டெபியன்
Jump to navigation
Jump to search
Debian GNU/Linux | |
![]() | |
![]() டெபியன் குநோம் 2.14 திரைக்காட்சி | |
இயங்குதளக் குடும்பம் | குனு/லினக்ஸ் |
---|---|
பிந்தைய நிலையான பதிப்பு | 10.0 "buster" / ஜூலை6, 2019 |
மேம்பாட்டு முறை | APT |
Package manager | dpkg |
Supported platforms | i386, x86-64, PowerPC, SPARC, DEC Alpha, ARM, MIPS, HPPA, S390, IA-64 |
கேர்னர்ல் வகை | Monolithic kernel, Linux |
தற்போதைய நிலை | செயல்பாட்டில் |
இணையத்தளம் | http://www.debian.org/index.ta.html |
ஞாலமனைத்திற்குமான இயங்கு தளம் எனும் அடை மொழியுடன் கிடைக்கப் பெறும் கட்டற்ற இயங்கு தளம் டெபியன் ஆகும்.[1] இது நிலைத்த பயன்பாட்டினைத் தரவல்லது எனப் பெயர் பெற்றது. இன்று பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் குனாப்பிக்ஸ், உபுண்டு போன்ற இயங்கு தளங்கள் டெபியனிலிருந்தே தருவிக்கப் பட்டன.
டெபியன் முதலில் 1993ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
குனுவின் கட்டற்ற மென்பொருட்களையும் லினக்ஸ் கருவினையும் ஏனைய கட்டற்ற மென்பொருட்களையும் பயனர்களுக்கு தொகுத்து ஒரு சேரத் தர முற்பட்ட துவக்க கால இயங்கு தளங்களுள் டெபியனும் ஒன்று. பொது நோக்கத்திற்கான மென்பொருள் அறக்கட்டளை இதற்கான ஆதரவினை நல்குகிறது.
டெபியன், லினக்ஸ் மற்றும் FreeBSD கெர்னல்களை அடிப்படையாக கொண்டது. மேலும் 51000 முன் தொகுப்பட்ட மென்பொருள்களை கொண்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கட்டற்ற இணைய தளம் - http://www.debian.org/index.ta.html