உதா சராவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலங்கி இல்லாமல் தனது அலுவலகத்தில் உதா சராவி.

உதா சராவி ( Huda Sha'arawi ) அல்லது ஹோதா ஷராவி ) 23 ஜூன் 1879 - 12 டிசம்பர் 1947) ஒரு முன்னோடி எகிப்திய பெண்ணியத் தலைவராவார். இவர் பெண்கள் வாக்குரிமை, தேசியவாதம் ஆகியவைகளுக்காக போராடும் எகிப்திய பெண்ணிய ஒன்றியத்தின் நிறுவனரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் திருமணம்[தொகு]

உதா சராவி , நூர் அல்-உதா முகமது சுல்தான் சராவி எனும் பெயரில் பிரபலமான எகிப்திய சராவி குடும்பத்தைச் சேர்ந்த முகமது சுல்தான் பாஷா சராவி என்பவருக்கு தில் மேல் எகிப்திய நகரமான மின்யாவில் பிறந்தார்.[1] இவரது தந்தை எகிப்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவராக இருந்தார்.[2] இவரது தாயார், இக்பால் அனிம், சர்க்காசியன் வம்சாவளியைச் சேர்ந்தவர். உதா சராவி தனது சகோதரர்களுடன் சேர்ந்தே கல்வி கற்றார். பல மொழிகளில் இலக்கணம் மற்றும் கையெழுத்து போன்ற பல்வேறு பாடங்களைப் படித்தார். இவர் தனது குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் உயர் வர்க்க எகிப்திய சமூகத்துடன் இணைந்து வாழ்ந்தார்.[3] இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இவர் தனது மூத்த உறவினர் அலி சராவியின் பாதுகாப்பில் இருந்தார்.

இவரது தந்தை சுல்தான் தனது குழந்தைகளின் சட்டப்பூர்வ பாதுகாவலராகவும், அவரது தோட்டத்தின் அறங்காவலராகவும் நியமித்திருந்த அலி சராவியை தனது பதின்மூன்று வயதில் உதா சராவி மணந்தார். [4] இவர் கெய்ரோவில் பெண் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டார். மேலும், பயிற்சி பெற்றார். சராவி அரபு மற்றும் பிரஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் கவிதை எழுதினார். பின்னர் தனது ஆரம்பகால வாழ்க்கையை தனது நினைவுக் குறிப்பான மொதக்கேராட்டியில் ("மை மெமோயர்") விவரிது எழுதினார். இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சுருக்கப்பட்டப் பதிப்பாக வெளியிடப்பட்டது. [5]

தேசியவாதம்[தொகு]

1919 ஆம் ஆண்டில் நடந்த எகிப்தியப் புரட்சியானது, பிரிட்டனில் இருந்து எகிப்திய சுதந்திரம் மற்றும் ஆண் தேசியவாதத் தலைவர்களை விடுவிப்பதற்காக பெண்கள் தலைமையில் நடந்த போராட்டமாகும்.[6] சராவி போன்ற பெண் எகிப்திய உயரடுக்கின் உறுப்பினர்கள், மக்கள் எதிர்ப்பாளர்களுக்கு தலைமை தாங்கினர். அதே நேரத்தில் கிராமப்புறங்களில் இருந்து கீழ்-வகுப்பு பெண்களும் ஆண் செயல்பாட்டாளர்களுடன் தெருப் போராட்டங்களுக்கு உதவினர்.[7]

புரட்சியின் போது இவரது கணவர் வாப்து என்ற அரசியல் கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். சராவி தனது கணவருடன் இணைந்து பணிபுரிந்தார். கட்சியின் தொடர்புடைய வாப்த் மகளிர் மத்தியக் குழு, 12 ஜனவரி 1920 இல் நிறுவப்பட்டது போராட்டங்களில் பங்கேற்ற பல பெண்கள் குழுவின் உறுப்பினர்களாகி, சராவியை அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.[8]

1938 இல், எகிப்திய பெண்ணிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கெய்ரோவில் பாலஸ்தீனத்தின் பாதுகாப்பிற்கான கிழக்குப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. மாநாடு பெண்ணிய அக்கறைகளை விட தேசியவாத பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தது.[9]

தனது மேலங்கியை அகற்றும் முன் உதா சராவி

அந்த காலத்தில், எகிப்தில் பெண்கள் வீடு அல்லது அரண்மனைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். பெண்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடுகளை சராவி வெறுத்தார். அதன் விளைவாக பெண்களுக்கு ஆர்வமுள்ள தலைப்புகளில் விரிவுரைகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினார். இது முதன்முறையாக பல பெண்களை அவர்களின் வீடுகளிலிருந்தும் பொது இடங்களுக்கும் கொண்டுவந்தது. மேலும் எகிப்தின் ஏழைப் பெண்களுக்காகப் பணம் திரட்டுவதற்காக பெண்கள் நலச் சங்கத்தை நிறுவ உதவுமாறு சராவி அவர்களைக் கேட்டுக்கொண்டார். 1910 ஆம் ஆண்டில், சராவி பெண்களுக்காக ஒரு பள்ளியைத் திறந்தார். அங்கு இவர் கர்ப்பம், பிரசவம் மற்றும் மகப்பேற்றுக்கு பிறகான சுகாதாரத்தைப் பராமரிப்பது போன்ற நடைமுறை திறன்களைக் காட்டிலும் கல்விப் பாடங்களை கற்பிப்பதில் கவனம் செலுத்தினார். [10]

ஹிஜாப்பை நீக்குதல்[தொகு]

1922 இல் தனது கணவர் இறந்த பிறகு தனது பாரம்பரிய ஹிஜாப் (முக்காடு) அணிவதை நிறுத்த சராவி முடிவு செய்தார். ரோமில் நடந்த 9வது சர்வதேச பெண் வாக்குரிமை கூட்டணி மாநாட்டிலிருந்து திரும்பிய பிறகு, இவர் தனது முக்காடு மற்றும் மேலங்கியை அகற்றினார். இது எகிப்திய பெண்ணிய வரலாற்றில் ஒருமுக்கிய நிகழ்வாகும்.[11] [12] [13] [14] [15] [16]

ஒரு இளம் பெண்ணாக இருந்தபோதும், அலெக்சாந்திரியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நுழைந்து ஆடைகளை வாங்குவதன் மூலம் தனது சுதந்திரத்தை வெளிப்படுத்தினார். இவர் 1909 ஆம் ஆண்டில் முபாரத் முகம்மது அலி என்ற பெண்கள் சமூக சேவை நிறுவனத்தையும், 1914 ஆம் ஆண்டில் அறிவார்ந்த எகிப்திய பெண்களின் சங்கத்தையும் ஏற்பாடு செய்ய உதவினார். [2] 1919 ஆம் ஆண்டு எகிப்தியப் புரட்சியின் போது முதல் பெண்கள் தெரு ஆர்ப்பாட்டத்தை வழிநடத்த இவர் உதவினார். பின்னர், வாப்து கட்சியின் பெண்கள் மத்திய குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது வீட்டில் பெண்களுக்கான வழக்கமான கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். இதிலிருந்து எகிப்திய பெண்ணிய ஒன்றியம் பிறந்தது. இதன் காரணத்தை விளம்பரப்படுத்துவதற்காக 1925 இல் எல் 'எகிப்தினியா என்ற வார இதழை இவர் தொடங்கினார். [17]

நினைவு[தொகு]

23 ஜூன் 2020 அன்று, இவரது 141வது பிறந்தநாளை கேலிச்சித்திரம் மூலம் கூகுள் கொண்டாடியது.[18]

மேற்கோள்கள்[தொகு]

  1. Zénié-Ziegler, Wédad (1988), In Search of Shadows: Conversations with Egyptian Women, Zed Books, p. 112, ISBN 978-0862328078
  2. 2.0 2.1 Shaarawi, Huda (1986). Harem Years: The Memoirs of an Egyptian Feminist. New York: The Feminist Press at The City University of New York. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-935312-70-6. 
  3. Shaarawi, Huda Post Colonial Studies. Retrieved 6 October 2014.
  4. Shaarawi, Huda. Harem Years: The Memoirs of an Egyptian Feminist. Translated and introduced by Margot Badran. New York: The Feminist Press, 1987.
  5. Huda Shaarawi, Harem Years: The Memoirs of an Egyptian Feminist (1879–1924), ed. and trans. by Margot Badran (London: Virago, 1986).
  6. Allam, Nermin (2017). "Women and Egypt's National Struggles". Women and the Egyptian Revolution: Engagement in Activism During the 2011 Arab Uprisings. Cambridge: Cambridge UP: 26–47. doi:10.1017/9781108378468.002. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781108378468. 
  7. Allam, Nermin (2017). "Women and Egypt's National Struggles". Women and the Egyptian Revolution: Engagement and Activism During the 2011 Arab Uprisings: 32. 
  8. Badran, Margot (1995). Feminists, Islam, and Nation. Princeton University Press. பக். 80–81. https://archive.org/details/feministsislamna00badr_353. 
  9. Weber, Charlotte (Winter 2008). "Between Nationalism and Feminism: The Eastern Women's Congresses of 1930 and 1932". Journal of Middle East Women's Studies 4 (1): 100. doi:10.2979/mew.2008.4.1.83. 
  10. Engel, Keri (12 November 2012). "Huda Shaarawi, Egyptian feminist & activist". {{cite web}}: Missing or empty |url= (help)
  11. On This Day She: Putting Women Back Into History One Day at a Time, p. 5
  12. Kristen Golden, Barbara Findlen: Remarkable Women of the Twentieth Century: 100 Portraits of Achievement.Friedman/Fairfax Publishers, 1998
  13. R. Brian Stanfield: The Courage to Lead: Transform Self, Transform Society, p. 151
  14. Emily S. Rosenberg, Jürgen Osterhammel: A World Connecting: 1870–1945, p. 879
  15. Anne Commire, Deborah Klezmer: Women in World History: A Biographical Encyclopedia, p. 577
  16. Ruth Ashby, Deborah Gore Ohrn: Herstory: Women who Changed the World , p. 184
  17. Zeidan, Joseph T. (1995). Arab Women Novelists: The Formative Years and Beyond. SUNY series in Middle Eastern Studies. Albany: State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-2172-4, p. 34.
  18. "Huda Sha'arawi's 141st Birthday".

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hoda Shaarawi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதா_சராவி&oldid=3886955" இலிருந்து மீள்விக்கப்பட்டது