உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தர பிரதேச மாநிலத்தின் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில், 16 மாநகராட்சிகளுக்கும், 198 நகராட்சிகளுக்கும், 438 நகரப் பஞ்சாயத்துக்களுக்கும் 22, 24 மற்றும் 26 நவம்பர் மாதத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றது[1]

இத்தேர்தலில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். [2]

வாக்குப் பதிவு[தொகு]

22 நவம்பர் 2017 அன்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 52.59 சதவீதம் வாக்குகளும், 24 நவம்பர் 2017 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 49.3 சதவீதம் வாக்குகளும், 26 நவம்பர் 2017 அன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 53 சதவீதம் வாக்குகளும் பதிவானது. வாக்கு எண்ணிக்கை 1 டிசம்பர் 2017 முதல் துவங்கியது.

தேர்தல் முடிவுகள்[தொகு]

மாநகராட்சி தேர்தல் முடிவுகள்[தொகு]

முதலில் 16 மாநகராட்சிளுக்கான மேயர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் 1 டிசம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது. 16 மாநகராட்சிகளில், அயோத்தி, வாரணாசி, கோரக்பூர், காசியாபாத், பரேலி, சகாரன்பூர், ஜான்சி, மதுரா, லக்னோ, கான்பூர் மற்றும் மொராதாபாத் என 14 மாநகராட்சிகளின் மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி அலிகார் மற்றும் மீரட் மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை வென்றுள்ளது.[3][4][5]

நகராட்சி தேர்தல் முடிவுகள்[தொகு]

நகராட்சி தலைவர் தேர்தல் முடிவுகள்[தொகு]

இம்மாநிலத்தின் மொத்தமுள்ள 198 நகராட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி 70 நகராட்சிகளையும், சுயேச்சைகள் 49 நகராட்சிகளையும், சமாஜ்வாதி கட்சி 42 நகராட்சிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 28 நகராட்சிகளையும், இந்திய தேசிய காங்கிரசு கட்சி 9 நகராட்சிகளையும் வென்றுள்ளது. [6]

நகராட்சி உறுப்பினர் தேர்தல் முடிவுகள்[தொகு]

மொத்தமுள்ள 198 நகராட்சிகளில் உள்ள 5,260 வார்டு உறுப்பினர் தேர்தலில், 64.25% வாக்குகள் பெற்ற 3,380 சுயேச்சை உறுப்பினர்களும், 17.53% வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதா கட்சி 922 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.

நகர் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்[தொகு]

தலைவர் பதவிகள்[தொகு]

  • இம்மாநிலத்தின் மொத்தமுள்ள 438 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் சுயேச்சைகள் 41.55% வாக்குகள் பெற்று 178 தலைவர் பதவிகளையும், பாரதிய ஜனதா கட்சி 22.83% வாக்குகள் பெற்று 100 தலைவர் பதவிகளையும், சமாஜ்வாதி கட்சி 18.9% வாக்குகள் பெற்று 83 தலைவர் பதவிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 10.2% வாக்குகள் பெற்று 45 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 3.8% வாக்குகள் பெற்று 17 இடங்களிலும், பிற கட்சிகள் 3.8% வாக்குகள் பெற்று ஒரு இடங்களிலும் வெல்லவில்லை.[7]

உறுப்பினர் பதவிகள்[தொகு]

  • மொத்தமுள்ள 5,433 பஞ்சாயத்து உறுப்பினர்களில் 71.31% வாக்குகள் பெற்று 3,875 சுயேச்சை உறுப்பினர்களும், 12.22% வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதா கட்சி 644 உறுப்பினர்களும், 8.34% வாக்குகள் பெற்ற சமாஜ்வாதி கட்சி 453 உறுப்பினர்களும், 8.34% வாக்குகள் பெற்ற சமாஜ்வாதி கட்சி 218 உறுப்பினர்களும், 4.01% வாக்குகள் பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சி 126 உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Uttar Pradesh civic polls 2017
  2. உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல்
  3. UP Mayor election results 2017: Full list of winners of all municipal corporations, nagar nigams in mayoral poll
  4. UP Civic Polls Results
  5. உ.பி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முதல் இடத்தில் பா.ஜ.க, 2-வது பிஎஸ்பி, 3வது இடத்தில் காங்கிரஸ்
  6. உத்தரப் பிரதேச உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்
  7. UP Civic Polls 2017 Results: Confusion cleared! It’s not BJP who won the maximum seats; data proof here