உப்பளம் (உப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உப்பளம், சமையலுக்கான உப்பு தயாரிக்கும் களமாகும். களம் எனும் பாத்திகளில் கடல் நீரை அடைத்து சூரிய ஒளியில் நன்கு நீர் ஆவியாகி போகுமளவுக்கு காய்ச்சி எடுத்தால் சோடியம் குளோரைடு எனும் சமையல் உப்பு கிடைக்கும். இந்தியாவில் உப்பளத்தொழிலில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் உப்பின் தேவையில் 12% தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள உப்பளங்களிலிருந்து உப்பு அறுவடை செய்யப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் உப்பளம்[தொகு]

தமிழகத்தில் உப்பின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் தொ. பரமசிவன், உப்பு விளையும் களத்துக்கு அளம் என்றும், "உப்பு விற்பவர்களை சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைத்தனர் என்றும், பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியுள்ளனர் என்றும் குறித்துள்ளார். உப்பளங்களுக்கு பேரளம், கோவளம் (கோ அளம்) போன்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பளம்_(உப்பு)&oldid=3619050" இலிருந்து மீள்விக்கப்பட்டது