இஸ்லாத்தில் பெண்கள்
The lead section of this article may need to be rewritten. (மே 2019) |
இஸ்லாத்தில் பெண்கள் என்பது இசுலாம் சமயத்தில் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நடைமுறை படுத்துவதாகும். இசுலாம் சமயம் பெண்ணை கண்ணியப்படுத்தி அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியதோடு அடிமைத் தலையிலிருந்து பெண்ணை விடுவித்து சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது .
கல்வி
[தொகு]மனிதனை மனிதனாக வாழவைப்பது கல்வியே. இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய கடமைகளில் ஒன்றாக கல்வி கற்பதை ஆக்கியிருக்கின்றது.
- "கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமையாகும்." (பைஹகி) என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். '(நாங்கள் உங்களை அணும் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (புகாரி-101) பெண்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக மேலேயுள்ள நபி மொழி அமைந்து காணப்படுகின்றது.பெண்கள் கல்வி கற்பது தடையேதும் இல்லை என்பது இதிலிருந்து தெரியவருகிறது. இன்னும் பெண்ணுக்கு மணமுடிக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்ணின் சம்மதம் பெற்றே அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றது. திருமணத்தின் போது ஒரு பெண் தனது கணவனிடம் மஹர் கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளாள்.[1]
மணமுறிவு
[தொகு]- "நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹர்களை" கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்.(அல்குர்ஆன் 4:4)[2]
குலா
[தொகு]தன் கணவனுடன் இயைந்து வாழ முடியாத சூழல் உருவாகும் போது ஒரு பெண் தன் கணவனிடமிருந்து குலா முறையில் மணமுறிவு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. தான் விரும்பாத தனக்கு இயைவு இல்லாத கணவனுடன் காலமெல்லாம் வாழ வேண்டும் என்ற நியதியை இஸ்லாம் விதிக்கவில்லை[3].[4][5][6][7]
சொத்துரிமை
[தொகு]பெண்ணுக்குரிய சொத்துரிமை பற்றி இஸ்லாம் குறிப்பிடுகையில் (இறந்து போன) பெற்றோரோ- நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருள்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும்ஆண்களுக்கும் பாகமுண்டு, அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு.-(அல்குர்ஆன் 4:7) என அல்குர்ஆன் கூறுகின்றது.[8]
எனவே ஒரு பெண் தனது பெற்றோரிடம்,கணவனிடம்,சகோதரர்களிடம் மற்றும் நெருங்கிய உறவினர்களிடமிருந்து வாரிசாக சொத்துக்களைப் பெறத் தகுதியுடையவர்களாகின்றாள். மேலும் சொத்துக்களைத் திரட்டவும், பாதுகாக்கவும், வியாபார முயற்சிகளில் ஈடுபடவும் இஸ்லாம் பெண்ணுக்கு உரிமை வழங்கியிருக்கின்றது.
சமநீதி
[தொகு]ஆண்களிலும், பெண்களிலும் இறை நம்பிக்கை கொண்ட நிலையில் நற்செயல்களை யார் செய்கின்றார்களோ, அவர்கள் அனைவருமே சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் எள்ளளவும் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். - (திருக்குர்ஆன் 4:124) [1][9]
பெண் சிசுவை பாதுகாத்தல்
[தொகு]வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்துவிடாதீர்கள். உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொன்று விடுவது படுபயங்கரமான பாவமாகும்.- (திருக்குர்ஆன்–17:31) [1][10]
பெண்கள் மீது அவதூறு
[தொகு]அப்பாவி பெண்கள் மீது அவதூறு சுமத்திவிட்டு, அதற்கு ஆதாரமாக நான்கு சாட்சிகளை கொண்டு வர முடியாதவர் களுக்கு எண்பது கசையடிகளைக் கொடுங்கள். அதன்பின்பு எக்காலத்திலும் அவர்களுடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம். - (திருக்குர்ஆன் 24:4) [1][11]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 இஸ்லாம் வழங்கும் பெண்கள் உரிமைகள். தினத்தந்தி.
- ↑ திருக்குர்ஆன் 4:4
- ↑ Nasir, Jamal J (2009). The Status of Women Under Islamic Law and Modern Islamic Legislation. Brill. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004172739.
- ↑ Khula
- ↑ முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் ‘குலா’ முறை செல்லும்: கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- ↑ Muslim women can get divorce under personal law, says HC
- ↑ Kerala HC restores Muslim women’s divorce rights
- ↑ திருக்குர்ஆன் 4:7
- ↑ திருக்குர்ஆன் 4:124
- ↑ திருக்குர்ஆன் 17:31
- ↑ திருக்குர்ஆன் 24:4