ஈவா துயர்த்தே கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈவா துயர்த்தே கோப்பை (Copa Eva Duarte) என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்; இது லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்டது. 1940-இல் இப்போட்டி வாகையர் கோப்பை - Copa de Campeones என்ற பெயருடன் இருந்தது; ஆனால், 1945 வரை நடத்தப்படவில்லை. 1945-இல் அர்ஜென்டினாவின் தூதர் எசுப்பானிய இராணுவ அரசுடன் இருந்த நல்லுறவின் சின்னமாக கோபா டி ஓரோ அர்ஜென்டினா ("Copa de Oro Argentina") என்ற கோப்பையை பரிசளித்தார், அதன்பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டன.[1] ஆயினும், இவை அதிகாரபூர்வமான போட்டிகள் அல்ல.

1947-ஆம் ஆண்டில் கோபா ஈவா துயர்த்தே டி பெரோன் ("Copa Eva Duarte de Perón") என்று அதிகாரபூர்வமாக எசுப்பானிய கால்பந்துக் கூட்டமைப்பினால் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; இது ஆண்டுக்கொரு முறை நடத்தப்படும் வண்ணம் செயல்பட்டது. செப்டம்பர்-திசம்பர் மாதங்களுக்கிடையே இப்போட்டி நடத்தப்பட்டது; இறுதிப் போட்டி ஒற்றைப் போட்டியாக நடத்தப்பட்டது. இக்கோப்பையே தற்போதைய எசுப்பானிய உன்னதக் கோப்பைக்கு முன்னோடியாகும்.

ஈவா துயர்த்தே கோப்பைக்கு முன்னோடிகள்[தொகு]

ஆண்டு வாகையர் இரண்டாம் இடம் முடிவு
Copa de Campeones de España 1940 அத்லெடிகோ மாட்ரிட் எசுப்பான்யோல் 10-4 (3–3 / 7-1)
Copa de Oro Argentina 1945 பார்சிலோனா அத்லெடிக் பில்பாஓ 5-4
Copa Presidente FEF 1941-47 அத்லெடிகோ மாட்ரிட் வேலன்சியா

4-0

ஆண்டுவாரியாக ஈவா துயர்த்தே கோப்பை வெற்றியாளர்கள்[தொகு]

ஆண்டு வாகையர் இரண்டாம் இடம் முடிவு
ஈவா துயர்த்தே கோப்பை 1947 ரியல் மாட்ரிட் வேலன்சியா 3–1
ஈவா துயர்த்தே கோப்பை 1948 பார்சிலோனா செவியா 1–0
ஈவா துயர்த்தே கோப்பை 1949 வேலன்சியா பார்சிலோனா 7-4
ஈவா துயர்த்தே கோப்பை 1950 அத்லெடிக் பில்பாஓ அத்லெடிகோ மாட்ரிட் 7–5 (5–5 / 2–0)
ஈவா துயர்த்தே கோப்பை 1951 அத்லெடிகோ மாட்ரிட் பார்சிலோனா 2–0
ஈவா துயர்த்தே கோப்பை 1952 பார்சிலோனா* - -
ஈவா துயர்த்தே கோப்பை 1953 பார்சிலோனா* - -

* 1952 மற்றும் 1953-ஆகிய இரு ஆண்டுகளில் லா லீகா மற்றும் கோபா டெல் ரே ஆகிய இரண்டையும் வென்றதால் பார்சிலோனா அணிக்கு ஈவா துயர்த்தே கோப்பை வழங்கப்பட்டது.

அணிகள் வென்ற ஈவா துயர்த்தே கோப்பைப் பட்டங்கள்[தொகு]

அணி வாகையர் இரண்டாமிடம் வென்ற ஆண்டுகள் தோற்ற ஆண்டுகள்
பார்சிலோனா 4 2 1945, 1948, 1952, 1953 1949, 1951
அத்லெடிகோ மாட்ரிட் 3 1 1940, 1947, 1951 1950
வேலன்சியா 1 1 1949 1947
அத்லெடிக் பில்பாஓ 1 1 1950 1945
ரியல் மாட்ரிட் 1 - 1947 -
செவியா - 1 - 1948
எசுப்பான்யோல் - 1 - 1940

குறிப்புதவி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈவா_துயர்த்தே_கோப்பை&oldid=1620749" இலிருந்து மீள்விக்கப்பட்டது