உள்ளடக்கத்துக்குச் செல்

ஈவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் ஈவு (quotient) (வேர்ச்சொல் இலத்தீன்: quotiens "how many times", ஒலிப்பு: ˈkwoʊʃənt) என்பது வகுத்தலில் கிடைக்கும் விளைவுவாகும்.[1]

எடுத்துக்காட்டாக, 6 ஐ 3 ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு 2. இதில் 6, வகுபடு எண், 3 வகுஎண். ஒரு வகுபடு எண்ணை எத்தனை முறை ஒரு வகுஎண் வகுக்கிறது என்பதை ஈவு குறிக்கிறது. மேலுள்ள எடுத்தக்காட்டில், 6 இல் 3 இருமுறை வகுக்கிறது.

யூக்ளிடிய வகுத்தலில் ஈவு என்பது, இரு முழு எண்களை வகுக்கும்போது கிடைக்கும் விடையின் முழுஎண் பகுதியைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டு:

13 ஐ 5 ஆல் வகுக்கும்போது ஈவு = 2 ; மீதி = 3. (13 = (2 x 5) + 3)

இதனையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈவு&oldid=2747380" இலிருந்து மீள்விக்கப்பட்டது