எகிப்திய புவியியல் அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது | 1901 |
---|---|
அமைவிடம் | மாடி |
வகை | புவியியல் அருங்காட்சியகம் |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
எகிப்திய புவியியல் அருங்காட்சியகம் (Egyptian Geological Museum) என்பது எகிப்தின் கெய்ரோவில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும் . எகிப்திய புவியியல் ஆய்வின் ஒரு பகுதியாக 1904 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இது ஆட்சியாளர் இசுமாயில் பாஷாவின்வழிகாட்டுதலின் கீழ் 1896 இல் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது.[1]
அருங்காட்சியக வரலாறு
[தொகு]இந்த அருங்காட்சியகம் ஆரம்பத்தில் கிரேக்க-உரோமானிய பாணியில் கட்டப்பட்டது. இது கெய்ரோ நகரத்தில் உள்ள பொதுப்பணி அமைச்சின் தோட்டங்களில் அமைந்துள்ளது. இது எகிப்திய அருங்காட்சியகத்தை (எகிப்திய பழங்கால அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது) வடிவமைத்து கட்டிய பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் மார்செல் டர்கனனான் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 3 மீட்டர் (10 அடி) உயரமுள்ள பழங்கால யானையின் தொல்லுயிர் எச்சங்கள்உள்ளடக்கிய, பழங்காலவியல் கண்டுபிடிப்புகளின் புனரமைக்கப்பட்ட புதைபடிவ எலும்புக்கூடுகளுக்கு இடமளிக்கும் வகையில் இந்த கட்டிடத்தில் 4 மீட்டர் (13 அடி) உயரமுள்ள கூரைகளைக் கொண்ட ஒரு கண்காட்சி மண்டபம் இருந்தது.[1] இலண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திலிருந்த பழங்காலவியலாளர் வில்லியம் ஆண்ட்ரூஸ் என்பவர் 1904 ஆம் ஆண்டில் இதன் முதல் காப்பாளாராக இருந்தார். அவரைத் தொடர்ந்து 1906 இல் ஹென்றி ஆஸ்போர்ன் என்பவர் பணியாற்றினார்.[2]
அசல் அருங்காட்சியகம் 1968 ஆம் ஆண்டில் பாறையியல் மற்றும் தொல்லுயிரியலுக்கான அருங்காட்சியகத்தின் ஆய்வகங்களை அமைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இணைப்பைக் கட்டியது.[1] பெருநகர கெய்ரோவை நிர்மாணிப்பதற்காக அசல் கட்டிடம் இடிக்கப்பட்டு 1982 வரை இந்த அருங்காட்சியகம் கெய்ரோ நகரத்தில் இருந்தது.
தற்போதைய அருங்காட்சியகம்
[தொகு]இந்த அருங்காட்சியகம் கெய்ரோவின் தெற்கு புறநகர்ப் பகுதியான மாடிக்கு அருகிலுள்ள தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.
1898 ஆம் ஆண்டில் பயோம் பாலைவனத்தில் உள்ள பிர்கெட் கரூனின் வடக்கே காஸ்ர் அல்-சாகாவில் புவியியலாளர் ஹக் பீட்னெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட தொடர்ச்சியான புதைபடிவங்களின் முதுகெலும்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1] இந்த கலைப்பொருட்கள் அடையாளம் காண பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த அருங்காட்சியகத்தில் எகிப்தின் இயற்கை வரலாறு மற்றும் அதன் புவியியல் மற்றும் தாதுக்கள் எகிப்தை உலக சக்தியாக மாற்ற உதவியது என்பதற்கான எடுத்துக்காட்டுகளும் உள்ளன.[2]
குறிப்பிட்ட கண்காட்சிகளின் கலாச்சார மற்றும் விஞ்ஞான ஆர்வத்தைப் பற்றி விவாதிக்க அருங்காட்சியகம் வாராந்திர பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது.
திறந்திருக்கும் நேரம்
[தொகு]இந்த அருங்காட்சியகம் வெள்ளி மற்றும் தேசிய விடுமுறைகள் உட்பட ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தை ++ 02 25240916 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Kamil, Jill. "History in geological time" பரணிடப்பட்டது 2008-09-21 at the வந்தவழி இயந்திரம், Al-Ahram Weekly, October 7, 2004. Accessed October 3, 2008.
- ↑ 2.0 2.1 Egyptian Geological Museum, TourEgypt.net. Accessed October 3, 2008.
- <3> Geology, published online on 5 January 2011 as எஆசு:10.1130/G31624.1
- <4> www.sciencemag.org/cgi/content/full/science.1190990/DC1