உன்னக்காயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்னக்கயா
பரிமாறப்படும் வெப்பநிலைஉணவுக்குப்பின் வழங்கப்படும் இனிப்பு வகை
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிமலபார்
முக்கிய சேர்பொருட்கள்வாழைப்பழம், தேங்காய், நெய், முட்டையின் வெள்ளைக்கரு, ஏலக்காய், சர்க்கரை

உன்னக்காயா ( உன்னக்காய, காய் அடா, உன்னக்கா, மற்றும் காய் பொரிச்சத்து என்றும் அழைக்கப்படுகிறது ) என்பது வாழைப்பழத்தால் செய்யப்பட்ட ஒரு கதிர்க்கோல் வடிவான (Spindle shaped) இனிப்பு வகை ஆகும். [1] இது இந்தியாவின் மலபார் பகுதியில் இருந்து உருவான இனிப்பு வகை ஆகும்.. இது பெரும்பாலும் திருமணங்கள், இப்தார் மற்றும் பிற விழாக்களில் உண்ணப்படுகிறது. [2]

இந்த உணவு செய்ய தேவையான பொருட்கள்: பிசைந்த வாழைப்பழம், வேக வைப்பதற்கு நீராவி ஆகியவை ஆகும். இது இந்தியாவின் கேரளாவில் முக்கிய உணவாகும். வாழைப்பழத்தின் வேகவைக்கப்பட்ட உலர்ந்த கூழ் மாவாக திரட்டப்படுகிறது. இது சப்பாத்தி போல உருட்டப்பட்டு, தட்டையான பஜ்ஜிகளாக செய்யப்படுகிறது. இந்த பஜ்ஜிகளில் இனிப்பு சேர்க்கப்பட்ட முட்டை, தேங்காய் துருவல், கொட்டைகள் (Nuts), உலர் திராட்சை (Raisins) மற்றும் ஏலக்காய், ஆகியவற்றைப் பொதிந்து கதிர்கோல் வடிவத்தில் உருட்டப்பட்ட மாவை தேங்காய் எண்ணெயில் பொறித்து எடுப்பார்கள். இதை சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். இதனுடன் சவ்வரிசியில் செய்த வெள்ளைநிற சுவைச் சாற்றுடன் (Sauce) சேர்த்து பரிமாறுவார்கள்..

பொதிதலில் (Stuffing) பயன்படுத்தப்படும் பொருட்களை மாற்றுவதன் மூலம் புதுமைகள் செய்யப்படுகின்றன. கேரளாவின் சில பகுதிகளில் தேங்காய் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.. எனவே முட்டை, சர்க்கரை மற்றும் கொட்டைகள் மட்டுமே பொதியப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • சட்டி பத்திரி
  • அடைத்த உணவுகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Stark World Kerala. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  2. "Celebrity s Kitchen Unnakai by Samvrutha Sunil - Part 2". bollywoodsargam.com. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னக்காயா&oldid=3422519" இலிருந்து மீள்விக்கப்பட்டது