உருக்சானா பர்வீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருக்சானா பர்வீன்
Rukhsana Parveen
தனிநபர் தகவல்
முழு பெயர்உருக்சானா பர்வீன்
தேசியம்பாக்கித்தானியர்
பிறப்புமே 5, 1992 (1992-05-05) (அகவை 31)
பாக்கித்தான்
உயரம்1.62 m (5 அடி 4 அங்)
எடை64 கி.கி
விளையாட்டு
விளையாட்டுகுத்துசண்டை

உருக்சானா பர்வீன் (Rukhsana Parveen) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவார். [1][2] 1992 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உருக்சானா பெர்வீன் என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். 2016 ஆம் ஆண்டில், இந்தியாவின் குவகாத்தி நகரத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றபோது, பன்னாட்டு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாக்கித்தானின் முதல் பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். இப்போட்டியில் இவருடன் மேலும் இரண்டு பாக்கித்தானிய பெண்கள் இடம்பெற்றிருந்தனர். [3] பாக்கித்தானிலிருந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் பெண்கள் அணி என்ற சிறப்புக்கும் இவர்களுக்கு உண்டு.

தொழில் வாழ்க்கை[தொகு]

இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தைப் பார்த்த பிறகு குத்துச்சண்டையில் ஈடுபடத் தூண்டப்பட்டதாக பர்வீன் கூறியுள்ளார்.[4] 2015 ஆம் ஆண்டில் குத்துச்சண்டை விளையாட்டை இவர் விளையாடத் தொடங்கினார், இந்தியாவின் குவகாத்தி நகரத்தில் நடைபெற்ற 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு எட்டு மாதங்கள் மட்டுமே நௌமான் கரீம் இவருக்கு குத்துச்சண்டை பயிற்சியளித்தார்.[1][4]

தேசியப் போட்டிகள்[தொகு]

2018 ஆம் ஆண்டில் லாகூரில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டியின் இலகுரக பிரிவில் பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்தி பர்வீன் தங்கம் வென்றார்.[5]

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

பர்வீன் செக்னாசு கமல் என்பவரால் பயிற்றுவிக்கப்பட்டார். கௌசுலீம் பானோ மற்றும் சோபியா இயாவேத்து ஆகியோரும் பாக்கித்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பால் வழிகாட்டப்பட்டு இந்தியாவின் குவகாத்தியில் நடைபெற்ற 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அணியில் சேர்க்கப்பட்டனர். [6] பர்வீன் 60 கிலோ எடை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி வெண்கலப் பதக்கம் வென்றார்.[7] இந்த பதக்கத்துடன், குத்துச்சண்டையில் பன்னாட்டு பதக்கம் வென்ற இரண்டாவது பாக்கித்தானியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றார். சோபியா இயாவேத்து முன்னதாக பதக்கம் பெற்ற முதலாவது பெண்ணாகத் திகழ்ந்தார். நேபாளத்தின் காத்மாண்டு நகரத்தில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பர்வீன் மற்றொரு வெண்கலப் பதக்கம் வென்றார். ஆனால் இந்த முறை 64 கிலோ பிரிவில் பங்கேற்றார்.[8] 

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

இந்தோனேசியா நாட்டின் இயாகர்த்தா நகரத்தில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராவதற்காக, பர்வீன் மற்ற ஐந்து பெண்களுடன் தலைநகர் இசுலாமாபாத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றார். [9] பின்னர் இரசியா பானோவும் இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கண்டம் அளவிலான போட்டிகளில் போட்டியிடும் பாக்கித்தானின் முதல் அணியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது கூடுதல் சிறப்பாகும். அங்கு இவர் 60 கிலோ பிரிவில் பங்கேற்றார்.[10][11][12][13]  16 ஆவது சுற்றில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பவித்ரா என்பவரிடம் தோல்வியடைந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biography, Olympic Council of Asia". www.ocagames.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
  2. 2.0 2.1 "Asian Games: Boxer Pavitra beats Pakistan's Rukhsana Parveen to make it to quarters". Mumbai Mirror (in ஆங்கிலம்). August 25, 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
  3. "Pakistan to hold first-ever women boxing championship". www.pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
  4. 4.0 4.1 "Pak women pugilists inspired by Mary Kom". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
  5. "Punjab dominate National Women Boxing". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
  6. "Women boxers warm up for Pakistan's Provincial Games". Arab News (in ஆங்கிலம்). 2018-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
  7. 12th SAF Games - Results Punjab Sports Board. Retrieved 14 November 2020
  8. "Boxing". South Asian Games Nepal 2019 (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
  9. "Training camp of women boxers underway in Islamabad". www.radio.gov.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
  10. "PBF announces eight members boxing team for Asian Games 2018". ARYSports.tv. 2018-08-10. பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
  11. "Pakistan's women boxing team will be done a historical debut in the upcoming Asian Games". ASBCNews (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
  12. "Olympic Council of Asia". www.ocagames.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
  13. "Asian Games: Rukhsana, Razia named in boxing team". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருக்சானா_பர்வீன்&oldid=3932334" இலிருந்து மீள்விக்கப்பட்டது