எச்டி 209458 பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச்டி 209458 பி
HD 209458 b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

வியாழனுடன் பருமன் ஒப்பீடு
தாய் விண்மீன்
விண்மீன் எச்டி 209458
விண்மீன் தொகுதி பெகாசசு
வலது ஏறுகை (α) 22h 03m 10.8s
சாய்வு (δ) +18° 53′ 04″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 7.65
தொலைவு154 ஒஆ
(47.1 புடைநொடி)
அலைமாலை வகை G0V
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.045 AU
Periastron (q) 0.044 AU
Apastron (Q) 0.046 AU
மையப்பிறழ்ச்சி (e) 0.014[1]
சுற்றுக்காலம்(P)3.52474541 ± 0.00000025 நா
சாய்வு (i) 86.1 ± 0.1°
Argument of
periastron
(ω) 83°
Time of periastron (T0) 2,452,854.825415
± 0.00000025 JD
Semi-வீச்சு (K) 84.26 ± 0.81 மீ/செ
இருப்புசார்ந்த இயல்புகள்
திணிவு(m)0.71 MJ
ஆரை(r)1.35 ± 0.05 RJ
அடர்த்தி(ρ)370 கிகி/மீ3
மேற்பரப்பு ஈர்ப்பு(g)18.46 மீ/செ² (1.88 g)
வெப்பநிலை (T) 1,130 ± 150 கெ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் நவம்பர் 5, 1999
கண்டுபிடிப்பாளர்(கள்) டேவிட் சார்பனோ
திமொத்தி பிரவுன்
டேவிட் லேத்தம்
மைக்கேல் மேயர்
கிரெகரி என்றி
ஜெப்ரி மார்சி
கெரி ஓ'கொனர்
பவுல் பட்லர்
ஸ்டீவன் வோக்ட்
கண்டுபிடித்த முறை ஆரத்திசை வேகம்
கண்டுபிடித்த இடம் லோவெல் வானாய்வகம்
செனீவா வானாய்வகம்
கண்டுபிடிப்பு நிலை வெளியிடப்பட்டது
வேறு பெயர்கள்
ஓசிரிசு
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

எச்டி 209458 பி (HD 209458 b) என்பது ஒரு புறக்கோள் ஆகும். இது பெகாசசு விண்மீன் குழுமத்தில் காணப்படும் எச்டி 209458 என்ற நமது சூரியனுக்கு இணையான விண்மீனைச் சுற்றி வருகிறது. இது பூமியின் சூரியக் குடும்பத்தில் இருந்து கிட்டத்தட்ட 150 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

இக்கோளின் சுற்றுவட்டத்தின் ஆரை 7 மில்லியன் கிலோமீட்டர்கள் (0.047 வானியல் அலகுகள்) ஆகும். இது புதனின் சுற்றுவட்ட ஆரையின் எட்டில் ஒரு மடங்காகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1,000 °செ (1,800 °ப) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் திணிவு பூமியை விட 220 மடங்குகள் (0.69 வியாழன் திணிவுகள்). கனவளவு வியாழனை விட 2.5 மடங்கு பெரியதாகும். அதிக திணிவையும், பெரும் கனவளவையும் கொண்டிருப்பதால் இது ஒரு வளிமப் பெருங்கோள் ஆகக் கருதப்படுகிறது.

புறக்கோள் ஆய்வில் எச்டி 209458 பி பல மைல்கற்களைத் தாண்டியுள்ளது. முதற்தடவையாக புறக்கோள் ஒன்றில் வானியல் கடப்பு நடைபெறுவது, வளிமண்டலம் இருக்கக்கூடிய ஒரு புறக்கோள், ஆவியாகக்கூடிய நிலையில் நீரிய மண்டலம் இருக்கக்கூடிய புறக்கோள், ஆக்சிசன், மற்றும் கரிமம் இருக்கக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட புறக்கோள், நிறமாலை நேரடியாக அவதானிக்கப்பட்ட முதலிரண்டு இரண்டு புறக்கோள்களில் ஒன்று, சுற்றுவட்ட வேகம் கணிக்கப்பட்ட முதலாவது கோள்,[2] போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். 2007 ஏப்ரல் தகவலின் படி, இதன் வளிமண்டலத்தில் நீராவி இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்பட்டன.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jackson, Brian; Richard Greenberg, Rory Barnes (2008). "Tidal Heating of Extra-Solar Planets". Astrophysical Journal 681 (2): 1631. doi:10.1086/587641. Bibcode: 2008ApJ...681.1631J. ; Gregory Laughlin et al. (2005). "ON THE ECCENTRICITY OF HD 209458b". The Astrophysical Journal 629 (2): L121–L124. doi:10.1086/444558. Bibcode: 2005ApJ...629L.121L. 
  2. Ignas A. G. Snellen et al. (2010). "The orbital motion, absolute mass and high-altitude winds of exoplanet HD 209458b". நேச்சர் 465 (7301): 1049–1051. doi:10.1038/nature09111. பப்மெட்:20577209. Bibcode: 2010Natur.465.1049S. 
  3. Water Found in Extrasolar Planet's Atmosphere - Space.com
  4. Signs of water seen on planet outside solar system, by Will Dunham, Reuters, Tue Apr 10, 2007 8:44PM EDT

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
HD 209458 b
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: Sky map 22h 03m 10.8s, +18° 53′ 04″

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_209458_பி&oldid=3545578" இலிருந்து மீள்விக்கப்பட்டது