உள்ளடக்கத்துக்குச் செல்

பாறையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாறையியல் (Petrology) என்பது நிலவியலின் ஒரு பகுதியாகும். இது பாறைகள், அவை உருவாவதற்கான நிலைமைகள் போன்றவற்றை ஆராயும் ஒரு துறை. தீப்பாறை, உருமாறிய பாறை, படிவுப் பாறை ஆகிய பாறைகளின் அடிப்படையில் பாறையியல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கனிமவியல், ஒளியியற் கனிமவியல் மற்றும் வேதியியற் பகுப்பாய்வு முறைகளைப் பாறையியல் தனது தேவைக்குப் பயன்படுத்துகிறது. தற்காலப் பாறையியலாளர்கள், நிலவேதியியல் முறைகள் முதலியவற்றுடன், வெப்ப இயக்கவியற் தரவுகள், சோதனைகள் முதலியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். புவியின் பாறைகளை ஆராய்வதன் மூலம் புவியின் தோற்றம் பற்றிய வரலற்றுச் சுவடுகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது பாறை அடுக்குகளின் அமைப்பு, காலம் மற்றும் கூட்டுப்பொருள் ஆகியவற்றைக் கொண்டு எண்ணெய்ப் படிவுகளைக் கண்டறிகிறார்கள். தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பாறைப் படிமங்களைக் கொண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்திருந்த உயிரின வகைகளைப் பற்றி ஆராய்கிறார்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறையியல்&oldid=2741121" இலிருந்து மீள்விக்கப்பட்டது