உள்ளடக்கத்துக்குச் செல்

எசினோ லாரியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசினோ லாரியோ
கம்யூன் டி எசினோ லாரியோ
மேலிருந்து எசினோ லாரியோவின் காட்சி
மேலிருந்து எசினோ லாரியோவின் காட்சி
லெக்கோ மாநிலத்தில் அமைவிடம்
லெக்கோ மாநிலத்தில் அமைவிடம்
நாடுஇத்தாலி
மண்டலம்லோம்பார்டி
மாகாணம்லெக்கோ மாநிலம் (LC)
Frazioniபிகல்லோ, ஓர்டனெல்லா
பரப்பளவு
 • மொத்தம்18.7 km2 (7.2 sq mi)
ஏற்றம்
913 m (2,995 ft)
மக்கள்தொகை
 (சன. 2014)[1]
 • மொத்தம்760
இனம்எசினெசியர்கள்
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
23825
Dialing code0341
பாதுகாவல் புனிதர்சான் விட்டோர் மார்ட்டைர் செட் மாரிடானோ
புனிதர் நாள்மே 8
இணையதளம்Municipal website

எசினோ லாரியோ (Esino Lario) இத்தாலியின் லோம்பார்டி மண்டலத்தில் லெக்கோ மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி (கம்யூன்) ஆகும். இது மிலன் நகருக்கு வடக்கே 60 கிலோமீட்டர்கள் (37 mi) தொலைவிலும் லெக்கோவிற்கு வடகிழக்கில் 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தொலைவிலும் கோமோ ஏரியின் கிழக்குக் கரையிலிருந்து ஏறத்தாழ 4.3 கிலோமீட்டர்கள் (2.7 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. திசம்பர் 31, 2004 நிலவரப்படி எசினோவின் மக்கள்தொகை 772ஆக இருந்தது. இந்த ஊரின் பரப்பளவு 18.7 சதுர கிலோமீட்டர்கள் (7.2 sq mi) ஆகும்.[2] எசினோ லாரியோ நகராட்சியில் பிகல்லோ, ஓர்டனெல்லா நிர்வாகப் பிரிவுகள் அடங்கியுள்ளன.

விக்கிமேனியா 2016 சின்னம்
விக்கிமேனியா 2016 சின்னம்

தொல்லியல் பதிவுகள் இங்குள்ள குடியேற்றத்தின் துவக்க காலத்தை ஆவணப்படுத்தியுள்ளன. எசினோ லாரியோவைச் சுற்றிலும் ஆல்ப்சு மலைத்தொடர் குன்றுகள் சூழ்ந்துள்ளன. இங்கு தொல்லியல் எச்சங்கள், குகைகள் காணப்படுகின்றன; இவற்றில் மொன்கொடேனோவின் குளிர்பெட்டி ( Icebox of Moncodeno) மிகவும் பிரபலமானது.

இந்த ஊரில் ஆண்டுதோறும் நடைபெறும் விக்கிமீடியா மாநாடான விக்கிமேனியா நிகழ்வு சூன், 2016இல் நடைபெற்றது.[3]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. Data from ISTAT—1st January 2014
  2. All demographics and other statistics: Italian statistical institute Istat.
  3. "Clamoroso: Esino Lario Capitale di Wikipedia nel 2016. Battuta Manila!!!" (in Italian). Lecco News. 24 December 2014. http://lecconews.lc/news/clamoroso-esino-lario-capitale-di-wikipedia-nel-2016-battuta-manila-92343/. பார்த்த நாள்: 31 January 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசினோ_லாரியோ&oldid=3702438" இலிருந்து மீள்விக்கப்பட்டது