உபுண்டு அல்டிமேட் பதிப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உபுண்டு அல்டிமேட் பதிப்பு | |
இயங்குதளக் குடும்பம் |
குனூ/லினக்சு |
---|---|
பிந்தைய நிலையான பதிப்பு | 3.5 / 3 சனவரி 2013 |
நிலைநிறுத்தப்பட்ட இயங்குதளம் |
32 இருமம், 64 இருமம் |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
வலைத்தளம் | http://ultimateedition.info/ |
உபுண்டு அல்டிமேட் பதிப்பு என்பது, குனூ/லினக்சு இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். டெபியன் இனை அடிப்படையாகக்கொண்டது. இவ்வியங்குதளத்தின் நோக்கம், புதிய லினக்சு பயனர்களுக்காக பயன்பாட்டினை அதிகப்படுத்தியும், மேம்பட்ட பயனர்களுக்குத் தேவையான கருவிகள் அதிகப்படியான கருவிகளை கொண்டுள்ளதுமாகும். அல்டிமேட் பதிப்பில் எல்லா வகையான வன்பொருளுக்கு அதிகப்படியான ஆதரவு, கம்பியில்லா சேவைகளுக்கான ஆதரவு என லினக்சு இயங்குதளத்தில் இல்லாத சில விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]தீமாஹ்ன்(TheeMahn) என்பவரால் அல்டிமேட் 1.1. உருவாக்கப்பட்டது. 2006 -ம் ஆண்டு கிறித்துமசுக் காலத்தில் உருவாக்கப்பட்ட இவ்வியங்குதளம் பெரும் வரவேற்பு பெற்றது. இவ்வியங்குதளத்தில் எம்பி3 உள்ளிட்ட பல்லூடக கோப்புகளுக்குத் தேவையான கோடக்குகளை கொண்டு வெளியாது. அல்டிமேட் 1.2 பதிப்பு இரட்டை செயலி உடைய கணிகளுக்காவும், விளையாட்டுகளுக்கா புதிய பதிப்பும் வெளியானது.
அக்டோபர் 18, 2007-ம் ஆண்டு, தீமாஸ்னுக்கு கனோனிகல் நிறுவன்த்திடமிருந்து உபுண்டு இலச்சினையை பயன்படுத்துவதை நிறுத்தக்கூறி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதன்பிறகு உபுண்டு அல்டிமேட் தனித்துவத்துடன் உருவானது.
பணிமேடை
[தொகு]உபுண்டு அல்டிமேட்டானது குனோம் பணிமேடைச் சூழலில் வருகிறது, ஆனால் சிறப்பு வெளியீடுகளான கேடீஇ, எக்ஸ்எஃப்சிஇ (KDE, XFCE) ஆகிய பணிமேடை சூழல்களையும் உள்நுழையும் முன் தேர்வுசெய்ய முடியும்.
அம்சங்களும் கருவிகளும்
[தொகு]- புதிய லினக்சு பயனர்களுக்காக பயன்பாட்டினை அதிகப்படுத்தி உள்ளது.
- மேம்பட்ட பயனர்களுக்காக பல கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது.
- அல்டிமேட் பதிப்பானது, அனைத்து மென்பொருள்களின் இற்றைப்படுத்தப்பட்ட பதிப்புடன் வருகிறது.
- ஜிடிஎம் மேக்கர் என்ற கருப்பொருள்களுக்கான நிரல் (Theme Script) எழுதும் மென்பொருள் உள்ளது.
- யுஸ்ப்லேஷ் மேக்கர் என்ற நவுட்டிலஸ் நிரல்(Nautilus script) மூலமாகவும் கருப்பொருள்(Theme) உருவாக்க முடியும்.
சிறப்பு பதிப்புகள்
[தொகு]அல்டிமேட் பதிப்பு 64இருமம்: 64 - இருமத்தில் உருவாகப்பட்ட செயலிகளுக்காக உருவாக்கப்பட்டது. கேமர்ஸ் பதிப்பு (விளையாடுவதற்காக):விளையாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட இந்த வகை இயங்குதளத்தில் பல்வேறு வகையான ஆட்டங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதில் காப்புரிமை கொண்டு நியாயமான ஆட்டங்களும் அடங்கும். பிற: பழைய அல்டிமேட் பதிப்புகள், பல்வேறு பணிமேடைகளை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் வெளியானது.
உபுண்டு அல்ல
[தொகு]அல்டிமேட் பதிப்பானது, உபுண்டுவுடன் தொடர்புள்ள இயங்குதளமல்ல. இது முற்றிலும் மாறுபட்டது. இதில் பல்லூடக இயக்கிகளுக்கான தனிக் களஞ்சியமுள்ளது, இவற்றில் சில காப்புரிமை கொண்ட மென்பொருள்களும், கட்டற்ற உரிமை பெற முடியாதவைகயாகவும் இருக்கலாம், பயனர்கள் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இது உபுண்டுவின் கொள்கைக்கு மாறானது. அதே போல சில கோடக்குகளை இதில் நிறுவ இயலாது.