உடல்மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
250 pxlA உடல்மொழி பற்றிய ஆய்வு

உடல்மொழி என்பது சொல்லிலாத் தகவல்தொடர்பு வகையாகும், இது உடலின் நிலை, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் ஆகியவை உள்ளிட்டதாகும். மனிதர்கள் அது போன்ற சைகைகளை விழிப்புணர்வின்றி அனுப்பவும் புரிந்துகொள்ளவும் செய்கின்றனர்.

மனிதர்களின் தகவல்தொடர்பில் 93% உடல்மொழியும் சொல்லல்லாத கூறுகளுமே பங்களிக்கின்றன, மொத்த தகவல்தொடர்பில் 7% மட்டுமே சொற்களாலான தகவல்தொடர்பாக உள்ளது[1] - இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்களின் மூலமாக விளங்கும் 1960 ஆம் ஆண்டு காலத்திய பணித்திட்டத்தை வழங்கியவரான ஆல்பர்ட் மெஹ்ராபியன், இவையே பண்பு நிர்ணயித்தலில் ஏற்பட்ட பிழை எனக் குறிப்பிட்டுள்ளார் [2] (மெஹ்ராபியன் விதிகளின் தவறான புரிதல் என்பதைக் காண்க). பிறர் "புரிந்துகொள்ளும் அர்த்தங்களில் 60 மற்றும் 70 சதவீதத்திற்கிடையே உள்ளவை சொல்லிலா நடத்தைகளினாலேயே புரிந்துகொள்ளப்படுகின்றன" என உறுதியாகக் கூறுகின்றனர்.[3]

உடல்மொழியானது ஒரு மனிதனின் மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் குறிப்புகளை வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு, அது முரட்டுத்தனம், விழிப்புணர்வு, சலிப்பு, தளர்வான நிலை, இன்பம், கேளிக்கை போன்றவற்றையும் இன்னும் பல மனநிலைகளையும் உணர்த்தலாம்.

உடல்மொழியைப் புரிந்துகொள்ளுதல்[தொகு]

மனிதர்களை 'வாசித்தல்' என்னும் உத்தி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, நேர்முகத்தேர்வுகளில் நபர்களை தளர்வாக இருக்க வைக்க உடல்மொழியைப் பிரதிபலிக்கும் முறை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. பிறரது உடல்மொழியைப் பிரதிபலிப்பது என்பது அவர்களைப் பிறர் புரிந்துகொண்டனர் என்பதைக் காட்டுகிறது.

உடல்மொழி சைகைகளுக்கு வெறுமென தகவல்தொடர்பு என்பதைத் தாண்டி வேறு நோக்கமும் இருக்கலாம். இதை இருசாராருமே மனதில் வைத்துக்கொள்வர். சொல்லிலா குறிப்புகளைப் பயன்படுத்தும் போது, அவற்றில் அவர்கள் செலுத்தும் அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். சைகையறிவிப்பவர்கள் தங்கள் சைகைகளின் மூலம் தங்கள் செயல்பாடுகளின் உயிரியல் ரீதியான தோற்றம் எதுவென்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.

உடல் ரீதியான வெளிப்படுத்தல்[தொகு]

கையசைவு, சுட்டுதல், தொடுதல் மற்றும் சாய்ந்த உடல் நிலை (கூன் விழுந்த நிலை) ஆகியவை அனைத்து வகையான சொல்லிலாத் தகவல்தொடர்பு வகைகளாகும். உடல் அசைவு மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு உடலசைவியல் எனப்படுகிறது. மனிதர்கள் பேசும்போது உடலை அசைக்கின்றனர், ஆராய்ச்சிகளின் படி இதனால்[சான்று தேவை] "தகவல்தொடர்பு கடினமானதாக இருக்கும்போது, மன ரீதியான சிரமம் குறைக்கப்படுகிறது" என்பதே அதற்குக் காரணமாகும்.உடல் ரீதியான வெளிப்படுத்தல்கள், அவற்றைப் பயன்படுத்தும் நபரைப் பற்றிய பல விவரங்களை அறியத்தரக்கூடியவை. எடுத்துக்காட்டுக்கு, முகபாவங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளியை அழுத்தமாகக் கூற அல்லது ஒரு செய்தியை வெளிப்படுத்த உதவுகின்றன, உடலின் நிலையானது சலிப்பாக உள்ளதை அல்லது மிகவும் ஆர்வமாக உள்ளதைக் காண்பிக்கலாம், மேலும் தொடுதலானது ஊக்குவிப்பதையோ அல்லது எச்சரிப்பதையோ உணர்த்தலாம்.[4]

 • ஒரு நபர் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டிருப்பது என்பது மிகவும் அடிப்படையானதும் சக்தி வாய்ந்ததுமான உடல்மொழி சைகையாகும். இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட நபர் தனக்கும் பிறருக்கும் இடையே தன்னையறியாமல் ஒரு பெரும் உணர்வு நிலையற்ற வேலியொன்றை சிந்தையில் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அந்த நபரின் கைகளைத் தேய்ப்பதன் மூலம் அல்லது சேர்த்துப் பிடிப்பதன் மூலம் உணரக்கூடிய குளிர்ச்சியையும் அவர் கொண்டுள்ளார் என்பதையும் இதன் மூலம் அறிய முடியும். ஒட்டுமொத்த சூழல் உகந்ததாக இருக்கும்பட்சத்தில், அந்த நபர் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி ஆழமாக சிந்தித்துக் கொண்டுள்ளார் எனவும் உணர்த்துவதாக இருக்கும். ஆனால், தீவிரமான அல்லது சவாலான ஒரு சூழ்நிலையில், ஒரு நபர் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் கொள்ளலாம். குறிப்பாக அந்த நபர் பேசுபவரிடமிருந்து விலகி சாய்ந்திருக்கும்பட்சத்தில் இது அநேகமாக உண்மையாக இருக்கும். கடுமையான அல்லது வெறுமையான முகத் தோற்றமானது பெரும்பாலும் நேரடியான விரோதத்தைக் குறிக்கிறது.
 • தொடர்ந்து கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், அந்த நபர் பேசுபவரின் கருத்துக்கு நேர்மறையாக சிந்திக்கிறார் எனப் பொருள். பேசுபவரின் மேல் அந்த நபருக்கு நம்பிக்கையில்லை, அதனால் 'அவர் மேல் ஒரு கண் வைத்தவாறே இருக்கிறார்' என இதற்கு மற்றொரு அர்த்தமும் கொள்ளலாம். பார்வைத் தொடர்பு குறைவாக இருப்பது எதிர்மறையான தன்மையையே குறிக்கும். மற்றொருபுறம், ஏக்க நோய்கள் உள்ள நபர்கள் பெரும்பாலும் இயல்பாக சிரமமின்றி மற்றவருடன் பார்வைத் தொடர்பு வைத்திருக்க முடியாது. பேசும்போதான பார்வைத் தொடர்பு என்பது பெரும்பாலும் இரண்டாம் நிலையிலுள்ளதும், தவறான பொருளை வழங்குவதாகவும் கூட உள்ளது, ஏனெனில் சிறுவயது முதலே நாம் அவ்வாறு கண்களைப் பார்த்துப் பேசுமாறே பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். ஒரு நபர் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில் கைகட்டி நின்றால், அப்போது அவரது பார்வையானது, அவருக்கு ஏதோ ஒரு விஷயம் தொல்லையளிக்கிறது அதை அவர் சொல்ல நினைக்கிறார் என்று குறிக்கலாம். அல்லது உங்கள் கண்ணை நேராகப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அவர் உங்கள் பேச்சை ஏதோ ஒன்றினைக் கொண்டு புறக்கணிக்கிறார் எனப் பொருளாகும். அவர் நேராக உங்களையே பார்த்துக்கொண்டிருந்தாலும் அவரது கவனம் உங்கள் பேச்சில் இல்லை எனப் புரிந்துகொள்ளலாம். மேலும் ஒரு நபர் இருக்கும் மூன்று விதமான நிலைகளை வெளிப்படுத்தும் தரநிலையான மூன்று விதமான பார்க்கும் விதங்கள் உள்ளன. ஒரு நபர் ஒரு கண்ணிலிருந்தும் பின்னர் மற்றொரு கண்ணிலிருந்தும் பின்னர் நெற்றியை நோக்கியும் பார்த்தால், அவர் அதிகாரம் எடுத்துக்கொள்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம். அதே ஒருவர் ஒரு கண்ணிலிருந்து மற்றொரு கண்ணிற்கும் பின்னர் மூக்கு நோக்கியும் பார்வையைத் திருப்பினால், அது அவர் இரு சாராருக்கும் பெரும்பான்மை பெறாதபடி சிறந்த "நிலை உரையாடல்" என அவர்கள் கருதக்கூடிய ஒரு நிலைக்குச் செல்கிறார் என்பதற்கு அடையாளமாகும். இதில் கடைசியாக ஒரு கண்னிலிருந்து மற்றொரு கண் மற்றும் பின்னர் உதடுகள் நோக்கிப் பார்வையிடுபவரின் உடல்மொழியாகும். இது வலிமையான காதல் உணர்வின் வெளிப்பாடாகும்.
 • வேறொரு புறம் திரும்பி உற்றுப்பார்க்கும் பார்வையானது நம்பிக்கையின்மையைக் குறிப்பதாகும், காதைத் தொடுவது அல்லது தாடையைச் சொறிவது ஆகியவையும் இதையே உணர்த்தும் உடல்மொழிகளாகும். ஒரு நபர் அடுத்தவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரது கவனம் எப்போதும் இங்குமங்கும் அலைந்துகொண்டே இருக்கும், மேலும் நீண்ட நேரத்திற்கு கண்கள் எங்கோ பார்த்துக்கொண்டிருக்கும்.[5]
 • ஒருவருக்கு சலிப்பு உள்ளதை, தலை ஒருபக்கம் சாய்ந்திருப்பதைக் கொண்டோ, கண்கள் பேசுபவரையே நேராகப் பார்க்கையிலோ அல்லது கவனம் குறைவாகத் தென்படுவதைக் கொண்டோ கண்டறியலாம்.தலையைச் சாய்த்து வைத்திருத்தல் என்பது புண்பட்ட கழுத்து அல்லது பார்வைத் தெளிவின்மையைக் குறிக்கலாம், மேலும் கவனம் செலுத்தாத பார்வையானது கவனிப்பவருக்கு பார்வையில் ஏதேனும் கோளாறு இருப்பதைக் குறிக்கலாம்.
 • உடலின் நிலை அல்லது நீடித்த பார்வை ஆகியவை அவரது ஆர்வத்தை உணர்த்தலாம். நிற்பது போன்ற நிலைகளும் முறையாகக் கவனிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.
 • வஞ்சகம் அல்லது ஏதேனும் விஷயத்தை மறைப்பது ஆகியவற்றை பேசும் போது முகத்தைத் தொடுவதைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். அதிகமாக கண்ணடித்தல் (கண்களை மூடித் திறத்தல்) என்பது ஒருவர் பொய் சொல்கிறார் என்பதற்கான அனைவரும் அறிந்த அடையாளமாகும். கண்ணிமை மூடாமல் இருப்பதும் கூட பொய் சொல்வதைக் குறிக்கலாம், மேலும் இது அதிகமாக கண்ணிமை மூடித்திறப்பதை விட நம்பகமான உடல்மொழியாகும் என சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. http://www.timesonline.co.uk/tol/news/uk/article742788.ece

சிலர் (எ.கா. உடல் குறைபாடுள்ளவர்கள், மதி இறுக்கக் குறைபாடு உள்ளவர்கள்) உடல்மொழியைப் பயன்படுத்துவதோ அல்லது புரிந்துகொள்வதோ வேறுபடுகிறது, அல்லது அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவர்களின் உடல் அசைவுகளையும் முகபாவனைகளையும் இயல்பான உடல்மொழிச் சூழலைப் பொறுத்து புரிந்துகொண்டால் (அல்லது அதைச் செய்வதில் தவறினால்), அது தவறான புரிதலுக்கு வழிகோலக்கூடும் (குறிப்பாக பேசும் மொழியைவிட உடல்மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கும்பட்சத்தில்).வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் உடல்மொழிகளை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எடுத்துக்காட்டுகள் பட்டியல்[தொகு]

 • மூட்டுகளில் கை வைத்திருத்தல் : ஆர்வத்தைக் குறிக்கிறது.[6]
 • இடுப்பில் கை வைத்திருத்தல் : பொறுமை இல்லாமையைக் குறிக்கிறது.[6]
 • முதுகுக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : சுயக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது.[6]
 • தலைக்குப் பின்புறம் கை கட்டுதல் : நம்பிக்கையாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது.[6]
 • நாற்காலியின் ஒரு கைப்பிடியின் மேல் ஒரு காலைப் போட்டு உட்கார்தல் : கவனமின்மையைக் குறிக்கிறது.[6]
 • குறிப்பிட்ட திசையில் பாதமும் கால்களும் வைத்திருத்தல் : அவருக்கு அதிகமாக ஆர்வமுள்ள திசையைக் குறிக்கிறது[6]
 • கை கட்டியிருத்தல் : இணங்கிப் போகும் தன்மையைக் குறிக்கிறது.[7]
 • கன்னத்தினை தேய்த்து கொண்டு இருந்தால் : முடிவெடுக்க போகும் தருணத்தை குறிக்கிறது.[8]
 • விரல்களால் தாளம் தட்டினால் : பொறுமையின்மையை குறிக்கிறது.[8]
 • தலையினை அசைக்காமல் உற்று கவனித்தால் : அதிக கவனம் செலுத்துவதை குறிக்கும்.[8]
 • பின் தலையை சொறிந்தால் : நம்பிக்கை குறைகிறது என்று அர்த்தம்.[8]
 • விரல்களை முகம் அருகில் கோர்த்து கொண்டு இருந்தால் : அதிகாரம் செலுத்துவதை குறிக்கும்.[8]

உடல்மொழி என்பது ஒரு வகையான சொல்லிலாத் தகவல்தொடர்பு ஆகும், இதில் தனிப்பட்ட பாணியிலமைந்த உடல் அசைவுகள், உடலின் நிலைகள் மற்றும் மற்றவர்களுக்கு அறிவிக்கும் அடையாளங்களாகப் பயன்படும் உளவியல் குறிப்புகள் ஆகியவை இதில் அடங்கும். மனிதர்கள் சில நேரம் தங்களை அறியாமல் எப்போதுமே சொல்லிலா வகை சைகைகளை வெளிப்படுத்திக்கொண்டு பெற்றுக்கொண்டும் உள்ளனர்.

சொல்லிலாத் தகவல்தொடர்பு என்பது மனிதர்களில் எவ்வளவு மேலோங்கியுள்ளது?[தொகு]

சொல்லிலாத் தகவல்தொடர்பானது நமது மொத்த தகவல்தொடர்பில் 50-65 சதவீதமாக இருக்கிறது, சில ஆராய்ச்சியாளர்கள் 80 சதவீதமாக உள்ளது என முன்வைக்கின்றனர். வெவ்வேறு ஆய்வுகள் வெவ்வேறு அளவை வழங்குகின்றன, மேலும் இன்னும் பல ஆய்வுகள் சொல்லிலாலான பொருள்களை விட முகபாவனை மூலமான தகவல்தொடர்பானது 4.3 மடங்கு அதிகமாக இருப்பதாகக் காட்டுகின்றன, மேலும் இன்னும் சில ஆய்வுகள், மெல்லிய சொல் ரீதியான தகவல்தொடர்பைக் காட்டிலும் தெளிவான முகபாவனை அதிகமாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளதாகக் கண்டறிந்துள்ளன. ஆல்பர்ட் மெஹ்ராபியன், 7%-38%-55% விதியைக் கண்டுபிடித்ததால் பிரபலமடைந்தவராவார், அது தகவல்தொடர்பில் எவ்வளவு பகுதி சொற்கள், குரல் தொனி, மற்றும் உடல்மொழி ஆகியவற்றின் மூலமாக வழங்கப்படுகிறது எனக் குறிப்பிடுவதாக இருப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும், ஒரு நபர் "உன்னிடம் எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை!" என்று கூறுவதைப் போன்ற உணர்வுகள் அல்லது மனோபாவங்களை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளைக் குறித்தே அவர் கூறுகிறார் மக்கள் பொதுவாக, சொல்லப்படும் வார்த்தைகளை விட அதிகமாக குரலின் தொனியையும் உடல்மொழியையுமே கூர்ந்து கவனிப்பார்கள். இந்த சதவீதங்கள் எல்லா தகவல்தொடர்புகளுக்கும் பொருந்தும் என்பது ஒரு பொதுவான தவறான கருத்தாகும்.[9]

உடல்மொழியும் இடைவெளியும்[தொகு]

தனி நபர்களுக்கிடையேயுள்ள இடைவெளி என்பது ஒரு நபர் நமது வழியில் மிக நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் போது நமது மனதில் ஏற்படும் மற்றும் நாம் கற்பனை செய்துகொள்ளக்கூடிய ஒரு உளவியல் "குமிழைக்" குறிக்கும். வட அமெரிக்காவில் தனிநபர்களுக்கிடையேயுள்ள இடைவெளிகளில் நான்கு வெவ்வேறு மண்டலங்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதில் முதல் மண்டலம் தொடும் அளவிற்கு உள்ள மிக நெருக்கமான தொலைவிலிருந்து சுமார் பதினெட்டு அங்குலங்கள் வரையிலான வரம்பு ஆகும். மிக நெருக்கமான தொலைவு என்பது நாம் நமது காதலர்கள், குழந்தைகள், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கென ஒதுக்கி வைத்திருக்கும் தொலைவாகும். இரண்டாம் மண்டலமானது தனிப்பட்ட தொலைவு எனப்படுகிறது, இது கை நீட்டும் போது கை முடியும் இறுதி முனையிலிருந்து தொலைவில் தொடங்குகிறது; இது ஒரு நபரிடமிருந்து பதினெட்டு அங்குலத் தொலைவில் தொடங்கி நான்கு அடி தொலைவில் முடிகிறது. நாம் நண்பர்களுடன் பேசும்போதும், சக நபர்களுடன் அரட்டையடிக்கும் போதும் மற்றும் குழு விவாதங்களின் போதும் இந்தத் தனிப்பட்ட தொலைவைப் பயன்படுத்துகிறோம். நபர்களுக்கிடையேயுள்ள இடைவெளியின் மூன்றாம் மண்டலமானது சமூகத் தொலைவு எனப்படுகிறது, நம்மிடமிருந்து நான்கடி தூரத்தில் தொடங்கி எட்டடியில் முடிவதாகும். இந்த சமூகத் தொலைவு என்பது புதிய நபர்கள், புதிதாக உருவான குழுக்கள் மற்றும் அறிமுகம் குறைவான பழக்கம் ஆகிய சூழல்களுக்குரியது. நான்காவதாக அறியப்படும் தொலைவு பொதுத் தொலைவாகும், இது நம்மிடமிருந்து எட்டடியிலிருந்து மீதமுள்ள அனைத்துத் தொலைவையும் உள்ளடக்கியதாகும். இந்த மண்டலமானது பேச்சாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரால் பயன்படுத்தப்படுகின்றது; முக்கியமாக இந்தப் பொதுத் தொலைவானது அதிக பார்வையாளர்களுக்குரியது.[10]

பாலுறவு ஆர்வமும் உடல்மொழியும்[தொகு]

மக்கள் பொதுவாக பிறரிடமுள்ள பாலுறவு ஆர்வத்தை உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்துவார்கள், இருப்பினும் அதன் துல்லியமான வடிவம், அளவு ஆகியவை கலாச்சாரம், காலம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆர்வத்தை வெளிப்படுத்தும் சில அடையாளங்களில் மிதமிஞ்சிய உடல் அசைவுகள் மற்றும் இயக்கங்கள், எதிரொலித்தல் மற்றும் பிரதிபலித்தல், அறை முழுதும் அளக்கும் பார்வைகள், கால் மேல் கால் போடுதல், மூட்டுகளைக் குறித்தல், முடியைக் கோதுதல் அல்லது தொடுதல், தலை சாய்த்தல், இடுப்பை சுழற்றுதல், மணிக்கட்டைக் காண்பித்தல், ஆடை சரிசெய்தல், சிரித்தல் மற்றும் புன்னகைத்தல், பார்வைத் தொடர்பு, தொடுதல், விளையாட்டாக இருத்தல் மற்றும் நெருக்கமாக இருப்பது ஆகியவை அடங்கும். மனிதர்களும் பாலுறவு உணர்வு எழும்போது, கருவிழி விரிதல் போன்ற உடலியக்கவியல் ரீதியான செய்கைகளின் மூலம் அதை வெளிப்படுத்துகின்றனர்.

தற்செயலாக வெளிப்படும் உடலசைவுகள்[தொகு]

சமீபத்தில், ஊடாடக்கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனித-இயந்திர முறைமையை உருவாக்கப் பயன்மிக்கதாக இருக்கக்கூடிய மனித நடத்தை தொடர்பான தடயக் குறிப்புகளை ஆய்வு செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டப்பட்டது. கண்களைத் தேய்த்தல், தாடையை ஒரு புறம் வைத்துக்கொள்ளுதல், உதட்டைத் தொடுதல், மூக்கு சொறிதல், தலை சொறிதல், விரல் கோர்த்தல் போன்ற தற்செயலான மனித உடலசைவுகள் குறிப்பிட்ட சூழல்களில் பயன்மிக்க விவரங்களைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கல்வி தொடர்புடைய குறிப்பிட்ட சூழல்களுக்கென தனித்தனியாக அவற்றைப் பிரித்தமைக்க சில ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்துள்ளனர்.[11]

குறிப்புகள்[தொகு]

 1. போர்க், ஜான். பாடி கேங்வேஜ்: 7 ஈஸி லெசன்ஸ் டு மாஸ்டர் த சைலண்ட் லேங்வேஜ். ப்ரெண்டிஸ் ஹால் லைஃப், 2008
 2. More or Less. BBC Radio 4. 13:30-14:00.
 3. எங்கில்பெர்க்,இசா என். வொர்க்கிங் இன் குரூப்ஸ்: கம்யூனிகேஷன் ப்ரின்சிபல்ஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ். மை கம்யூனிகேஷன் கிட் சிரியஸ், 2006. பக்கம் 133
 4. எங்கில்பெர்க்,இசா என். வொர்க்கிங் இன் குரூப்ஸ்: கம்யூனிகேஷன் ப்ரின்சிபல்ஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ். மை கம்யூனிகேஷன் கிட் சிரியஸ், 2006. பக்கம் 137
 5. பாடி லேங்வேஜ் பேசிக்ஸ் - டெவலப்மென்ட்
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 மேத்யூ மெக்கே, மார்த்தா டேவிஸ், பேட்ரிக் ஃபேன்னிங் [1983] (1995) மெஸ்ஸேஜஸ்: த கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் புக் , இரண்டாம் பதிப்பு, நியூ ஹார்பிங்கர் பப்ளிகேஷன்ஸ், ISBN 1-57224-592-1, 9781572245921, ப.56-57
 7. டர்னோவ், ஈ. (2005
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 உடல்மொழி கூரும் உண்மைகள்
 9. "த்ரீ எலிமெண்ட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் - அண்ட் சோ கால்ட் "7%-38%-55% ரூல்" - எக்காடெமி". 2020-03-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-11-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 10. எங்கில்பெர்க்,இசா என். வொர்க்கிங் இன் குரூப்ஸ்: கம்யூனிகேஷன் ப்ரின்சிபல்ஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ். மை கம்யூனிகேஷன் கிட் சிரியஸ், 2006. பக்கம் 140-141
 11. அப்பாஸி, ஏ.ஆர்.(2007

மேலும் படிக்க[தொகு]

 • அப்பாஸி, ஏ.ஆர்.(2007) Towards Knowledge-Based Affective Interaction-Situational Interpretation of Affect, அப்துல் ரஹ்மான் அப்பாஸி, டக்கீக்கி யூனோ, மேத்யூ என். டெய்லெய், நிதின் வி. அஃப்ஸல்புர்கர், Proceedings of 2nd International Conference on Affective Computing and Intelligent Interaction, Lisbon, Portugal 12-14 Sep, 2007, லெக்ச்சர் நோட்ஸ் இன் கம்ப்யூட்டர் சையின்ஸ் தொகுதி. 4738, ப. 455–466, Springer-Verlag,2007.
 • ஆர்கில், எம். (1990பாடிலி கம்யூனிகேஷன் (2ஆம் பதிப்பு) . நியூ யார்க்: இனடர்நேஷனல் யுனிவெர்சிட்டி பிரஸ். ISBN 0-8236-0551-5
 • கேஹென், டேவிட். பாடி லாங்வேஜ், வாட் யூ நீட் டு நோ, 2007.
 • க்ரேம்ம்ர் கே. 1990. ஸ்ட்ரேஞ்சர் மீட்: லாட்டர் அண்ட் நாந்வ்ர்பல் சைன்ஸ் ஆஃப் இண்டெரெஸ்ட் இன் ஆப்போசிட் செக்ஸ் என்கவுண்டர்ஸ். ஜர்னல் ஆஃப் நான்வெர்பல் பிஹேவியர் 14: 209-236.
 • ஹால், ஈ.டி. சைலண்ட் லெங்வேஜ். டபுள்டிலே & கோ, நியூ யார்க், 1959.
 • ஹென்லே, என். எம். பாடி பாலிட்டிக்ஸ்: பவர், செக்ஸ் அண்டு நான்வெர்பல் கம்யூனிகேஷன்ஸ். ப்ரெண்டிஸ்-ஹால், 1977.
 • ஹெஸ், ஈ. எச். (1975). த டெல்-டேல் ஐ. நியூ யார்க்: வேன் நோஸ்ட்ரேண்ட்.
 • ஹிக்ஸன் எம். 1985. நான்வெர்பல் கம்யூனிகேஷன். டபிள்யூஎம். சி. ப்ரௌன் கம்பெனி பப்ளிஷர்ஸ்.
 • ஹிண்டே, ஆர்.ஏ. (ed). நான்வெர்பல் கம்யூனிகேஷன். கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பிரஸ், 1997.
 • ஹிர்ஸ்க், எல்.ஆர். அண்ட் எல். பால். 1996. Human male mating strategies: Courtship tactics of the “quality” and “quantity” alternatives. எத்தாலஜி அண்ட் சோஷியோபயாலஜி 17: 55-70.
 • லிவிங்ஸ்டன், Drs. ஷேரன் அண்டு க்ளென் (2004). ஹௌ டு யூஸ் பாடி லேங்வேஜ் . சை டெக் இன்க்.
 • ஆல்பர்ட் மெஹ்ராபியன் அண்ட் ஹிஸ் 7%-38%-55% ரூல்.
 • நியரென்பெர்க் ஜி.ஐ. அண்டு எச்.சி. கேலரோ. 1971ஹௌ டு ரீட் எ பெர்சன் லைக் எ புக் . ஹேவ்தன் புக்ஸ், இன்க்., நியூ யார்க்.
 • ஆலன் பீஸ் பாடி லேங்வேஜ் (ஓவர் 30 இயர்ஸ் ஆஃப் ரிசர்ச்)
 • பீஸ், ஏ. பாடி லேங்வேஜ். ஷெல்டான் ப்ரஸ், லண்டன், 1984.
 • பெர்ப்பெர் டி. 1985. செக்ஸ் சிக்னல்ஸ்: த பயாலஜி ஆஃப் லவ். ISI ப்ரஸ், ஃபிலடெல்ஃபியா.

புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Body language
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்மொழி&oldid=3354581" இருந்து மீள்விக்கப்பட்டது