் நேரம்[தொகு]

காலை நடை திறக்கும் நேரம் அதிகாலை 6 மணி நடை மூடும் நேரம் பகல் 12 மணி

மாலை நடை திறக்கும் நேரம் மாலை 4.30 மணி நடை மூடும் நேரம் இரவு 9 மணி

அறுபடை வீடுகள்[தொகு]

  • திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
  • பழநி - மாங்கனிக்காகத் தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
  • பழமுதிர்சோலை - ஔவைக்குக் பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டாம்படை&oldid=3343803" இலிருந்து மீள்விக்கப்பட்டது