உதான் அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதான் அறக்கட்டளை என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களால் நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசு சாரா இலாப நோக்கற்ற அமைப்பாகும் .இத்தகையோரால் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் இதுவே முதலாவதாகும்.[1] உடான் அறக்கட்டளை, ஓரினச்சேர்க்கை மற்றும் திருநங்கைகளின் பாலியல் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் சமூக, கல்வி, சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக எச்ஐவி / எய்ட்ஸ் தடுப்பு தொடர்பாக. இந்த நோக்கங்களை நிறைவேற்ற, தேவை உள்ள மக்களுக்கு ஆணுறை விநியோகம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பாலியல் கல்வி,  உளவியல் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற சேவைகளை இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது.[2]

பம்பாய் பொது அறக்கட்டளை சட்டம் [1950] பிரிவு 18 இன் கீழ், மார்ச் 14, 2001 அன்று பொது அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்ட இந்த அறக்கட்டளை, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு  கவனிப்பு, ஆதரவு, சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயின் காரணமாக புலம்பெயர்ந்தோர் உட்பட தேவைப்படும் அனைத்து விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கும் அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதற்கு இந்நிறுவனம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. நோயுற்றோருக்கு மட்டுமல்லாமல் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், திருநங்கைகள் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர்கள் என்பவர்களுக்கு ஆலோசனைகள், தொடர் பராமரிப்புக்களை வழங்குகிறது.[3]

உடான் உள்நாட்டிலுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நன்கொடைகள் மூலம் தாங்கப்பட்டு நடத்தப்படுகிறது. மேலும் எச்ஐவியுடன் வாழும் ஆயிரத்தைநூறுக்கும் அதிகமானோரின் தொடர்புகளைக் கொண்டு பராமரித்து வருகிறது.[1] மும்பை, புனே, தானே மாவட்டம், ராய்காட் மாவட்டம், ஜல்கான், நாசிக் மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் இந்த அறக்கட்டளை அலுவலகங்கள் அமைத்து சேவை புரிந்து வருகிறது..[4]

உதான், அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களின் கூட்டு நிறுவனமான தவிர்க்கப்படும் சமுதாயம்(அவெர்ட் சொசைட்டி) வழங்கிய கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. ஜூன் 2011 இல் இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் (NACO) பயனற்றது என விமர்சிக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.[5]

வரலாறு[தொகு]

உதான் அறக்கட்டளை 1992 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறுவப்பட்டது. ஆனால் 2001 ம் ஆண்டு தான் பதிவுசெய்யப்பட்டது.

மார்ச் 7, 2011 அன்று, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் உதான் அறக்கட்டளையின் செயல்பாடுகளையும், சேவைகளையும் மதிப்பாய்வு செய்தனர்.[6]

மார்ச் 13, 2011 அன்று, உதான் இரண்டு மருத்துவ அவசர ஊர்திகளை குர்தாஸ்பூர் காவல்துறைக்கு நன்கொடையாக வழங்கியது மற்றும் ஊர்திகளை இயக்கம் ஓட்டுநர்களையும், அதன் மருத்துவ பணியாளர்களையும் கூட பணியமர்த்தி பொறுப்பேற்றது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 U.S. Agency for International Development: Directory of Associations of People Living with HIV/Aids, July 2004 பரணிடப்பட்டது 2012-01-27 at the வந்தவழி இயந்திரம், accessed February 19, 2012
  2. Udaan Trust: Objective பரணிடப்பட்டது 2013-10-07 at the வந்தவழி இயந்திரம், accessed February 19, 2012
  3. Staff writer (June 24, 2002). "Udaan: Dedicated to problems of gays". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து மே 9, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120509204822/http://articles.timesofindia.indiatimes.com/2002-06-24/pune/27309516_1_hiv-condoms-counselling. 
  4. Udaan Trust: Projects பரணிடப்பட்டது 2012-03-22 at the வந்தவழி இயந்திரம், accessed February 19, 2012
  5. Sumitra Deb Roy (June 23, 2011). "AIDS work by 8 NGOs in state dubbed failures". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 1, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140201170201/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-23/mumbai/29693946_1_ngos-naco-hiv. 
  6. AVERT: USAID Team Visit, March 7, 2011 பரணிடப்பட்டது 2011-04-26 at the வந்தவழி இயந்திரம், accessed February 19, 2011
  7. . March 14, 2011. http://www.tribuneindia.com/2011/20110314/jal.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதான்_அறக்கட்டளை&oldid=3742576" இலிருந்து மீள்விக்கப்பட்டது