உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம் இது இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் , இராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை வட்டம் உப்பூர் எனும் ஊரில் அமைந்துள்ள இந்து சைவ வழிபாட்டுத்தலமான விநாயகர் கோயில்.

பெயர் காரணம்[தொகு]

தட்சன், தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான். சிவபெருமானைத் தவிர அனைத்து தேவதைகளையும் அழைத்து யாகத்தை நடத்தினான். இந்த யாகத்தில் கலந்துகொண்டதால், சூரியனுக்கு தண்டனை கிடைத்தது. தன் தவறுக்கு பரிகாரம் தேட முற்பட்ட சூரியன், வன்னி மந்தார வனத்தில் தவமிருந்தார். சூரியன் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவர் பாவம் போக்க அருளினார். தனது ஒளிக்கிரணங்கள் விநாயகப் பெருமான் மீது பட்டு, தான் வணங்க அதை ஏற்குமாறு கோரினார். அவ்வாறே அருளினார் விநாயகர். அதன்படி, தட்சிணாயன, உத்தராயன காலங்களில் தெற்கு மற்றும் வடக்குப் புறமாக இவர் மீது சூரிய ஒளி படுகிறது. இதனால் இவருக்கு வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தல புராணம்.[1]

மணக்கோல விநாயகர்[தொகு]

பிரம்மசாரியாகக் கொண்டாடப்படும் விநாயகப் பெருமானுக்கு திருமணம் நடைபெறும் தலமாக வட இந்தியாவிற்கு அடுத்து தமிழகத்தில் உப்பூரில் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]