எகிப்தின் உசேன் கமால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசேன் கமால்
எகிப்தின் சுல்தான்
ஆட்சி19 திசம்பர் 1914 – 9 அக்டோபர் 1917
முன்னிருந்தவர்இரண்டாம் அப்பாசு இல்மி
பின்வந்தவர்முதலாம் புவாது
பிரதம மந்திரிஉசேன் ரோஷி பாஷா
அரச குலம்முகமது அலி வம்சம்
தந்தைஇசுமாயில் பாஷா
தாய்நூர்பெளெக் காதின்
பிறப்புநவம்பர் 21, 1853(1853-11-21)
கெய்ரோ,எகிப்து, உதுமானியப் பேரரசு
இறப்பு9 அக்டோபர் 1917(1917-10-09) (அகவை 63)
கெய்ரோ, எகிப்திய சுல்தானகம்
அடக்கம்அல்-ரிபா பள்ளிவாசல், கெய்ரோ, எகிப்து

சுல்தான் உசேன் கமால் (Sultan Hussein Kamel) (நவம்பர் 1853 – 9 அக்டோபர் 1917) இவர் 1914 டிசம்பர் 19 முதல் 1917 அக்டோபர் 9 வரை எகிப்து மீதான பிரித்தானிய பாதுகாப்பின் போது.சுல்தானாக இருந்தார். எகிப்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 1517 ஆம் ஆண்டில் உதுமானியர்களால் இரண்டாம் சுல்தான் துமன் கொல்லப்பட்ட பின்னர் எகிப்தின் சுல்தான் என்ற பட்டத்தை வகித்த முதல் நபர் இவர்தான்.

இவர் 1863 முதல் 1879 வரை எகிப்தை ஆண்ட இசுமாயில் பாஷா என்பவரின் இரண்டாவது மகனாவார். 1914 திசம்பர் 19 அன்று எகிப்தை ஆக்கிரமித்த பிரித்தானியப் படைகள் இவரது மருமகன் இரண்டாம் அப்பாஸ் இல்மியை 5 நவம்பர் 1914 அன்று பதவி நீக்கம் செய்த பின்னர் இவர் 1914 திசம்பர் 19 அன்று எகிப்தின் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். உதுமானியர்களுக்கு முந்தைய எகிப்திய சுல்தானின் மறு நிறுவனமாக இருந்தாலும், புதிதாக உருவாக்கப்பட்ட எகிப்தின் சுல்தானகம் பிரித்தானியர்களின் பாதுகாவலில் இருந்தது. திறமையான அரசியல் மற்றும் இராணுவ அதிகாரம் பிரித்தானிய அதிகாரிகளிடம் இருந்தது. இது 1805 இல் முகமது அலி அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து பெருமளவில் பெயரளவிலான எகிப்து மீதான உதுமானியர்களின் சட்டப்படியான இறையாண்மையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கெய்ரோவிலுள்ள அல்-ரிஃபாய் பள்ளிவாசலில் சுல்தான் உசேன் கமாலின் கல்லறை

இவரது மரணத்தின் பின்னர், இவரது ஒரே மகன் இளவரசர் கமல் அல்-தின் உசேன் தனது வாரிசுரிமைய மறுத்துவிட்டார். அதனால் இவரது சகோதரர் புவாத்து அரியணையில் ஏறினார். [1]

கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அரிய புத்தகங்கள் மற்றும் சிறப்பு சேகரிப்புகள் டிஜிட்டல் நூலகத்தில் சுல்தான் உசேனின் முடிசூட்டு ஊர்வலம் மற்றும் அடக்கம் ஊர்வலத்தின் ஸ்டீரியோஸ்கோப் புகைப்படங்கள் கிடைக்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. Naguib Mahfouz, Palace Walk (Anchor Books, 1991), p. 12

வெளி இணைப்புகள்[தொகு]

Stereoscopes of Hussein Kamel's coronation and burial processions